குரு வக்ர பெயர்ச்சி பலன் 2023: அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகும் குரு.. 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்
சென்னை: பொன்னவன் குரு பகவான் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்யும் நேரத்தில் சில மாதங்கள் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவானின் வக்ர சஞ்சாரம் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. குரு வக்ர பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாற்றங்களைத் தரப்போகிறது. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்களைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.
குரு பகவான் யார்: வியாழன் குரு பொன்னவன் ஆங்கீரசன் ஜீவன் என வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் தனகாரகன் புத்திரகாரகன் என வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் ஜீவன கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படாது.
கோசாரத்தில் சுற்றி வரும் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் பொழுதும் யோகத்தையே செய்யும். அதே போல கோசார குரு ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களை குரு தொடர்பு கொள்ளும் பொழுது குருபகவானால் நன்மையே நடக்கும்.

மேஷம்: ஜென்ம ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் வக்ரமடைவதால் தொட்டது துலங்கும்.கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இருந்த சூழ்நிலை மாறும். கடந்த காலங்களில் வருமானம் தடை கடுமையான செலவுகள் வீண் விரையம் ஆகியவை கடும் மனக் கஷ்டத்தைக் கொடுத்தது.
குருவின் பார்வை படும் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. வேலை செய்யும் இடத்தில் உயர் பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும், ஆண் பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். வேலைப் பளு காரணமாக சரியான நேரத்தில் உணவு உண்ணாமல்,சரியாக தூக்கமும் இருக்காது எனவே உணவு உறக்கம் இவற்றில் எல்லாம் விழிப்புணர்வுடன் இருங்கள்.
ரிஷபம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் இடமான் விரையம், மோட்சம் வெளிநாட்டு பயணம் சொந்த வீடு தூக்கம் போகம் ஆகிய காரகத்துவங்களை குறிப்பிடும் வீட்டுக்கு வருகிறார். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ ஜோகம் என்ற விதியில் யோகத்தை செய்யும். பொதுவாக மீனம் தனுசுக்கு சுக்கிரன் நன்மை செய்ய மாட்டார் அதே போல துலாம் ரிஷபம் ஆகிய ராசிக்கு குரு நன்மையை செய்யமாட்டார் அப்படி நன்மை செய்யாத கிரகம் மறைந்தால் நன்மையை அதிகமாக எதிர்பார்க்கலாம். குருவின் பார்வை நாலாம் வீட்டை பார்க்கிறது நாலாம் பாவம் சுக ஸ்தானம் என்று பெயர். வீடு மனை தாயார் வாகன சுகம் ஆகியவற்றை பார்ப்பதால் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். கூட்டு தொழில் தொழில் வளர்ச்சி அடையும் வியாபார விஸ்தரிப்பு வெளிநாட்டு பயணம் ஏற்படும் நன்றாக சம்பாதித்து அசையா சொத்துகள் வாங்கும் நேரம். பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலைமாறி கையிருப்பு அதிகமாக சேரும்.
மிதுனம்: லாப ஸ்தானத்தில் வக்ர நிலையில் பயணம் செய்யும் குரு பகவான் தொழில் வியாபாரத்தில் நிறைய லாபத்தை தரப்போகிறார். வேலையில் புரமோசனையும் சம்பள உயர்வையும் தரப்போகிறார். குரு பகவான் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகும் நேரத்தில் 3, 5, 7, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். இளைய சகோதரன் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர்கள். பூர்வபூண்ணிய ஸ்தானம் என்ற 5 ஆம் பாவத்தை பாவாதிபதி குரு பகவான் பார்வையிடுகிறார். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பொறுப்புகள் கூடும் பதவிகள் தேடி வரும் கனவுகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகியும் நிண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை ஊதிய உயர்வு தலைமை பொறுப்பு தேடி வரலாம். களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சிலருக்கு ரத்த வழி சம்பந்தபட்ட உறவில் திருமணம் நடக்கும். சொந்த தொழில் கூட்டு தொழில் லாபம் தரும். குலதெய்வ அனுகிரகம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
கடகம்: தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் வரும் செப்டம்பர் முதல் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகிறார். கோசாரத்தில் அஷ்டமத்து சனி ஆட்டிப்படைக்கிறது. சனியும் வக்ரகதியில் பயணம் செய்யும் காலத்தில் குரு பகவானும் வக்ரமடையப்போகிறார். குரு பகவான் பத்தில் வந்தால் பதவி நாசம் என்பார்கள். பத்தாம் வீட்டில் உள்ள குருவின் பார்வை 2, 4, 6, ஆகிய ஸ்தானத்தை பார்க்கிறார். குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.சொல்லும் செயலும் நிறைவேறும். இது வரை கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றி விடலாம்.பணம் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.மனவருத்தங்களால் பிரிந்த தம்பதியினர் ஓன்று கூடுவார்கள். வர வேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும். புது முயற்சிகள் கை கூடும். வீடு, சொத்து வாகனம் ஆகிய ஸ்தானத்தை பார்ப்பதால் புது வீடு கட்டி குடிபோகலாம். வண்டி வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். அம்மாவிற்கு நீண்ட நாளாக வாட்டி வதைத்த நோய் நொடிகள் நீங்கும். நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும். எதிரிகள் தொல்லை ஒழியும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications