காசு பணம் துட்டு மணி மணி.. ரிஷப ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. பண மழையில் நீச்சல் அடிக்க போறீங்க
ஜூலை மாத பலன்: 2025 ஆம் ஆண்டிற்கான ஜூலை மாதம் பிறந்துள்ளது. இந்த ஜூலை மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த இடப்பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் ஏற்படுத்தும். அந்த வகையில், ஜூலை மாதத்தில் ரிஷப ராசிக்கு கிரக நிலைகள் எப்படி இருக்கின்றன, அதன் மூலம் கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரிஷப ராசி பலன்
ரிஷப ராசிக்காரர்களுக்கு அனைத்து பாக்கியங்கலும் கிடைக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். இதுவரை நிறைய எதிர்பார்க்காத, தேவையில்லாத செலவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும். ராசிநாதன் சுக்கிரன் உங்கள் ராசியில் வலுப்படுவதால் நல்ல நேரமாக இருக்கும். 2 ம் வீட்டில் முதல் 15 நாட்களுக்கு 3 கிரகங்கள் இணைந்துள்ளன. அலுவல்கள் அதிகரிக்கும்
தைரியம் பிறக்கும்
வேலைப் பளு அதிகரிக்கும். அப்படி அதிகாரத்திலும் உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம், கெளரவம் கிடைக்கும். இதுவரையும் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பண வரவு உண்டாகும் காலகட்டமாக இருக்கும். கையில் பணம் தங்கும் காலகட்டமாக இருக்கும். மனதில் தைரியமும், நம்பிக்கையும் அதிகரிக்கும். என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற அதீத நம்பிக்கை உண்டாகும்.
பண வரவு
ஜூலை மாதத்தின் முதல் 24 நாட்கள் அருமையாக இருக்கும். 24 ஆம் தேதிக்குப் பிறகு எதிர்பாராத பண வரவுகள் வந்து சேரும். சூரியன் 3 ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் படபடப்பு, பதற்றம் போன்றவை உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் ரீதியான சோர்ந்து போகும் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. எந்தவொரு பிரச்சனையும், பாதிப்புகளையும் உங்களை அண்டாது. அந்த அளவுக்கு அற்புதமான கிரக நிலைகள் உள்ளன.
கவனம்
4 ஆம் இடத்துக்கு கேது வரும்போது தாயுடன் சிறு சிறு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உங்கள் வண்டி வாகனங்கள் விஷயத்தில் சிறு சிறு பிரச்சனைகள் உருவாவதற்கான வாய்ப்புள்ளது. ஜூலை முதல் 15 ஆம் தேதி வரை கடன் பிரச்சனை அதிகரிக்கும். கடனை கட்டி முடிப்பது, கடனுக்கான தவணை கொடுப்பது, கிரெடிட் கார்டில் இஎம்ஐ எடுப்பது போன்ற விரையச் செலவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
சூப்பர் வாய்ப்பு
ஜூலை 15 ஆம் தேதிக்குப் பிறகு அருமையான நேரமாக இருக்கும். பாதிப்புகளைத் தந்து வந்த செவ்வாய் கீழே இறங்கிச் செல்வதால் குலதெய்வ கோயிலுக்குச் செல்வது, இஷ்ட தெய்வ வழிபாடு, விநாயகர் கோயிலுக்குச் சென்று வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். இந்த காலகட்டத்தை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் முன்னேறக்கூடிய அமைப்பு உண்டாகும்.
புகழ் உண்டாகும்
பெயர், புகழ், அந்தஸ்து, கெளரவம் உண்டாகும் காலகட்டமாக இருக்கும். அடுத்தடுத்து அனைத்து நல்ல காரியங்களும் நடக்கும். அரசு ஆவணங்கள் நகரும் காலகட்டமாக இருக்கும். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும். திடீர் அதிர்ஷ்டம், புகழ் உண்டாகும். நல்ல மாற்றமும், முன்னேற்றமும் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும்.
மாணவர்கள், வழிபாடு
மாணவர்களுக்கு நண்பர்கள் மூலமாக அனுகூலம் ஏற்படும். படிப்பு விஷயத்தில் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். இளைஞர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். காதல் கைகூடும். திருமண யோகம் உண்டாகும். 2 ஆம் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புள்ளது. வீரராகவப் பெருமாள் வழிபாடு நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படும்.
-
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications