காதல் ஜோதிடம்..ரொமான்ஸ்..மொரட்டுத்தனமான அன்பு..நம்பினால் உயிரையே தரும் ராசிக்காரர்கள்!
சென்னை: காதல் என்ற மூன்றெழுத்து பலரையும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவி இடையேயான நெருக்கம் ரொமான்ஸ் உணர்வுகள் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. நவ கிரகங்களின் குணாதிசயங்களைப் பொருத்து அந்த கிரகங்கள் ஆளும் வீடுகளில் பிறந்த ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு எப்படி இருக்கும் என்று கூற முடியும். மேஷ ராசிகளில் பிறந்தவர்களின் காதல், குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

ஆண்களின் காதல்: மேஷ ராசியில் பிறந்த ஆண்கள் வீரத்தோடு விவேகமும் கொண்டவர்கள். அவர்களின் மனதில் காதல் உணர்வுகள் இருந்தாலும் அதை வெளிப்படுத்த தெரியாதவர்கள். ரொமான்ஸ் மனநிலையோடு எப்போதும் இருக்க மாட்டார்கள். இதுவே காதல் வாழ்க்கையில் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்பட காரணமாகிறது.
உயிர் காதல்: நீ எனக்கு மட்டும்தான் என்னவள் என் சொல்லுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற மனநிலை கொண்டவர். இது பிளஸ் ஆக இருந்தாலும் சில நேரங்களில் மைனஸ் ஆக காதல் பிரேக் அப் ஆக காரணமாகும். கல்யாணம் ஆன பிறகு குடும்ப வாழ்க்கையில் மனைவி, பிள்ளைகள் மீது உருகி உருகி அன்பை வெளிப்படுத்துவார்கள். அதே நேரத்தில் தன்னை சுப்பீரியர் ஆக நினைத்து செயல்படுவார்கள். அவரது மொரட்டுத்தனமான காதலே வாழ்க்கைத்துணைக்கு பிடிக்கும். தன்னை நம்பி வந்தவர்களுக்கு உயிரை கொடுக்கவும் தயங்கமாட்டார்கள்.

பொறுப்பானவர்: குடும்ப தலைவராக பொறுப்புணர்வோடு செயல்படுவார்கள். அதீத மரியாதை கொண்டவர்கள். எப்போதும் உயர்வான எண்ணத்தோடு இருப்பார்கள். வாழ்க்கை துணை தனக்கு அடங்கியவராக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். தனது வாழ்க்கை துணையின் மீது அதிக பாசத்தோடும் பொஸசிவ் உணர்வோடும் இருப்பார்கள். தாம்பத்திய வாழ்க்கையில் இவரை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. தாம்பத்யத்தில் வித்தியாசமாக செயல்பட வேண்டும் என்று நினைப்பார். தனது துணையை உற்சாகமாக வைத்துக்கொள்வதில் கில்லாடி மேஷ ராசியில் பிறந்த ஆண்கள். அவர்களை வாழ்க்கைத்துணையாக கொண்டவர்கள் அதிர்ஷ்ட சாலிதான்.
பெண்களின் காதல்: மேஷம் ராசிகளில் பிறந்த பெண்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். மன உணர்வுகள் அற்புதமானவை. வாழ்க்கை துணை மீது அதீத காதலும் அன்பும் கொண்டவர்கள். எல்லா பொறுப்புகளையும் தன்மீது எடுத்துக்கொண்டு செயல்படுவார்கள். குடும்பம்தான் அவர்களின் உலகம். ராசி அதிபதி செவ்வாய் வேகமாக செயல்படும் என்பதால் அதீத கோபமும் வரும். அதே நேரத்தில் குணசாலிகளாகவும் இருப்பார்கள்.

நம்பிக்கை: உண்மையும் நேர்மையும் கொண்ட மேஷ ராசி பெண்களுக்கு காதலில் நம்பிக்கை கிடையாது. இந்த ராசிக்காரர்கள் காதலிப்பதை அதிகம் விரும்பமாட்டார்கள். நேரடியாக பேசும் குணம் கொண்டவர்கள். நல்ல மனதோடு இருப்பதால் எளிதில் காதலில் விழ மாட்டார்கள். காதலிக்கப்படுவதை விரும்பினாலும் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும். ஏமாற்றத்தை விரும்ப மாட்டார்கள். தன்னுடைய துணை தன்னை ஏமாற்றுகிறார் என்று தெரிந்தால் சட்டென்று பிரேக் அப் செய்து விடுவார்கள்.
குடும்பமே உலகம்: திருமணத்திற்கு பிறகு கணவன், குடும்பம், பிள்ளைகள் என அதீத அன்போடு இருப்பார்கள். நம்பிக்கையோடு இருப்பார்கள். பொது வெளியில் பேசும் போது குடும்பத்தை விட்டுக்குடுக்காமல் பேசுவார்கள். அன்பு இருக்கும் இடத்தில்தான் ஆழமான நம்பிக்கையும் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் அற்புதமாக செயல்படுகிறார்கள். தன்னைப்போல யாரும் தன்மீது அன்பு செலுத்தவில்லையே என்ற ஏக்கமும் அதிகம் இருக்கும்.

நெருக்கம்: செவ்வாய் காதலுக்கும் வீரத்திற்கும் சொந்தக்காரர். இந்த கிரகத்தை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசி பெண்கள் தனக்கு நெருக்கமானவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். மேஷ ராசியைச் சேர்ந்த பெண்களை வாழ்க்கைத்துணையாக தேர்வு செய்வது சிறப்பானது. எந்த ஒரு விசயத்தையும் நம்பி தைரியமாக இறங்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications