Kumbam Rasi Palan: கும்பம் ராசிக்கு தங்கத்தை வாங்கி குவிக்கும் யோகம்.. வார்த்தையில் தான் கண்டமே
Kumbam Rasi Palan: மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 16 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, பங்குனி 2 ஆம் தேதி முதல் பங்குனி 8 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்பம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கும்பம் ராசி பலன் (Kumbam Rasi Palan)
கும்பம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு மன அழுத்தம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வயிறு தொடர்பான பிரச்சனைகளில் அக்கறை செலுத்துவது நல்லது. பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கவனம் தேவை. தினந்தோறும் ஆயில் புல்லிங் செய்வது நன்மையைத் தரும். குறிப்பாக, பெண்கள் தினந்தோறும் நல்லெண்ணெயை கொப்பளிப்பது நன்மையைத் தரும்.
வார்த்தையில் கவனம்
வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. சொத்துகள் கிடைக்கும் யோகம் உண்டாகும். சுகபோகமான வாழ்க்கை கிடைக்கும். கெளரவம் ஏற்படும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். இருப்பினும் ஏதோ ஒரு மன அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும். ஏதாவது ஒன்றை யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். பெரிய அளவில் லாபம் கிடைக்கும். .
நகை வாங்கும் யோகம்
தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்கி குவிப்பீர்கள். வேற்று மொழி மனிதர்களால் அதிக அளவில் ஆதாயம் ஏற்படும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். கடல் கடந்து உத்தியோகம், வியாபாரம், தொழில், படிப்பில் இருப்பவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யாரிடத்திலும் கோபமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. அந்த நாட்டின் சட்டத் திட்டங்களை மீறி பேசாமல் இருப்பது நல்லது.
ஏற்றம்
எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாகப் பார்க்க முடியாதவர்களை இப்போது பார்க்கக்கூடிய யோகம் உண்டாகும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். தொட்டது துலங்கக்கூடிய நல்ல காலகட்டம். பொருளாதாரத்தில் நல்ல முன்னற்றம் ஏற்படும். கடன்களை அடைக்கும் முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டு.
வழிபாடு
இருப்பினும் எந்த விஷயமாக இருந்தாலும் யோசித்து நிதானமாகவும், பொறுமையாகவும் செயல்படுவது நல்லது. கோபத்தையும், வாக்குவாதத்தையும் தவிர்ப்பது நல்லது. வார்த்தைகளை யாரிடம் பேசினாலும் பார்த்து பயன்படுத்துவது நன்மை பயக்கும். இல்லையெனில் தேவையில்லாத சிக்கல்களை சிக்கும் வாய்ப்புள்ளது. ராகு வழிபாடு, துர்க்கை வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு கட்டம் சரியில்லை.. வச்சு செய்யும் சனி, குரு.. ரொம்ப கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு குரு உச்சம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம் -
Rasi Palan This Week:குருவின் அருளால் சனியிடமிருந்து தப்பிக்கும் மீன ராசி..பண விஷயத்தில் ரொம்ப கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications