ஜூன் ராசி பலன்: துலாம், விருச்சிகத்துக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. கவனமும் அவசியம்
ஜூன் மாத ராசி பலன்கள்: சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசிக்காரர்கள் எப்போதுமே தரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நிறைய ஏற்றமும், தாழ்வுகளும் இந்த மாதம் உங்களுக்கு இருக்கும். படிப்பு விஷயத்தில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் அதனை பூர்த்தி செய்வீர்கள். வெளிநாட்டுக்குச் செல்லும் யோகம் அதிகளவில் உண்டு. ரிஷபத்தை விட துலாமில் சுக்கிர பகவான் அதிக அளவில் செயல்படுவார் என்பதால் வெளிநாடு யோகம் பூர்த்தியாகும்.
துலாம் ராசி, சுவாதி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் அமோகமான வாழ்க்கையையும், வெற்றியையும் பெறுவார்கள். அவர்கள் வளர வளர பெரும் புகழைப் பெறுவார்கள். உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் யோகம் கூட அவர்களுக்கு உள்ளது. குழந்தை வளர வளர அந்தக் குடும்பமும் வளரும். துலாம் ராசியினர் அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று அங்கிருக்கும் விலங்குகள், பறவைகளுக்கு உணவளிப்பது அற்புதத்தைத் தரும்.
சுவாதி நட்சத்திரக்காரர்களின் பெற்றோர் அருகில் இருக்கும் புற்றுக்கு பால் ஊற்றுவது நல்லது. அதன் அருகில் இருக்கும் அரச மரத்துக்கு குங்குமம் இட்டு வழிபடுவது உங்களுக்கு வரும் பாதிப்புகளில் இருந்து உங்களை பாதுகாக்கும். ஜூன் மாததத்தில் ஏற்றத் தாழ்வுகள் வரும் என்பதால் பொறுமை, நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. நீதிமன்றம், காவல் துறை செல்லும் வாய்ப்பு வந்தால் பொறுமையைக் கடைப்பிடித்தால் அதில் ஜெயம் உண்டாகும்.
இந்த ஜூன் மாதத்தில் துலாம் ராசி, ஸ்வாதி நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தை எல்லா விஷயங்களிலும் ஜெயிக்கும் தன்மையுடையதாகவும், அறிவுக் கூர்மை, பாச உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். ராகுப்பெயர்ச்சியால் அச்சம் வேண்டாம். ஏற்றமும், தாழ்வும் இருந்தாலும் சுபகாரியங்களும், நற்பலன்களும், பொருளாதாரத்தில் ஏற்றமும் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.
விருச்சிக ராசி பலன்
ஜூன் மாதம் விருச்சிக ராசிக்காரர்களக்கு அதிர்ஷ்ட மாதமாக இருக்கும். வர வேண்டிய பணம், சொத்துகள் எல்லாம் உங்களுக்கு வந்து சேரும். கடந்த இரண்டு மாதங்களாக மனம் நோந்து போயிருந்திருப்பீர்கள். உங்களுக்கான நியாயம், தீர்ப்பு, பண வரவுகள் வந்து சேரும். உங்கள் ராசியில் குரு 8 ஆவது இடத்திலும், சுக்கிரன் 6 ஆவது இடத்திலும் பெயர்ச்சியாவதால் உடல் உபாதைகள் வந்து வந்து போகும். ஆனால், சிறு சிறு பிரச்சனைகளே வரும் என்பதால் அச்சப்படத் தேவையில்லை.
உடல் உபாதைகள் சரியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க திருவேற்காட்டில் உள்ள கருமாரியம்மனை தொடர்ந்து வழிபட்டு வந்தால் அற்புதமான மாற்றத்தைக் காண்பீர்கள். சந்திரன் தோஷம் பெற்ற இடத்தில் இருப்பதால் விருச்சிக ராசிக்காரர்கள் திறம்பட செயல்பட்டாலும் சிறு சிறு கோபப்படும் சூழ்நிலை ஏற்படும். கோபம் தணிந்து, அமைதி நிலவ கருமாரியம்மனை வழிபடுவது நல்லது.
வெளிநாட்டுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். காசு, பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. பணப் புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். இனி வரப்போகும் காலகட்டம் உங்களுக்கு அமோகமாக இருக்கும். சிறிது கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். தேவையில்லாத வாக்கு வாதங்கள், பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. பழைய வழக்குகள் அனைத்தும் வெற்றியைக் கொடுக்கும். பல நல்ல விஷயங்களைச் செய்து மகிழ்வீர்கள். அண்ணன், தங்கைக்கு உதவி செய்தால் அற்புதமான பலன்களைப் பெறுவீர்கள்.
-
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications