Rasi Palan This Week: கன்னி ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. பொறுமை ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான ஆவணி 30 முதல் புரட்டாசி 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kanni-weekly-rasi-palan-what-kind-of-benefits-virgo-kanni-people-will-get-from-september-15-to-21

ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் பிறக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரியது. சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். உடனிருப்பவர்கள் செய்யும் சதியால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதற்கான வாய்ப்புள்ளது. பொறுமையாகவும், நிதானத்துடனும் இருப்பது நல்லது. தொழிலில் கோபத்தைக் கைவிடுவது நல்லது. தொழில் சார்ந்த விஷயங்களில் இணக்கமாகச் செல்ல வேண்டும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.

சிக்கல்கள் நீங்கும்

வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். மேலதிகாரிகள் விஷயத்தில் வாக்குவாதத்தை தவிர்த்து இணக்கமாகச் செல்வது நல்லது. அரசுத் துறை, அரசியல்வாதிகள் எப்போதும் அதிக கவனத்துடன் இருப்பது நல்லது. இல்லையெனில் உங்களை நீண்ட நாட்களாக வைத்துக் கொண்டு மற்றவர்கள் ஜெயிப்பது போன்ற தன்மை உண்டாகும்.

குடும்பம்

வழக்கு போன்ற பிரச்சனைகளில் அதிக கவனமாக இருக்க வேண்டும். சட்டத்திற்குப் புறம்பானவர்களின் நிழல் கூட பார்த்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். குடும்பத்திலும், வெளியிடத்திலும் எந்த விஷயங்களிலும் மற்றவர்களின் தலையீட்டைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் கோபப்பட்டு வேலையை விடுவது, மேலதிகாரிகள், சக ஊழியர்களிடம் தர்க்கம் செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழிலில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும். ஐப்பசி மாதம் வரை பொறுமையாக இருப்பது நல்லது.

பிரச்சனைகளில் இருந்து விடுதலை

கார்த்திகை மாதத்தில் இருந்து தான் எல்லா பிரச்சனைகளில் இருந்தும் நீங்கள் விடுதலை பெறுவீர்கள். மூன்று குரங்கு பொம்மைகளைப் போல இருப்பது நல்லது. தினந்தோறும் அனுமனை வழிபாடு செய்வது, அனுமன் சாலிஷா கேட்பது, படிப்பது நல்ல ஏற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும். குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடும், மற்றவர்கள் குடும்பத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பதும் மிகவும் முக்கியம்.

முன்னேற்றம்

தொழில் சார்ந்த விஷயங்களில் பெரிய அளவிலான முன்னேற்றங்கள் ஏற்படும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பண வரவு அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+