மதுரை விமான நிலையத்தில் ஸ்டாலின், நிர்மல் குமார்.. திமுக, தவெகவினர் மாறி மாறி கோஷமிட்டதால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் நிர்மல் குமார் வருகை தந்தனர். இதனால் அவர்களை வரவேற்க வெளியில் காத்திருந்த திமுகவினர் மற்றும் தவெகவினர் போட்டி முழக்கமிட்டனர். திமுக, தவெகவினர் தொடர்ந்து முழக்கமிட்டதால் சிறிது நேரம் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா நாளை வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் கொண்டாடப்படுகிறது. இதற்காக அமைச்சர் நிர்மல் குமார் இன்று மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

Madurai Airport Sees Tense Moments as DMK and TVK Supporters Raise Slogans to Welcome MK Stalin and Nirmal Kumar

இதே போன்று திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க ஸ்டாலினும் குருபூஜையில் பங்கேற்பதற்காக இன்று இரவு 9 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மு.க ஸ்டாலினை வரவேற்பதற்காக அங்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகளவில் குவிந்து இருந்தனர். இதே போன்று அமைச்சர் நிர்மல் குமாரை வரவேற்கவும் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகளவில் குவிந்து இருந்தனர்.

இந்த நிலையில் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் நிர்மல் குமார் இருவரும் ஒரே நேரத்தில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது வெளியில் வந்த இருவருக்கும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஒரே நேரத்தில் திமுக மற்றும் தவெகவினர் கோஷம் எழுப்பியதால் அங்கு பரபரப்பு உண்டானது. திமுகவினர் மற்றும் தவெகவினர் மாறி மாறி கோஷம் எழுப்பினர். இதனால் சிறிது பரபரப்பு உண்டானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+