Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிதுன ராசிக்கு சொந்த தொழில் தொடங்கும் யோகம்.. ஆனா வாயில தான் கண்டமே

Subscribe to Oneindia Tamil

Guru rahu ketu peyarchi: 2025 ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு கேது பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ராகு மே மாதம் 18 ஆம் தேதியில் கும்பத்தில் இருந்து மீனத்துக்குப் பெயர்ச்சியாகி உள்ளார். கேது பகவான் அதே நாளில் கன்னியில் இருந்து சிம்மத்துக்குப் பெயர்ச்சியாகிறார். மே 14 ஆம் தேதி குரு பெயர்ச்சியாகி உள்ளார். குரு அதிசாரப் பெயர்ச்சியாகவுள்ளார். அக்டோபர் மாதம் கடகத்துக்குச் சென்றுவிட்டு டிசம்பரில் மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார்.

lets-take-a-look-at-the-benefits-of-guru-rahu-ketu-peyarchi-for-mithunam-gemini-rasi-people

ராகு அகோர காரகர் என்றும், கேது ஞானக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். தன் நிலையில் இருந்து மாறுபட்ட நிலையில் இருப்பது தான் ராகு திசை. கோபத்தால் மற்றவர்களை அடக்கும் முறையை கையாளுவார்கள். கேது என்பவர் அரசனையும் ஆண்டியாக்கும் தன்மையைக் கொண்டவர். அந்த வகையில், குரு ராகு கேதுவால் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

மிதுன ராசி பலன்

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பகவான் உங்களுடைய ராசிக்குத்தான் வருகிறார். ஏற்கனவே 7 வருடங்களுக்கு மேலாக அஷ்டம சனியால் ஏராளமான பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். அதில் இருந்து ஓரளவுக்கு மீண்டு வந்திருப்பீர்கள். தற்போது புதிய தொழில் தொடங்க அருமையான காலகட்டமாக இருக்கும். பத்தில் சனி வரும்போது முதல் ஆறு மாதம் மிகவும் கடினமாக இருக்கும்.

பிள்ளைகளால் பெருமை

குரு 5 ஆம் பார்வையாக ராசியைப் பார்ப்பதால் பிள்ளைகளால் பெருமை உண்டாகும் காலகட்டமாக இருக்கும். விளையாட்டுத் துறையில் இருக்கும் குழந்தைகளுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிகிச்சையில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். நினைத்த காரியங்கள் அனைத்தும் அமோகமாக நடக்கும் காலகட்டமாக இருக்கும்.

திருமணம் கைகூடும்

குலதெய்வத்தின் அனுக்கிரகம் பூரணமாகக் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். தந்தை, தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. திருஷ்டி, விரோதிகளை சந்திக்கும் காலகட்டமாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு அமோகமான பதவிகள் கிடைக்கும். எதிரிகளும் அதிகரிப்பார்கள்.

ஆரோக்கியம்

தம்பி, தங்கையின் ஆரோக்கியம், ஆயுளில் கவனம் செலுத்துவது நல்லது. புதிதாக வரும் உறவுகளிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனென்றால் அவர்களே உங்களுக்கு எதிரியாக மாறும் நிலை உண்டு. செல்போனில் பேசும்போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களைப் பற்றி பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.

எதில் கவனம் தேவை

கடன் கொடுப்பது போன்ற விஷயங்களில் எழுத்துப்பூர்வமாக வாங்கிக் கொள்வது நல்லது. இல்லையென்றால் ஏமாறுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த விஷயங்களில் மட்டும் கவனமாக இருந்தால், மற்ற விஷயங்கள் உங்களுக்கு டாப் கிளாஸாக அமையும். பேராசிரியர்கள், பள்ளி, கல்லூரி நடத்தி வருபவர்களுக்கு முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும்.

பேச்சு வராத குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவர்களைப் பார்ப்பது நல்லது. வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரும் என்பதால் உணவு விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாடு

மீனாட்சியம்பாள் வழிபாடு குடும்பத்தில் நன்மைகளையும், சந்தோஷத்தையும் அள்ளித் தரக்கூடியதாக இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+