Kumbam Rasi Palan: கும்ப ராசியினரே பண விஷயத்தில் ரொம்ப கவனம்.. ஆபத்து காத்திருக்கு
செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கியுள்ளது. இந்த செப்டம்பர் மாதத்தில் பல்வேறு முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம் குறித்து ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
செப்டம்பர் மாதத்தில் மூன்று முக்கிய பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. முதலில் செப்டம்பர் 13, 14 ஆம் தேதி சுக்கிர பகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். அதற்கு அடுத்ததாக செப்டம்பர் 17 ஆம் தேதி புரட்டாசி மாதம் ஆரம்பிப்பதால் சூரியனும், அதற்கு முன்தினம் புதனும் கன்னி ராசிக்குப் பெயர்ச்சி ஆகின்றனர். அங்கு சனி வக்கிரமாகி பார்வை பலத்தை கொடுக்கவுள்ளார்.

இந்த கிரக மாற்றத்தின் காரணமாக செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மூன்று ராசிகளுக்கு அதீத அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டாகும். வேலையில் பளு, அழுத்தம் வருவதற்கான வாய்ப்புள்ளது. சிறு சிறு அடிபடுதல், அரசுத் துறையில் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு, கல்வி நிறுவனம், மருத்துவர்களுக்கு பாதிப்புகள், பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதனால், செப்டம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. செப்டம்பர் 16 ஆம் தேதிக்குப் பிறகு அரசுத் துறை அதிகாரிகளுக்கு, அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சனை வருவதாக வாய்ப்புள்ளது.
இந்த செப்டம்பர் மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்..
கும்பம்
கும்ப ராசி, லக்கினக்காரர்களுக்கு 7 ஆம் இடம் எனும் களத்திர ஸ்தானத்தில் 4 கிரகங்கள் சேருவது நல்ல அமைப்பு இல்லை. உங்களுக்கு பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படும். மனைவிக்கு உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகும். வயிறு தொடர்பான உபத்திரவங்கள், கர்பப்பை பிரச்சனை, பான்கிரியாஸ் பிரச்சனை போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது.
பண விஷயத்தில் கவனம்
சிலருக்கு அஷ்டமத்தில் புதன், சூரியன் அமருவதால் பின்முதுகு, இடுப்பு, எலும்பு தொடர்பான பாதிப்புகள் ஏற்படும். அரசு வேலைக்காக பணம் கொடுத்து ஏமாறாமல் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பணத்தாலம் ஏமாறும் வாய்ப்புள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதிக்குப் பிறகு நிறைய விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும். அதுவரை தேவையில்லாத மன அழுத்தங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
எதிர்பாராத லாபம்
நிறைய பாதிப்புகள் இருந்தாலும் ஒரு சில விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக நடக்கும். எதிர்பாராத வெற்றி, எதிர்பாராத லாபங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. எந்தவொரு விஷயத்தை எடுத்தாலும் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுவது நல்லது. ராசி, லக்கினத்தில் ராகு இருப்பதால், 7 ஆம் இடத்தில் 3, 4 கிரகங்கள் சேருகின்றன. பஞ்சம ஸ்தானத்தில் குரு இருப்பதால் தப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
பொறுமை அவசியம்
கும்பத்தில் இருப்பவர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம் இந்த மாத இறுதி வரை ஆரோக்கியத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நிறைய பேருக்கு ஆன்மீகம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தேவையில்லாத நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. சுக்கிரன், சந்திரன், கேது போன்றவை இணைவு பெறுவதால் நீங்கள் அமைதியாக இருந்தாலும் உங்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
வழிபாடு
பெரிய ஒரு வெற்றி நிச்சயமாகக் கிடைக்கும். இந்த மாதிரியான கிரக நிலைகள் இருக்கும்போது விஷ்ணு பகவான், துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது சகலவித மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் கொடுக்கும். மகிழ்ச்சி ரீதியாக 75 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 75 சதவீதமும் நல்ல நன்மைகளைப் பெறுவதற்கான நல்ல மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமையும்.












Click it and Unblock the Notifications