தொட்டதெல்லாம் தூள் பறக்கும்.. உச்சாணியில் அமரும் காலம்.. விருச்சிகம் குரு வக்ர பெயர்ச்சி பலன்
சென்னை: விருச்சிகம் ராசிக்கு குரு பகவானின் வக்ர பெயர்ச்சி காரணமாக என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என்று இங்கே பார்க்கலாம். கடந்த குரு பெயர்ச்சியில் இருந்து இவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்க தொடங்கி உள்ள நிலையில்.. தற்போது குரு வக்ர பெயர்ச்சி மூலம் அவர்கள் வாழ்க்கையில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும்.. நல்ல மற்றும் கெடு பலன்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். கிட்டத்தட்ட 4 மாதங்கள்.. அதாவது பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும். ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைகிறார். அந்த வகையில் விருச்சிக ராசிக்கான பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

குரு பெயர்ச்சி மற்றும் அதன் வக்ர பெயர்ச்சி பொதுவாக பல விதமான மாற்றங்களை பல ராசிகர்களுக்கு ஏற்படுத்தும். சிலருக்கு வாழ்க்கையை அடியோடு மாற்றும் குணம் கொண்டது குரு பெயர்ச்சி.
பலன்கள்: உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுக்காதவர்கள் உடனே கொடுத்துவிடுவார்கள். லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு. பிஸ்னஸ் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு திடீரென 2- 3 மடங்கு சம்பளம் உயரும் வாய்ப்புகளும் கூட உண்டு.
முக்கியமாக இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி, சொத்து வளர்ச்சி கொடுக்கும் குரு பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையை சோதித்து பார்த்து பின்னர் நலன்களை கொடுப்பார்.
உங்களுக்கு தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். இதனால் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம். அகலக்கால் வைக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும். அதனால் உங்களுக்கு பின்வரும் பாதக பலன்கள் ஏற்படும். அப்பாவுடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம்.
வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.
வருமானம் உயராமல் ஒரே வருமானத்தில் பல வருடம் வேலை பார்த்த நிலை இருந்தது. அதீத கடன் இருந்தது. குடும்பத்தில் கஷ்டம் இருந்தது. திருமண உறவில், காதல் உறவில் சிக்கல் இருந்தது. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை என்றாலும் பயம் அதிகம் இருந்தது. எந்த விஷயத்திலும் முடிவு எடுக்க முடியாத மோசமான சூழல் நிலவியது. இதெல்லாம் இந்த குரு பெயர்ச்சியோடு மாற போகிறது.
அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். இரண்டாவது, மூன்றாவது குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் குழந்தை பிறப்பில் சிக்கல்கள் ஏற்படலாம். அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
வீடு வாங்கும் ராசி உள்ளது. நிலம் வாங்கும் ராசியும் இருக்கிறது. நீங்கள் சுப செலவு காரணமாக திருமண செலவுகள், வீடுகள், புதிய வாகனங்களை வாங்கலாம்.
பரிகாரம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யவும்.
-
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications