Kadagam: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. அடுத்த 40 நாட்களில் சூப்பர் மாற்றம்
சூரிய கிரகண பலன்: 2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவு 11 மணி 01 நிமிடத்தில் தொடங்கிய சூரிய கிரகணம் 12 மணி 22 நிமிடத்தில் நிறைவடைந்தது. சூரிய கிரகணம் தொடங்கி 40 நாட்களில் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான மாற்றங்கள் நடக்கும். அந்த வகையில், கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
நடப்பு ஆண்டில் சூரிய கிரகணமானது செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவில் உத்திர நட்சத்திரம், சிம்ம ராசியில் ஏற்பட்டுள்ளது. சூரியனும், கேதுவும் இந்த நேரத்தில் இணையக்கூடும். சூரியன் கேது இணையும்போது 3 ராசிகளுக்கு பாதிப்புகள் ஏற்படும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு சற்று அதிகமான பாதிப்புகள் ஏற்படும். இதைத் தவிர சிம்மத்திற்கு முன்னும் பின்னும் இருக்கக்கூடிய ராசிகளான கடகம், கன்னி ஆகிய ராசிகள் என மொத்தம் 5 ராசிகளுக்கு சூரிய கிரகணத்தின் பாதிப்புகள் ஏற்படும்.

அதேபோல, மிதுனம் ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு நிறைய பிரச்சனைகள் தீரும். மீனம், விருச்சிகத்திற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 40 நாட்களுக்குள் நல்ல விஷயங்கள் நடக்கும். அந்த வகையில், வரும் 40 நாட்களுக்கு கடக ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், நன்மைகள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு டாப் கிளாஸ் யோகம் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். யார் உங்களை ஏமாற்றுகிறார்கள், குழப்புகிறார்கள் என்பதைக் கண்டறியும் அற்புதமான காலகட்டமாக இருக்கும். அடுத்த 40 நாட்களுக்கு எல்லா விஷயங்களும் உங்களுக்கு அப்பட்டமாக கண்ணுக்குத் தெரியும். வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து பாடங்களையும் கற்றறியும் காலகட்டம்.
நல்ல நேரம் ஆரம்பம்
உங்களை ஏமாற்றிய நபர்களை மீண்டும் மன்னித்து ஏற்றுக் கொண்டால் தேவையில்லாத பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு பாதிப்புகளையும், சவால்களையும் சந்தித்து வந்திருப்பீர்கள். இந்த சூரிய கிரகண காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பிப்பதால் இதனைப் பயன்படுத்திக் கொள்வது.
தொழில்
சிஸ்டம், சாஃப்ட்வேர், ஐடி, கம்யூனிகேஷன், ஏஐ டெக்னாலஜி, பிராம்ப்ட் இன்ஜினியர்களுக்கு நல்ல நேரமாக இருக்கும். குறிப்பாக மீடியா துறையில் இருப்பவர்களுக்கு அமோகமான மாற்றங்கள் கிடைக்கும். இடமாற்றம் உண்டாகும். வீடு, நிலம் விற்பனையாகாமல் காத்திருப்பவர்களுக்கு விற்கக்கூடிய யோகம் உண்டாகும். நல்ல ஆள் கிடைப்பார்கள். வேறு மொழி பேசுபவர்களால் வீடு, நிலம் விற்கும் யோகம் உண்டாகும்.
முயற்சிகளில் வெற்றி
வேற்று மொழி பேசும் மனிதர்கள் மூலமாக ஆதாயம் ஏற்படும். நல்ல பெயர் வாங்கக்கூடிய பிராப்தம் உண்டாகும். சான்றோர்களால் சான்றிதழ் கொடுக்கக் கூடிய நிலைமை உண்டாகும். இந்த காலகட்டத்தில் நீங்கள் முழித்துக் கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
பதவி
அரசு பதவிகளை அலங்கரிக்கும் யோகம் உண்டு. நல்ல பதவிகள் உங்களைத் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கும் எதிர்பாராத பதவிகள் கிடைக்கும். அடுத்த 40 நாட்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நல்ல விஷயங்களைச் செய்தும் கெட்ட பெயருடன் இருப்பவர்களுக்கு இனி நல்லபடியாக மாறும். பண வரவு அற்புதமாக இருக்கும். உங்களைப் பிரிந்து போன சகோதர, சகோதரிகள் மீண்டும் உங்களைத் தேடி வந்து அன்பு காட்டுவார்கள்.
வழிபாடு, பரிகாரம்
ஆற்றல் அதிகமாக இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்துகள் வரக்கூடிய நேரம் இது. மாமனாரின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கழுத்து, எழும்பு, சுழுக்கு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கம்யூனிகேஷன்களில் தடைபட்டு ஜெயிக்கும் யோகம் உண்டாகும். அருகில் இருக்கும் சிவபெருமான் ஆலயத்துக்குச் சென்று பாகற்காய், பலாப்பழம், செம்பு பாத்திரம், கோதுமையை பிராமணர்களுக்கு தானமாகக் கொடுத்து வழிபட்டு வருவது நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications