Rasi Palan This Week: கும்ப ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. 7 நாட்களில் வரப்போகும் குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

kumbam-rasi-palan-what-kind-of-benefits-that-kumbam-aquarius-sign-will-get-from-november-24-to-30

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.

அந்த வகையில், நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயத்திலும் ஏற்றம் உண்டாகும். எதிர்பார்க்காத பண வரவு உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். வேற்று மதத்தினரால் ஆதாயம் ஏற்படும். நல்ல அனுகூலங்கள் காணப்படும். நண்பர்களால் நல்ல உதவிகள் கிடைக்கும். சுபிக்ஷம் கிடைக்கும் அனுகூலமான காலகட்டமாக இருக்கும்.

யோக பலன்கள்

யோக பலத்தை அதிகளவில் பெறும் யோகம் உள்ளது. தடைகளை எல்லாம் தவிடு பொடியாக்கக் கூடிய அற்புதமான அமைப்பு ஏற்படும். பழைய கடன்கள் அனைத்தும் பைசலாகும். ஐயப்ப சுவாமியை வழிபாடு செய்வது, ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், ஐயப்ப பக்தர்களுக்கு யாத்திரைக்கு உதவி செய்வது உங்களுக்கு தடைகளில் இருந்து எல்லாம் நிவர்த்தி ஏற்படும்.

கடன்கள் தீரும்

பழைய கடன்களை தீர்த்து முடிக்கும் யோகம் உண்டாகும். தொழில் சார்ந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். உறவு முறையில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். உத்தரவாதத்துடன் எடுக்கக் கூடிய முடிவுகளால் எல்லோரிடமும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இழுபறியாக இருந்து வந்த நிலைமைகள் எல்லாம் மாறி அனைத்து விஷயங்களும் டக்கு டக்கென்று நடக்கும்.

அனுகூலம்

தொடர்ச்சியாக இருந்து வந்த சங்கடங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். நல்ல நம்பிக்கையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும் அற்புதமான காலகட்டம். உத்தியோகம், படிப்பு, தொழில், வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்த கஷ்டங்கள் தீரும். தெய்வீக வழிபாட்டில் மகான்கள் வழிபாடு உங்களுக்கு நல்ல அனுகூலத்தை தரும். நல்ல காரியங்கள் அனைத்தும் அடுத்தடுத்து நடக்கும் யோகம் ஏற்படும்.

வழிபாடு

பொருளாதாரத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். முருகன், துர்க்கையை வழிபாடு செய்வது தொழிலில் ஏற்றத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அடிவயிறு, கால், பாதம், முதுகு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கழிவுப் பாதையில் பாதிப்பு இருப்பவர்கள் மருந்து, மாத்திரைகளை தவறவிடாமல் எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+