துலாம் ராசிக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் குரு.. 2 வருஷத்துக்கு நீங்கதான் ராஜா.. உங்கள அடிச்சுக்க முடியாது

Subscribe to Oneindia Tamil

குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கத்தை மாற்றும். அந்த வகையில் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் தரக்கூடும்.

Guru peyarchi Thulam

குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள்.

அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் துலாம் ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசிக்கு குரு பகவான் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமரப் போகிறார். இதனால் பொருளாதாரம் மிகப்பெரியளவில் உயர்வடைய போகிறது. வாழ்க்கை மொத்தமாக மாறும் அளவுக்கு ஏற்றம் வரப்போகிறது. உத்யோகம் மற்றும் தொழிலில் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

தொழில்

தொழிலில் லாபம் அற்புதமாக இருக்கும். பூர்விக தொழிலில் ஈடுபட்ட நல்ல பலன்களை பெறுவீர்கள். தொலைதூர தொடர்புகளால் ஆதாயம் உண்டு. வெளிநாடு சம்பந்தப்பட்ட பயணங்கள் நிறைவேறும். கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நல்ல மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு.

சுப காரியம்

பூர்விக சொத்துகளில் இருந்த தடைகள் நீங்கி, சொத்துகள் கைக்கூடி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதோருக்கு திருமணம் ஆவதற்கான வாய்ப்புள்ளது. விவாகரத்து பெற்றவர்களுக்கு மறுமணம் நடைபெறுவதற்கான சூழலும் உள்ளது. குரு பார்வை லக்னத்தில் இருக்கிறது என்றால் இன்னும் அமோகமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம்

கடந்த கால சங்கடங்கள் நீங்கும். திடீர் அதிர்ஷ்டங்களால் மனம் மகிழ்ச்சி அடையும். 3 மற்றும் 5 ஆம் இடங்களை குரு பார்ப்பதால் உங்களின் மதிப்பு, மரியாதை, பெயர், புகழ் அதிகரிக்கும். சாதாரண நபர்கள் கூட பிரபலமாவார்கள். சனி பகவான் மற்றும் ராகு, கேது அமைப்புகளும் நன்றாகவே உள்ளது. பண வரவு திருப்தியாக இருக்கும்.

வெற்றி

எப்படிப் பார்த்தாலும் அடுத்த 2 வருடங்கள் உங்களை யாராலும் அசைக்க முடியாது. இறங்கிய அனைத்து காரியங்களிலும் வெற்றிகள் குவியும். ராஜ யோகத்தை பெறுவீர்கள். பெரிய பிரச்னையாக இருந்தாலும் அதிலிருந்து எளிதில் வெளி வந்துவிடுவீர்கள். சமூகத்தில் உயர் மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சரியான நபர்களால் உங்களுக்கு நல்ல வழிகாட்டல் கிடைக்கும்.

பணம்

பெண்களுக்கும் இந்த காலம் நன்றாக இருக்கும். தடைபட்ட சுப காரியங்கள் நடைபெறும். நீண்ட காலமாக புதிய தொழில் தொடங்கு முயற்சி செய்வோருக்கு இது அருமையான காலம். பழைய பாக்கி வசூலாகும். எதிர்பாராத பண வரவு இருக்கும். பயணங்கள் அதிகரிக்கும். குழந்தைகளால் பெருமை கொள்வீர்கள்.

லாபம்

முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தையில் லாபம் சிறப்பாக இருக்கும். நிலம், வீடு, வண்டி, வாகனம் போன்ற அசையும், அசையா சொத்துகள் வந்து சேரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் சுமை குறையும். சிலருக்கு எதிர்பார்த்தபடி உத்யோகத்தில் நல்ல மாற்றம் இருக்கும்.

கவனம்

உங்கள் அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதேபோல உங்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை வேண்டும். கால் பகுதியிலும் சற்று கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் தரிசனம் செய்வதன் மூலம் தடைகள் நிவர்த்தியாகி சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+