செவ்வாய் பெயர்ச்சி பலன்: லக்கி பாஸ்ராக மாறும் கன்னி.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம்
செவ்வாய் பெயர்ச்சி பலன்: ஜூலை 28 முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் செவ்வாய்ப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த செவ்வாய் பெயர்ச்சியின்போது கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
செவ்வாய் பகவான் சகோதரக்காரகன். நிலம், பூமிக்கு அதிபதியானவர். ரத்தத்துக்கும், ஆக்ரோஷத்துக்கும், கோபத்துக்கும் காரணமானவர். கட்டிடம், நெருப்பு, சிவப்பு நிறம், உடற்பயிற்சி, விளையாட்டுத் துறைக்கு தொடர்பானது செவ்வாய் கிரகம். இந்த செவ்வாய் பகவான் ஜூலை 28 ஆம் தேதி சிம்மத்தில் இருந்து கன்னி மனைக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார். செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி வரையிலான 48 நாட்கள் கன்னியில் இருந்து செவ்வாய் பகவான் பலனைக் கொடுக்கப் போகிறார்.

இந்த காலகட்டத்தில் உத்திர நட்சத்திரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை சூரிய பகவானின் நடசத்திரத்தில் பயணம் செய்கிறார். ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை அஸ்தம் எனும் சந்திரனின் நட்சத்திரத்திலும், செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தனது சொந்த நட்சத்திரமான சித்திரை நட்சத்திரத்தில் பயணம் செய்யப் போகிறார்.
இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி காலகட்டத்தின்போது கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்கள், மாற்றங்கள் நமக்கு கிடைக்கும். எந்த தெய்வ வழிபாடு உகந்தது என்பது குறித்து பார்க்கலாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியில் வந்து செவ்வாய் பகவான் அமரப் போகிறார். உங்களுக்கு தைரிய, வீரியத்தைக் கொடுக்கக் கூடியவர் செவ்வாய். 8க்குரிய அட்டமாதிபதியாகவும் இருக்கிறார். வலி, வேதனை, துக்கம், துயரம், அசிங்கம், அவமானம், திடீர் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கக் கூடியவர் செவ்வாய். இப்போது செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் வந்து அமருவதால் வீரம், கோபம், ஆக்ரோஷம், வேகம், துணிச்சலைத் தருவார். ஆனால் நிதானமாக இருப்பது நல்லது.
எதிர்மறை விஷயங்கள்
அவசரமாக முடிவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. எதையாவது கோபத்தில் பேசிவிட்டு வருத்தப்படக்கூடிய சூழல் ஏற்படும். செவ்வாய் 8க்கு உரியவராக இருப்பதால் நிறைய நெகட்டிவான சிந்தனைகள் அதிகமாக வரும். எதிர்மறையான விஷயங்களுக்குள் செல்லாமல் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது. செவ்வாய் திசை, புத்தி, சனி புத்தி நடப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
முயற்சிகளில் வெற்றி
உங்களுடைய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி அடையும் யோகம் உண்டு. துணிச்சல் அதிகரிக்கும். விளையாட்டுத் துறையில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். தேர்வுகளிலும் வெற்றி பெறும் துணிச்சல் வரும். எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தன்மை வரும். சகோதரர்களைப் பற்றிய சிந்தனைகள் வரும். சகோதரர்களுக்கு உதவும் சூழல் உண்டாகும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு பூமியை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். விவசாயம் செய்வதற்கான ஆர்வம் வரும்.
தொழில்
தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மிகப்பெரிய லாபங்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு சாதிக்கும் அமைப்பு உண்டாகும். விற்காத நிலங்கள் கூட விற்பனையாகும். வியாபாரம் நன்றாக இருக்கும். கராராக இருந்து செயல்படுவீர்கள். எந்த இடத்தில் எதைப் பேச வேண்டும். எதைப் பேசி சாதிக்க வேண்டும் என்ற தன்மையை இயற்கையாகவே பெற்றிருப்பீர்கள்.
பதவி உயர்வு
ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை செவ்வாய் பகவான் உத்திரம் நட்சத்திரத்தில் பயணிக்கும் போது தந்தை சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். அரசு, அரசார்ந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். அரசாங்க ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதிகாரங்கள், நிர்வாகம், பதவி உயர்வு, அடுத்த நிலைக்குச் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் வெளியில் சென்று படிக்கும் யோகம், வெளிநாடு அல்லது வெளிமாவட்டங்களுக்கு வேலைக்குச் செல்லும் யோகம் உண்டாகும்.
திடீர் அதிர்ஷ்டம்
ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை சந்திரனின் நட்சத்திரத்தில் செவ்வாய் பயணிக்கும்போது உங்களுக்கு அபரிமிதமான லாபங்கள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்யங்களால் ஆச்சரியமடைவீர்கள். இதுவரை நடக்காத அனைத்து காரியங்களும் உங்களுக்கு நடக்கும். வாங்க வேண்டும் என்று நினைத்த வீட்டை வாங்கி மகிழ்வீர்கள். நீங்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் விஷயங்கள் அனைத்தும் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.
முருகன் வழிபாடு
செப்டம்பர் 3 முதல் 12 ஆம் தேதி வரை செவ்வாய் தனது சொந்த நட்சத்திரத்தில் பயணிக்கும்போது வேலையை விடாமல் இருப்பது நல்லது. கோபம், ஆக்ரோஷம் உண்டாகும். உணச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. வம்பு, வழக்கு, கோர்ட், கேஸ்களில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும். முருகன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமைதோறும் சென்று வழிபடுவது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு கட்டம் சரியில்லை.. வச்சு செய்யும் சனி, குரு.. ரொம்ப கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு குரு உச்சம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
Rasi Palan This Week:குருவின் அருளால் சனியிடமிருந்து தப்பிக்கும் மீன ராசி..பண விஷயத்தில் ரொம்ப கவனம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications