Kadagam: கடக ராசிக்கு வைகாசி மாதத்தில் அதிரடி பலன்கள்.. பணவரவு கொட்டும்
Vaikasi Matha Palangal: வைகாசி மாதத்தில் கடக ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா, என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் கடக வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.

சுக்கிரன் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடகத்தில் வந்து அமருகிறார். கேது சிம்ம வீட்டிலும், ராகு கும்ப வீட்டிலும் இருக்கிறார். இந்த கிரக நிலைகள் கடக ராசியினருக்கு என்ன விதமான பலன்களைக் கொடுக்கும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியினருக்கு பெரிய மாற்றங்கள் நிகழக்கூடிய மாதமாக இருக்கும். இடமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் என அனைத்து விதமான நல்ல மாற்றங்களும் ஏற்படும் மாதம். படபடப்பு, முதுகுத் தண்டுவடம், கழிவுப் பாதை தொடர்பான விஷயங்களில் ஒரு வருடத்திற்கு மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
கோபம் வேண்டாம்
எல்லா விஷயங்களும் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது. அதற்காக கோபப்படுவது, வேலையாட்களைத் திட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. கோபத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். எதிரிகளை மிகச் சாதாரணமாக எடை போடுவதை தவிர்ப்பது நல்லது. பொறுமையாக எல்லா விஷயத்தையும் கடைப்பிடிப்பது ஏற்றத்தையும், நன்மையையும் தரும்.
நல்ல காரியம்
பிள்ளைகள் விஷயம், துணை விஷயம், உறவுகள் தொடர்பான விஷயங்கள், பெற்றோர் என அனைத்து விஷயங்களிலும் அற்புதமான ஏற்றங்கள் ஏற்படும் காலகட்டம். யாருக்கு உதவி செய்தாலும் கவனமாக செய்வது நல்லது. இதுவரை இருந்து வந்த சலனங்கள் நீங்கும். அடுத்தடுத்து நல்ல காரியங்கள் நடக்கும். எல்லாவிதமான நன்மைகளும் ஏற்படும்.
விரயம்
மகான்கள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். விரயங்கள் அதிகரிக்கும். இந்த மாதம் உங்களுக்கு பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் காலமாக இருக்கும். வீடு மாற்றம், வேலை தொடர்பான இடமாற்றம் போன்ற விஷயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கடன்
கடுமையாக உழைத்தாலும் அதற்கான பலன் தாமதமாக கிடைப்பதால் மனதில் சிறிய வருத்தம் உருவாகலாம். பணவரவு இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம். எனவே பண விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.
முன்னேற்றம்
உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி நல்லிணக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்துடன் சுற்றுலா அல்லது மகிழ்ச்சியான பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. வேலை மற்றும் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது பொறுப்புகள் அதிகரிக்கலாம். தொழில் செய்பவர்களுக்கு முக்கிய நபர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முன்னேற்றங்கள் காணப்படும்.
வழிபாடு
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகளும் கெளரவமும் கிடைக்கும். பெண்களுக்கு பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். உடல்நலத்தில் மட்டும் சிறிய கவனம் செலுத்துவது நல்லது. இந்த மாதம் துர்க்கை அம்மனை வழிபடுவது மன அமைதியையும் நல்ல பலன்களையும் தரும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications