குருப்பெயர்ச்சி: IND - PAK போர் 18 மாதங்களுக்கு மிக மிக கவனம்.. பிரதமரின் ஜாதகம் சொல்வதென்ன?

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: 2025 ஆண்டில் சனி, குரு, ராகு கேது ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. சனிப்பெயர்ச்சி நடந்து முடிந்துள்ளது. குருப்பெயர்ச்சி வரும் மே 14 ஆம் தேதியும், ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. குருப்பெயர்ச்சி நடைபெறும் இந்த 18 மாதங்களில் உலகில் நிகழப்போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கத்தை மாற்றம். அந்த வகையில் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் தரக்கூடும்.

Guru peyarchi India pakistan

குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது.

குருவுடைய ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மிதுனம் என்பது குருவுக்கு பாதகத்தை கொடுக்கக் கூடியவர். ஜென்மத்தில் மிதுனத்துக்கு குரு வருகிறார். குருவுடைய வீடான மீனத்தில் சனி ஏற்கனவே குடியிருக்கிறார். இப்போது பெயர்ந்திருக்கும் ராகு கும்பத்தில் வரக்கூடிய அமைப்பு. சிம்மத்தில் கேது இருக்கிறார். இதை வைத்து தான் குருப்பெயர்ச்சியின் பலன் கணக்கிடப்படுகிறது.

குருவுக்கு சிறப்பு பார்வையாக 5, 9 ம், சமசப்த பார்வையாக 7 ஆம் பாதம் உள்ளது. குரு பார்வை படக்கூடிய வீடுகளுக்கெல்லாம் விமோசனம் உண்டாகும். அந்த வகையில், துலாம், தனுசு, கும்ப ராசிக்காரர்களுக்கு விமோசனம் கிடைக்கும். குறிப்பாக, துலாம், கும்ப ராசிக்காரர்களுக்கு மொத்த பாவ விமோசனமும் கிடைக்கப் போகிறது.

மிதுனத்தில் குரு இருக்கும் சமயத்திலும், குருவுடைய வீட்டில் சனி இருக்கக்கூடிய காலத்தில் இந்தப் பெயர்ச்சி நடைபெறுகிறது. சனி குருவின் வீட்டில் இருந்தபோது தான் கொரோனா போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டது. மீனத்தில் இருந்தபோது போர், தீவிரவாதம் போன்றவை நடைபெற்றுள்ளது. நமது இந்திய படைகள் கடந்த 7 ஆம் தேதி சுக்கிரனின் நட்சத்திரத்தில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

சுக்கிரன் என்றாலே அசுரனுடைய அமைப்பு. அந்த அசுரனுடைய அமைப்பு அடங்கவே அடங்காது. குரு மிதுனத்துக்கு வரப் போகிறார். இனி என்னென்ன பிரச்சனைகள் உலகில் ஏற்படப் போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ராகு கேது சஞ்சாரம் மற்றும் சூரியன் வீட்டில் கேது இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

18 மாதங்கள் எது உதவி செய்தாலும் சர்ப்ப கிரகங்களான ராகு சனி வீட்டிலும், சூரியன் வீட்டிலும் கேது இருப்பதால் நிம்மதி இல்லாத காலகட்டமாக இருக்கும். தெய்வ வழிபாடுகளில் மூலம் மட்டுமே பிரச்சனையைக் குறைக்க முடியும். அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருந்தால்தான் மனித வாழ்க்கைக்கு நன்மை ஏற்படும்.

உலகிற்கு மிக மோசமான காலகட்டமாக உள்ளது. சனி மீனத்தில் குரு வீட்டில் இருக்கும்போது குரு கேந்திரத்தில் வருகிறார். இதுதான் மிகப்பெரிய சிக்கலே. இந்த காலகட்டத்தில் நாசக்காரர்களுக்கு குரு பகவான் உதவி செய்யும் அமைப்பு உண்டாகும். நோயின் தாக்குதல்களுக்கு மருந்துகள் கிடைக்கும். குரு தன் சொந்த வீட்டைப் பார்ப்பதால் ஆன்மீகமும், தெய்வ கலாச்சாரங்கள் எல்லாம் வளரும்.

குரு ராகுவைப் பார்ப்பதால் புதிய வகை கண்டுபிடிப்புகள் உண்டாகும். குருவின் ஸ்தானம் ராகுவை பார்ப்பதால் மணம், மைன்ஸ், மினரல்ஸ், தங்க சுரங்கம், பெட்ரோலிய சுரங்கம், விவசாயத்தில் புரட்சி போன்றவை உண்டாகும். அண்டை நாடுகளிடையே நல்லுறவு ஏற்பட்டாலும், பாதிப்புகளும் வரும். தங்கத்தின் விலை சரசரவென்று உயரும். பங்குந் சந்தை பெரிய அளவில் வீழ்ச்சி உண்டாகும்.

போர்க் காலத்தில் பங்குச் சந்தையில் வீழ்ச்சி உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. அவரவர் வங்கியில் இருக்கும் பணத்தை எல்லாம் சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. தங்க நகைகளை பெட்டகத்தில் பாதுகாப்பாக வைப்பது நல்லது. போர்கள் முடிவது மாதிரி தெரிந்தாலும் அதனை நம்பாமல் இருப்பது நல்லது. ஒன்றரை வருடத்திற்கு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் தங்கள் முதலீடுகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த சமயத்தில் வேலை போனாலும் வேறு இடத்திற்கு மாறுவதற்கான மனதை பக்குவப்படுத்திக் கொள்வது நல்லது. மிதுனத்தில் இருக்கும் குரு புதன் வீட்டில் இருப்பதால் விவசாயப் புரட்சிகள், விஞ்ஞானத்தின் வளர்ச்சிகள் அபரிமிதமாக இருக்கும்.

இருப்பினும் சனி குருவின் வீட்டில் இருப்பதால் அழிவுகளுடைய சக்திகள் வளரும். மாணவர்களுக்கு புதிய புதிய தொழில்நுட்பங்கள் வளர்ச்சி உண்டாகும். எளிமைப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்கள் கிடைக்கும். ஆசிரியர்களுக்கு நிறைய கல்வித் தகுதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் கொண்டு வரப்படும். கல்விப் பணிகளில் பிரச்சனைகள் ஏற்படக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

வாழ்ந்து முடிந்த குருமார்கள், நவக்கிரகங்களை வழிபடுவது, திருச்செந்தூர் முருகன், ஆலங்குடி குரு ஸ்தலம், தென்குடி திட்டை, ராகவேந்திரர் சுவாமி வழிபாடு, காஞ்சி பெரியவா போன்ற வழிபாடுகள் சந்தோஷத்தையும், அனுகூலத்தையும், நிம்மதியையும் ஏற்படுத்தி தரும்.

சுக்கிரனுடைய நட்சத்திரத்தில் இந்தியா - பாகிஸ்தானுடைய போர் ஆரம்பித்துள்ளது. இந்தப் போர் தொடரும். மீண்டும் நிறைவுபெறும். மீண்டும் தொடங்கும். முடிவுக்கு வரும் என்று சொல்ல முடியாது. இந்தியாவுக்கு பாதிப்பு இருக்காதென்று சொல்லவே முடியாது. இந்த தாக்குதலை முடிவுக்கு வருவது நல்லது. எந்தெந்த நாடுகள் இந்தப் பிரச்சனைக்குள் குதிக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு வேளை மீண்டும் இந்த தாக்குதல் தொடங்கினால் அதன் பாதிப்பு 18 மாதங்களுக்கு ஏற்படும்.

பிரதமர் மோடி விருச்சிக ராசிக்காரர். எதிர் நாட்டினர் ஒரு தாக்குதல் கொடுத்தால் பதிலுக்கு பல தாக்குதல் தொடுக்கும் வாய்ப்புள்ளது. எதிரி நாடுகள் சரியாக இதன் தாக்கத்தை உணர்ந்தால்தான் பிரச்சனை முடிவுக்கு வரும். இல்லையெனில் எதிர் நாட்டுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படும். அதேசமயம் நம் நாட்டுக்கும் பெரிய தாக்குதல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

வரும் 18 மாதங்கள் நம் உளவுத் துறை விழிப்பாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். மீண்டும் தீவிர தாக்குதல், கொடூர தாக்குதல், அணு ஆயுத கிடங்குகள், நெருப்பு எளிதாகப் பற்றாக்கூடிய இடங்கள், தலைவர்களின் உயிர் போன்றவற்றில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆளில்லாத டிரோன்களால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+