உச்சம் தொடும் தங்கம், நிலம் விலை.. அரபு கத்தார் நாடுகள் முடிஞ்சுது.. புத்தாண்டில் நடக்கப்போவது என்ன?
புத்தாண்டு பொது பலன்: தமிழ் புத்தாண்டு தொடங்கியுள்ளது. தமிழ் வருடத்தில் சித்திரை பிறப்பு என்பது பல ஆண்டுகளுக்கு முன்னர் இடைக்காடர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. 60 ஆண்டுகள் கொண்டது. ஏப்ரல் 14 ஆம் தேதி 39 ஆவது ஆண்டாக விசுவாவசு ஆண்டு ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு தமிழ் வருடத்துக்கும் வெண்பாக்கள் உண்டு. அந்த வெண்பாக்களின் படி இந்த வருடத்தில் என்ன மாற்றங்கள் நிகழப் போகிறது என்று பார்க்கலாம்.
இந்த தமிழ் புத்தாண்டில் விவசாயப் பெருக்கங்கள் அபரிமிதமாக இருக்கும். கால்நடைகளில் புரட்சி ஏற்படும். உலகம் முழுவதும் பஞ்சங்கள் நீங்கும். காய்கறித் தோட்டம், ஆர்கானிக் உணவுப் பழக்கம், விவசாய உற்பத்தி, பால் புரட்சி, கடல் வளத்தில் புரட்சி ஏற்படும். மருத்துவத் துறையில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். தங்கம், நிலத்தின் விலை தாறுமாறாக விலை ஏறப் போகிறது.

உலகம் முழுவதும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கடலில் பெரிய அளவுக்கு பாதிப்பு, தீ விபத்துகள் ஏற்படும் சூழல் ஏற்படும். ஆகாய மார்க்க விமானங்கள், கடல் மார்க்க பயண கப்பல்கள், ரயில் விபத்துகள் போன்ற இயற்கைப் பேரிடர்கள், தீவிரவாதத் தாக்குதல், தலைவருடைய உயிருக்கு பாதிப்புகள், அரசியல் கூட்டணி மாற்றம், அரசியல் கணக்குகள் மாற்றங்கள் ஏற்படும்.
பெரிய அளவுக்கு நிபுணத்துவம் பெற்ற கணக்குகள் எல்லாம் மாறும். நட்பாக இருந்தவர்கள் பகைவர்களாக மாறுவது, அரசு அதிகாரிகள் தவறு செய்தால் அரசாங்கத்திற்கு பெரிய கெட்ட பெயர் ஏற்படுவது, உலகம் முழுவதும் வரி விதிப்பு போன்றவை ஏற்படும். தனிப்பட்ட நபர்கள் கடன் உண்டாகும். கடன் வாங்காதவர்கள் கூட கடன் வாங்கும் நிலை ஏற்படும்.
பிரபலமான தலைவர்கள், தொழிலதிபர்கள், பாடலாசிரியர்கள், சினிமா துறையினர் தேக ஆரோக்கியம் மற்றும் எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். போர் பதற்றங்கள், போர் முழக்கம், தீவிரவாத அச்சுறுத்தல்கள், உலகம் முழுவதும் மதக் கலவரங்கள், சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
மருத்துவத் துறை, விவசாயத் துறை, டெலிகாம் துறை, ஸ்பேஸ் டெக்னாலஜி, ஸ்மார்ட்போன் எரா, டிஜிட்டல், ஆர்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ் போன்ற வளர்ச்சிகள் எல்லாம் பிரம்மிப்பை ஏற்படுத்தும். கேன்சர், ஸ்டிரோக், இதயம் போன்ற நோய்களில் அளவுக்கதிகமான வளர்ச்சி ஏற்படும்.
விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டில் வளர்ச்சிகளுக்கும், விவசாயத்துக்கும், மழை பொழிவுக்கும் எந்தவொரு பஞ்சமும் இருக்காது. வெள்ளபெருக்கம், மலைச்சரிவு, காட்டு விலங்குகள் காட்டை விட்டு வெளியில் வரும் அமைப்பு, வனப் பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் அமைப்பு, விலங்குகளின் எண்ணிக்கையை அதிகளவில் பெருக்கத்தை ஏற்படுத்துவதற்கும், காடுகள் வளமாக இருப்பதற்குமான அமைப்புகள் உள்ளன.
உலகம் முழுவதும் சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்படும். கிரீன் எனர்ஜி என்று சொல்லக்கூடிய எலக்ட்ரிக் எனர்ஜி கொண்டு வரப்படும். பெட்ரோலிய நாடுகளுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படும். பெட்ரோலியத்தை வைத்து பெரிய லாபம் கண்ட நாடுகள் வேறு எந்த மாற்றத்தை செய்து வருவாயைப் பெருக்குவதற்கு என்று யோசிக்கத் தொடங்குவார்கள். அரபு, கத்தாரில் உள்ள சட்ட திட்டங்களின் கடுமைகள் எல்லாம் குறைக்கப்படும்.
உலகப் பொருளாதார நாடுகளைப் போல பெட்ரோலிய விஷயங்கள் எல்லாம் 30 சதவீதத்துக்கு மேல் குறையும் அமைப்பு ஏற்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த நாடுகள் பெட்ரோலியம் விற்பதற்கே பாதிப்பு ஏற்படும். எல்லா இடங்களிலும் கிரீன் எனர்ஜிகளைக் கொண்டு வாகனங்கள் இயக்கப்படும். அரபு நாடுகளில் வேலை செய்பவர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். ஆயில் நிறுவனங்களில் திடீர் பெரும் நஷ்டம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications