ஆவணி மாத பலன் 2025: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. அள்ள அள்ள தங்கம்
Aavani matha palan: ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டின் ஆவணி மாதத்தில் கடக ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள், என்னென்ன நன்மைகள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. சூரியனின் இயக்கத்தை வைத்தே தமிழ் மாதங்கள் ஆரம்பமாகின்றன. அதன்படி, தலைமை கிரகமான சூரியன் ஆட்சி என்கிறது உயர்நிலை அமைப்போடு சிம்மத்தில் வலுவாக இருக்கப் போகிறார். இது விசேஷமான அமைப்பாகும். குரு மிதுனத்திலும், சனி மீனத்திலும், சுக்கிரன், புதனின் இயக்கங்கள் கடகத்திலும், சிம்மத்திலும் மாறியிருக்கின்றன.

கன்னியில் செவ்வாய் இருப்பது நல்ல விசேஷமான நிலையாகும். புதனில் குருவும், செவ்வாயும், கடகத்தில் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பது நல்ல அமைப்பாகும். கும்பத்தில் இருக்கும் ராகுவை குரு பார்ப்பது நல்ல மாற்றங்களைத் தரும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கிறது.
இந்த ஆவணி மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு அதிக அளவிலான முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இந்த மாதம் இருக்கும். செவ்வாய் மாதம் முழுவதும் 3 ஆம் மாதத்தில் இருக்கிறார். உங்களின் ராஜயோகாதிபதி. ஜீவனாதிபதி 3 ஆம் இடத்தில் இருப்பது தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பு என அனைத்து விதமான விஷயங்களிலும் வெற்றிகள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.
இனி முன்னேற்றம் ஆரம்பம்
இதுவரைக்கும் இல்லாத வகையிலான முன்னேற்றங்களை இனி தொழிலில் காணும் யோகம் உண்டாகும். தைரியம், தன்னம்பிக்கை, முகத்தில் தேஜஸ் உண்டாகும். காசு, பண வரவுகளுக்கு எந்தவித குறைகளும் இருக்காது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். 2 ஆம் இடத்தில் ஆவணி மாதம் முழுவதும் சூரியன் தனாதிபதி ஆட்சியாக இருப்பது, .3 ஆம் இடத்தில் ராஜயோகாதிபதி கிரகமான செவ்வாய் 3 ஆம் இடத்தில் மாதம் முழுவதும்
இருப்பது பண வரவுகளுக்கு தடையே இல்லாத நிலையை உண்டாக்கும்.
புதிய வேலை, தொழில்
வேலை, தொழில், வியாபாரத்தில் இனி அற்புதமாக இருக்கும். அடுத்தடுத்து வெற்றிகள் வரும் காலகட்டமாக இருக்கும். புதிய வேலைகள் கிடைக்கும். வேலை போனாலும் புதிய வேலை கிடைக்கும். தைரியமாக புதிய தொழிலை தொடங்குவது, தொழிலை மாற்றுவது, புதிய கிளை ஆரம்பிப்பது, புதிய வியாபாரத்தை தொங்குவது, ஏற்கனவே போட்டியாக இருக்கும் வியாபாரிகள் எல்லாம் ஒழியும் காலகட்டமாக இருக்கும்.
பதவி உயர்வு, சம்பள உயர்வு
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். ஜீவன அமைப்புகளில் வலிமையான நல்ல அமைப்புகள் ஏற்படக்கூடிய சுப மாதமாக இந்த மாதமாக இருக்கும். குடும்பம் அமையாதவர்களுக்கு குடும்பம் அமையக்கூடிய சூழல் உண்டாகும். கடந்த 2 ஆண்டுகளாக கணவன், மனைவி பிரச்சனை, பிரிந்து வாழ்பவர்கள், விவகாரத்துக்காக காத்திருப்பவர்கள் என அனைவரும் பிள்ளைகளை நினைத்து, எதிர்காலத்தை நினைத்து மீண்டும் ஒன்றாகக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
குடும்பம்
ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள், தொலைபேசியில் பேசி வாடிக்கையாளரைப் பிடிக்கக் கூடியவர்கள் அனைவருக்கும் இந்த மாதத்தில் இருந்து அதிக அளவிலான சம்பளம், வருமானம் வரக்கூடிய அமைப்பு உண்டாகும். குடும்பம் சிறப்பாக இருக்கும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். வாழ்க்கை துணை இவர் தான் என உறுதி செய்வீர்கள் அல்லது நிச்சயம் செய்வீர்கள். மாற்றம், முன்னேற்றம், மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இந்த ஆவணி மாதம் உங்களுக்கு அமையும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications