இன்னும் 10 வருசத்துல.. யாருக்கும் சம்பளமே இருக்காது! பெரிய குண்டு தூக்கி போட்ட எலான் மஸ்க்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: AI வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே இன்னும் 10-20 ஆண்டுகளில் யாருக்கும் சம்பளமே கொடுக்க முடியாத நிலை வரும் என்று எலான் மஸ்க் கூறியிருக்கிறார். அவரது கருத்துக்கள் ஏகப்பட்ட விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற பல்வேறு மாநாடுகள் மற்றும் நேர்காணல்களில், AI மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, மனிதர்களின் வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் எவ்வாறு மாற்றப் போகிறது என்பது குறித்து அவர் விரிவாக பேசி இருக்கிறார்.

Elon Musk

எதிர்காலத்தில், AI மற்றும் ஆப்டிமஸ் போன்ற ஹியூமனாய்டு ரோபோக்கள், மனிதர்கள் செய்யும் அனைத்து உடல் உழைப்பு மற்றும் அறிவு சார்ந்த வேலைகளையும் செய்ய தொடங்கிவிடும். இதனால் மனிதர்கள் மாதாந்திர சம்பளத்திற்காக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்காது. வேலைக்கு செல்வது என்பது பொழுதுபோக்கு அல்லது விளையாட்டு போல மாறிவிடும்.

வேலைகள் பறிபோனால், மக்கள் எப்படி வாழ்வார்கள்? என்று கேள்விக்கு.. 'யூனிவர்சல் ஹை இன்கம்' என்ற புதிய கருத்தை மஸ்க் முன் வைத்திருக்கிறார். ரோபோக்களின் உழைப்பால் உற்பத்தி செலவு குறைந்து, பொருட்கள் மற்றும் சேவைகள் மிக அதிக அளவில் மலிவாக கிடைக்கும். அந்த சூழலில் அரசாங்கங்கள் மக்களுக்கு வழங்கும் நிதி உதவி மூலம், மக்கள் தங்களுக்கு தேவையான எந்த பொருளையும் எளிதாக வாங்கிக் கொள்ள முடியும். ஒரு கட்டத்தில் பொருட்கள் அனைத்தும் தடை இன்றி தாராளமாக கிடைக்கும் போது, பணத்தை சேமிப்பதோ அல்லது பணத்தை பரிமாற்றக் கருவியாகவோ பயன்படுத்துவது தேவையற்றதாக ஆகிவிடும்.

எதிர்காலத்தில், பணம் என்பது ஒரு சாதாரண டோக்கன் போல மாறிவிடும். ரோபோக்களை உருவாக்கும் நிறுவனங்கள், உலகம் முழுதும் உணவையும் மற்ற பொருட்களையும் அதிகப்படியாக உற்பத்தி செய்யும். இதை வாங்க மக்கள் கையில் பணம் இருக்காது. ஏனெனில் மக்கள் தொழிலாளர்களாக, ஒரு பொருளை உற்பத்தி செய்யும் நபராக.. இருக்க மாட்டார்கள். அந்த இடத்தில் ரோபோக்கள் இருக்கும். எனவே மக்களுக்கு வேலை இல்லையெனில் வருமானம் இருக்காது.

மக்கள் கையில் வருமானம் வர, அரசு ரோபோக்களை உருவாக்கும் நிறுவனங்களிடமிருந்து அதிகமான வரியை வசூலித்து.. அந்த தொகையை மக்களின் கையில் கொடுக்க வேண்டும். அதைக் கொண்டு, மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்வார்கள். இந்த பொருட்கள் ரோபோக்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் தான் வாங்க முடியும். எனவே, நிறுவனங்களிடம் அரசு கொடுத்த பணம் போய் சேரும். மீண்டும் அவர்கள் ரோபோக்களை உருவாக்குவார்கள். அரசு, நிறுவனங்களிடமிருந்து பணத்தை வரியாக வாங்கி.. மக்களிடத்தில் கொடுக்கும். இதுதான் எலான் மஸ்க் சொல்லும் பொருளாதார பிளான்.

ஆனால் இந்தப் பிளானிலும் பெரிய சிக்கல் இருக்கிறது. எலான் மாஸ்க் சொல்வதைப்போல, அரசாங்கம் நடுவில் நின்று.. நிறுவனங்களிடமிருந்து வரியை வாங்கி மக்களுக்கு சரியாக பகிர்ந்து கொடுக்க வேண்டும். அது நடக்காவிட்டால், உலகம் மிகப் பெரிய பொருளாதார பேரழிவை சந்திக்கும்.

அதேபோல ஒரு நிறுவனத்திடம் மின்சாரமும், ரோபோக்களும் இருந்தால் போதும்.. அவை எவ்வித மனித உதவியும் இன்றி, ஒரு நாளைக்கு 10,000 கார்களையோ, அல்லது பல டன் உணவுகளையோ உற்பத்தி செய்து தள்ளும். இந்த உற்பத்திக்கான உண்மையான செலவு பூஜ்ஜியம் என்பதால், அதை விற்க வேண்டிய அவசியமும் கார்ப்பரேட்டுகளுக்கு இல்லை. கார்ப்பரேட்டுகள் தங்களுக்கு தேவையான ஆடம்பர வசதிகள், தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்து.. தங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொள்வார்கள்.

இது ஒரு வகையான தொழில்நுட்ப நிலப்பரபுத்துவமாக மாறக்கூடும். அதாவது வளங்களை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனைத்தையும் அனுபவிப்பார்கள். எனவே எலான் மஸ்க் சொல்வதைப் போல நடந்தாலும் கூட, அதிலும் மிகப்பெரிய பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+