Rasi Palan This Week: கன்னி ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்டம்.. ரொம்ப கவனம்
Kanni Rasi Palan: மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, பங்குனி 16 ஆம் தேதி முதல் பங்குனி 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)
கன்னி ராசியினருக்கு துணையின் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மூளை, இருதய பாதிப்புகள், ரத்தக் குறைபாடு, கால்சியம் குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. செவ்வாய், சூரியன், சனி இணைவு இருப்பதால் கன்னி ராசியினருக்கு பாதிப்புகள் ஏற்படும். தாயின் உடல்நிலையில் பாதிப்புகள் வரும். இந்த காலகட்டத்தில் பார்ட்னர்ஷிப்பால் செய்யும் தொழிலில் பிரச்சனைகள் கண்டிப்பாக வரும். ஏமாற்றுவது, பணத்தை வாங்கிவிட்டு கொடுக்காமல் இருப்பது போன்ற காலகட்டம் ஏற்படும்.
தடைகள் வரும்
மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, உங்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். எதிரிகள் விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. அலர்ஜி, சளி, வண்டியில் இறக்கும்போது, ஏறும்போது கவனமாக இருக்க வேண்டும். திருமணத் தடைகள் ஏற்படும். சுபகாரியத்தில் பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
காதலில் பிரச்சனை
எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் எல்லாம் நடக்கும். பங்குனி வரையில் சாதகமாக இருக்கும். ஆனால், சித்திரையில் இருந்து பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. காதல் அமைப்பில் நிறைய பாதிப்புகள் ஏற்படும். காதல் வாழ்க்கையில் நண்பர்களால் மிகுந்த பாதிப்புகள் வரும் என்பதால் எச்சரிக்கை தேவை. ரகசியங்களைக் காப்பது நல்லது. நல்ல விஷயங்களுக்காக பணத்தை யோசிக்காமல் செலவு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். முதலீடுகளால் ஏற்றத்தைப் பெறும் காலகட்டம்.
ஆரோக்கியம்
நீண்ட நாட்களாக கூட இருந்தவர்களாலேயே பிரச்சனைகள் ஏற்படும். எதற்காகவும், யாரையும் நம்பி இறங்காமல் இருப்பது நல்லது. வயிறு உபாதைகள் ஏற்படும். கால் பிசங்குவது போன்ற பிரச்சனைகள் வரும். அஷ்டமத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால் தைராய்டு, கர்ப்பப்பையில் பாதிப்புகள் உருவாகும். 10 இல் இருக்கும் குரு இருக்கிற வேலையே வேண்டாம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தும். திருப்பரங்குன்றம் முருகப் பெருமானை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் 60 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 65 சதவீதமும் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications