குரு வக்ர நிவர்த்தி: சிம்ம ராசியினரின் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி.. அதிர்ஷ்ட மழையில் நனைய போறீங்க
குரு வக்ர நிவர்த்தி: பிப்ரவரி 5 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி அடைவதால் சிம்ம ராசியினர் எந்தப் பிரச்னைகளில் இருந்து எல்லாம் விடுபடப் போகிறார்கள். அவர்களுக்கு கிடைக்கப் போகும் நற்பலன்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது, சுக்கிரன், செவ்வாய், புதன் உள்ளிட்ட முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் உள்ளன. அந்த வகையில் பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி நிகழ உள்ளது. இது சிம்ம ராசியில் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை இந்தத் தொகுப்பில் காணலாம்.

குரு தற்போது ரிஷபம் ராசியல் வக்ரமாக வீற்றிருக்கிறார். பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிலையில் இருந்து நிவர்த்தி ஆகி இயல்பு நிலைக்கு திரும்புகிறார்.. குரு தனம், குடும்பத்துக்கு காரகனாக இருக்கிறார். நம் அன்றாட வாழ்க்கையில் குரு பயணிப்பதால் அவரது வக்ர நிவர்த்தி முக்கியத்துவம் வாய்ந்தது.
உங்கள் ராசியானது ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. 5 என்பது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கக்கூடிய, அதிர்ஷ்டத்தை தரக்கூடிய இடம். சிம்மம் என்பது சூரியன் ஆதிக்கம் செய்யக்கூடிய வீடாகும். தலைவர், பொது நலத் தொண்டர், நகரத்தை நிர்மானியக்கூடிய தன்மையைக் கொண்டவராக சிம்ம ராசிக்காரர்கள் இருப்பார்கள்.
குரு வக்ரமாக இருந்த இடமானது ரிஷப ராசிக்குள் இருப்பதால் உங்களுடைய ராசி, லக்னத்தின் பத்தாம் இடத்தில் இருப்பதால் தொழில் சம்பந்தமான விஷயங்களில் பாதகத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்திருக்கும். அந்தப் பிரச்னைகளில் இருந்து விடுதலை அடையும் யோகம் பெறுவீர்கள். கணினி துறையில் இருப்பவர்களுக்கு, வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு வேலை பறிபோவது போன்ற பிரச்னை இருந்திருக்கும். அந்த பயத்திற்கான தெளிவு கிடைக்கும்.
பத்தில் குரு அமரும்போது பதவி பறிபோகும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். பதவி பறிபோவதில்லை. உங்களுக்கு புதிய பதவி கிடைக்கும் என்பதுதான் தன்மை. வேறு வேலை மாறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கூடுதல் பணி சுமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அதே சமயத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்படும்.
சிம்ம ராசி, சிம்ம லக்கினக்காரர்கள் குரு வக்கிர நிவர்த்திக்குப் பிறகு அதாவது மே மாதத்தில் குருவே ரிஷபத்தில் இருந்து பெயர்ந்து சிம்ம ராசிக்கு லாப ஸ்தானத்துக்கு வருவதால் நல்ல வாய்ப்புகள் ஏற்படும். தொழிலில் வாய்ப்புகள் உருவாகும். தந்தையின் உடல்நலத்தில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். குரு உங்களுடைய 5 ஆம் இடத்துக்காரர் என்பதால் உங்களுடைய பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
இழுபறியாக இருந்து வந்த அனைத்து காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு வரும் வாய்ப்பு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். குரு நிவர்த்தி உங்களுக்கு நல்ல மாற்றத்தை உண்டாக்கும். மகம் நட்சத்திரக்காரர்கள் மெடிஷன் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான காலமாக இருக்கும். அரசியல் வாழ்க்கையில் இறங்குபவர்களுக்கு சூப்பரான காலமாக இருக்கும். நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும்.
அரசியலில் உயர் பதவிகளைப் பெறுவீர்கள். உங்களுடைய கடின உழைப்புக்கான அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். நரசிம்மர் கோயிலுக்குச் சென்று அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்பவர்களுக்கு வளர்ச்சிகள் தடையில்லாமல் வந்து சேரும். உங்களுடைய வாழ்க்கை தரத்தை நல்லபடியாக மேம்படுத்துவதற்கான சூழல் உருவாகும். ஏழைகளுக்கு உதவி செய்வது நல்லது. கோதுமை தானம் தருவது நல்ல பலன்களைத் தரும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications