விபரீத ராஜ யோகம்.. குரு வக்ர நிவர்த்தியால் துலாம் ராசிக்கு சூப்பர் பலன்
குரு வக்ர நிவர்த்தி: 2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது, சுக்கிரன், செவ்வாய், புதன் உள்ளிட்ட முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் உள்ளன. அந்த வகையில் பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி நிகழ உள்ளது. இது துலாம் ராசியில் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை இந்தத் தொகுப்பில் காணலாம்.
குரு தற்போது ரிஷப ராசியில் வக்ரமாக வீற்றிருக்கிறார். பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிலையில் இருந்து நிவர்த்தி ஆகி இயல்பு நிலைக்கு திரும்புகிறார். நவ கிரகங்களில் முழு சுப கிரகமாக குரு உள்ளார். குரு தனம், குடும்பம், வாக்கு ஆகியவற்றுக்கு காரகனாக இருக்கிறார். நம் அன்றாட வாழ்க்கையில் குரு பயணிப்பதால் அவரது வக்ர நிவர்த்தி முக்கியத்துவம் வாய்ந்தது.

துலாம் ராசிக்கு குரு எட்டாம் இடத்தில் அமர்ந்துள்ளார். எதையுமே பெரிதாக யோசிக்கும் மனப்பான்மை கொண்டவர்கள் நீங்கள். குரு மூன்று மற்றும் ஆறுக்கு அதிபதி. அவர் எட்டாம் இடத்தில் இருந்தால் விபரீத சக்ரவர்த்தி யோகம். நல்ல அமைப்பாக இருந்தாலும் குரு பலம் இழந்ததால் பலன்கள் கிடைத்திருக்காது. குடும்பம், தனம், வாக்கு ஆகிய மூன்றிலுமே நிறைய சிக்கல்களை எதிர் கொண்டிருப்பீர்கள்.
குரு வக்ர நிவர்த்தி அடைவதால் நல்ல பலன்களை அடைவீர்கள். ஆறுக்கு அதிபதி எட்டில் மறைந்திருப்பது விபரீத ராஜ யோகம். குரு எப்போதும் பார்க்கும் இடத்தை நன்றாக வைத்திருப்பார். அதனால் எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். வேலை தொடர்பான தடைகள் நீங்கி, புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லை என்று கவலைப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கைக்கூடும்.
ரத்தம் தொடர்பான பரிசோதனைகளில் வெற்றி கிடைக்கும். கருத்தரித்தல் தொடர்பான சிகிச்சையில் முன்னேற்றம் இருக்கும். விவசாயத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சட்டம் தொடர்பான வழக்கறிஞர் உள்ளிட்ட பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும். இசை கலை, சினிமா, ஊடகம் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்போருக்கு பெயர், புகழ் உயர்ந்து பிரபலமடைவார்கள்.
கலைஞர்களுக்கு பணம் வரவு திருப்தியாக இருக்கும். தயாரிப்பாளர்களுக்கு தடைபட்ட சினிமாக்கள் வெளியாகும். மொத்தமாக கலைதுறைக்கு எதிர்பார்த்த, எதிர்பாராத அனைத்து பலன்களும் கிடைக்கும். சித்திரை, ஸ்வாதி நட்சத்திரக்காரர்களுக்கு இந்த காலம் நல்ல லாபத்தை கொடுக்கும். பொருளாதாரம் உயரும். பழைய பைசா பாக்கி வசூலாகும்.
தொழிலில் புதிதாக முயற்சி செய்ய நினைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, அனிமேஷன், ஐடி துறை சார்ந்தவர்களுக்கும் இந்த காலம் சிறப்பாக இருக்கும். சகோதரர்களிடம் இருந்த பகை நீங்கி ஒற்றுமை வரும். கடன்கள் குறையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
இந்த காலத்தில் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். சுப விரயம் ஏற்படும். திருமணம் நடக்காதவர்களுக்கு திருமணம் ஆகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தாய் வழி சொத்துகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வீடு, வண்டி ஆகியவற்றிலும் எதிர்பார்த்த படி அமைவதற்கான சூழுல் உள்ளது.
கற்பனை வளத்தை மேம்படுத்தி வாய்ப்புகளை பிரகாசப்படுத்துவார். எழுத்தாளர்களுக்கும் இந்த காலம் நன்றாக இருக்கும். மஞ்சள் கிழங்கை வாங்கி அம்மன் கோயிலுக்கும், சுமங்கலி பெண்களுக்கும் தானமாக வழங்கலாம். இதன் மூலம் உங்களுக்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு பண வரவு சிறப்பாக இருக்கும். திருமணம் நிகழ்வுகளில் கலந்து கொண்டு முடிந்த உதவிகளை செய்வதும் உங்களுக்கு பலனளிக்கும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications