Kumbam Rasi Palan: கும்ப ராசி 40 நாட்களுக்கு கிரகங்களால் வரும் ஆபத்து.. ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

சூரிய கிரகண பலன்: 2025 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவு 11 மணி 01 நிமிடத்தில் தொடங்கிய சூரிய கிரகணம் 12 மணி 22 நிமிடத்தில் நிறைவடைந்தது. சூரிய கிரகணம் தொடங்கி 40 நாட்களில் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான மாற்றங்கள் நடக்கும். அந்த வகையில், கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

நடப்பு ஆண்டில் சூரிய கிரகணமானது செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி இரவில் உத்திர நட்சத்திரம், சிம்ம ராசியில் ஏற்பட்டுள்ளது. சூரியனும், கேதுவும் இந்த நேரத்தில் இணையக்கூடும். சூரியன் கேது இணையும்போது 3 ராசிகளுக்கு பாதிப்புகள் ஏற்படும். மேஷம், சிம்மம், தனுசு ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு சற்று அதிகமான பாதிப்புகள் ஏற்படும். இதைத் தவிர சிம்மத்திற்கு முன்னும் பின்னும் இருக்கக்கூடிய ராசிகளான கடகம், கன்னி ஆகிய ராசிகள் என மொத்தம் 5 ராசிகளுக்கு சூரிய கிரகணத்தின் பாதிப்புகள் ஏற்படும்.

Kumbam lucky zodiac signs

அதேபோல, மிதுனம் ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு நிறைய பிரச்சனைகள் தீரும். மீனம், விருச்சிகத்திற்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 40 நாட்களுக்குள் நல்ல விஷயங்கள் நடக்கும். அந்த வகையில், வரும் 40 நாட்களுக்கு கும்ப ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் மாற்றங்கள், நன்மைகள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கும்பம்

கும்ப ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு அஷ்டமத்தில் கிரக சஞ்சாரம் நடக்கிறது. சனியின் வக்கிரப் பார்வை நடைபெறுவதால் உங்கள் வீட்டில் அல்லது. சுற்று வட்டாரத்தில் கண்டிப்பாக ஒரு விபத்து நடக்கும். எலும்புகள் உடைவது, எலும்புகள் நகர்வது, வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படுவது, தேவையில்லாத பழிச்சுமை ஏற்படுவது, அரசாங்கத்தால் தண்டிக்கப்படுவது போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

ஆரோக்கியம்

எங்கு சென்றாலும் கவனமாக செல்வது நல்லது. எல்லா விஷயங்களுமே உங்களுக்கு சண்டை போட்டு தான் நடக்கும். அதனால், அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியம் உங்களுக்கு சாதகமாக இருப்பது. சோம்பலாகவும், தள்ளிப்போடும் மனப்பான்மையும் உண்டாகும். அப்பாவுடைய ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

மிகுந்த கவனம்

இந்த காலகட்டத்தில் தெரியாத மனிதர்களின் தொடர்புகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத பழக்க வழக்கத்தை தவிர்ப்பது நல்லது. இரவு நேரத்தில் வண்டிகளை வேகமாக ஓட்டுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இந்த புரட்டாசி மாதம் உங்களுக்கு சாதகமாக இல்லை. அதனால், மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

முதுகெலும்பில் பாதிப்பு, லஞ்சம் கொடுப்பது, பண விஷயங்களில் பாதிப்பு, பணம் கொடுத்து மாட்டுவது, பண விஷயத்தில் சிக்குவது போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். வீட்டில் பெரியவர்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. கண், முதுகுத்தண்டுவடப் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பெரிதாக இல்லையெனிலும் சிறிதளவாவது பிரச்சனைகள் வரும்.

கிரக நிலைகள்

உடம்பு சூடாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பொறுமையாக இருந்தால் எல்லா விஷயங்களும் நடக்கும். ஒரு விஷயத்தை செய்ய முடியவில்லை எனில் அதை செய்ய முடியாது என்று சொல்லிவிடுவது நல்லது. இல்லையெனில் பிரச்சனைகளில் சிக்கும் நிலை ஏற்படும். ராசி, லக்கினத்தில் ராகு, லக்கினத்தில் ராகு அமர்ந்திருக்கிறது. 2 ஆம் இடத்தில் சனி வக்கிரமாக இருக்கிறது. அதனால், சில பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.

பரிகாரம்

பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க செம்பு பாத்திரத்தில் உளுந்து, தட்சணை வைத்து அருகில் இருக்கும் சிவபெருமான் கோயிலுக்குச் சென்று கொடுப்பது உங்களுக்கு அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தும். உங்களுடைய தோஷங்கள் அனைத்தும் விலகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+