Kadagam: அடித்தாடப் போகும் கடக ராசி.. புது வீடு, புது கார் கலக்கப் போறீங்க

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kadagam-rasi-palan-what-kind-of-benefits-that-kadagam-cancer-rasi-will-get-from-december-15-to-21

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம். தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறக்கப் போகிறது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும்.

மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு எல்லா காரியங்களும் ஜெயம் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொலைதூரத்தில் இருந்து யோக பலன்களைப் பெறுவீர்கள். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். தொழில், படிப்பு, உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம் உண்டாகும்.

சொத்துகள் வாங்கும் யோகம்

4 ஆம் இடத்தில் புதன் அமர்ந்திருப்பதால் அற்புதமான நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதாலும், சூரியன், சுக்கிரனும் சேர்ந்திருப்பதால் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கணவனாக இருந்தால் மனைவியிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

ஆரோக்கியம்

முதுகு வலி, காய்ச்சல் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அஷ்டமத்தில் ராகு இருப்பதால் வீடு, மனை, வாகன யோகங்கள் ஏற்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு பெரிய வெற்றிகள் ஏற்படும். சண்டை போட்டு காரியத்தை முடிக்கும் பாக்கியம் உண்டு. நிம்மதியான வாழ்க்கை இருக்காது. பொருளாதாரத்தில் நன்மைகள் ஏற்படும்.

பொறுமை அவசியம்

ராசி லக்னத்தில் இருக்கும் குரு வக்கிரமாக கிளம்பி மிதுனத்துக்குச் சென்றுவிட்டார். ஆரோக்கியத்தில் மிகப்பெரிய விமோர்சனமாக அமையும். இந்த வாரத்தைப் பொருத்தவரை அதிகளவிலான சண்டை, சச்சரவுகள் ஏற்படும். ரத்தபந்த உறவுகளின் மரணம் அல்லது கண்டத்தைப் பார்க்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

பயணங்களில் கவனம்

பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை. வெளியூர் பயணம், வெளிநாடு பயணம், இரவு நேரத்தில் பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. இரவு நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். பொருளாதாரம் ரீதியாக 90 சதவீதமும், சந்தோஷம் 70 சதவீதமும் நன்றாக இருக்கும். சுவாமி மலை முருகர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+