Rasi Palan This Week: கடக ராசியினர் இந்த ஒரு விஷயத்தை தவிர்த்தால் எல்லாவற்றிலும் ஜெயம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 10 முதல் ஐப்பசி 26 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kadagam-rasi-palan-what-kind-of-benefits-that-kadagam-cancer-signs-will-get-from-october-27-to-n

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.

அந்த வகையில், அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடகம்

கடகம் ராசி மற்றும் கடக லக்னத்தினருக்கு இந்த வாரம் மகிழ்ச்சியாக இருக்கும். இழுபறியாக தடைபட்ட காரியங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நடைபெறும். சுப காரிய தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உத்யோகம், தொழிலில் அற்புதமான மாற்றங்கள் நிகழும். சிலர் புதிதாக தொழில் தொடங்குவார்கள்.

சொந்த வீடு

சொந்த வீடு கனவு நனவாகும். வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. சிலர் புதிததாக அரசியலில் இறங்குவீர்கள். ஏற்கனவே அரசியலில் இருப்போருக்கு புதிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும். தாய், தந்தை வழி உறவுகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். பெற்றோரால் ஆதாயம் அடைவீர்கள். அக்கம், பக்கத்தினருடன் இருந்த மோதல்கள் குறைந்து ஒற்றுமை ஏற்படும்.

குழந்தைகள்

குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு, சுப காரியங்கள் ஆகியவற்றில் நல்ல செய்தி கிடைக்கும். குழந்தைகளுடன் இருந்த பிரச்சனைகள் சரியாகும். அதிக உழைப்பு, துரோகம் ஆகியவற்றால் அதிக வலிகள் ஏற்படும் தற்போது. தற்போது யார் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று நீங்கள் நேரடியாக அறிந்து கொள்வீர்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் நேர்மறை சிந்தனையுடன் முன்னேறுங்கள்.

வார்த்தையில் கவனம்

தாய், தந்தையுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்த்துவிடுங்கள். சூரியன் நீட்சமாக இருப்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது அவசியம். யாருடனும் தர்க்கம் செய்வதை தவிருங்கள். யாராவது உங்களை சீண்டினால் கூட அவர்களை புறக்கணித்துவிட்டு வந்துவிடுங்கள். பல், காது, மூக்கு, தொண்டை, சளி தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். சிவன் கோயில் சென்று வழிபடுவது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+