Magaram Rasi Palan: ராஜா மாதிரி வாழப்போகும் மகர ராசி.. ஆனா நண்பர்களால் ஆபத்து காத்திருக்கு கவனம்
ஆவணி மாத பலன்கள்: அம்மனுக்குரிய விசேஷ மாதமான ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் தொடங்கப் போகிறது. இந்த ஆவணி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஆவணி மாத கிரக நிலை
எல்லா விதமான சுப காரியங்களை செய்யவும் மக்கள் காத்துக் கொண்டிருக்கும் மாதமாகும். ஆவணி மாதம் என்பது சூரிய மாதம். சூரியனுடைய வீடான சிம்மத்திற்கே சூரியன் வரக்கூடிய மாதம் தான் ஆவணி. கார்காலம், சிம்ம மாதம் என்று ஆவணி மாதம் அழைக்கப்படும். ஏற்கனவே சிம்மத்தில் கேது இருக்கிறார். 7 ஆம் இடத்தில் ராகு, 8 இல் சனி, 11 இல் குரு அமர்ந்திருக்கின்றனர். இந்த ஆவணி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நரம்பு, தலைவலி, கழுத்தில் இருந்து நரம்புக்கு செல்லும் விஷயங்களில் அதீத கவனமாக இருக்க வேண்டும். விநாயகர் வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். மேலதிகாரிகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களில் ஈடுபடுவது, ஈடுபடும் நபர்களிடம் பழகுவதைத் தவிர்ப்பது நல்லது.
நண்பர்களிடம் கவனம்
அஷ்டமத்தில் இருக்கும் கேது மற்றும் சூரியனால் பதட்டங்கள் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. தேவையில்லாத கெட்ட நண்பர்களுடன் பழகுவதைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் மிகப்பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்றிருப்பது நன்மையை ஏற்படுத்தும்.
தொழிலில் முன்னேற்றம்
குரு பகவானின் பார்வை பலமாாக இருக்கிறது. தொழில், உத்தியோகம், படிப்பு போன்ற விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சுப விரைய பிராப்தம் உண்டாகும். சுப காரியம் செய்வதற்காக பணம் எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் முன்னேற்றம் காணப்படும். தொழிலில் நல்ல லாபங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும்.
முன்னேற்றம்
ஆரோக்கியம், பழக்கவழக்கங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. இனி படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். பண வரவு ஏற்படும் காலகட்டமாக இருக்கும். ஏழரைச் சனி முடிந்த நிலையில் நல்லவை நடக்கும் ஆரம்ப மாதமாக இந்த ஆவணி மாதம் அமையும். சிலருக்கு அதிகமான பயணங்கள் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி, தொழில் தொடர்பான விஷயங்களில் கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் எல்லாம் விலகக் கூடிய அமைப்பு உண்டு.
லாபம்
பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் லாபம் காணப்படும். முன்னேற்றம், வளர்ச்சி நிறைந்த காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும் காலகட்டாமாக இருக்கும். பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் காணப்படும். இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். இழுபறியாக இருந்து வந்த விஷயங்கள் அனைத்தையும் இனி படிப்படியாக நடக்கும் காலகட்டமாக இருக்கும்.
-
குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்கு பேச்சில் தான் கண்டமே.. இந்த விஷயங்களை செய்திடவே செய்திடாதீங்க -
Guru Peyarchi: கும்ப ராசிக்கு காத்திருக்கும் ஆபத்து.. இந்த விஷயங்களில் மிகுந்த கவனம் அவசியம் -
Guru Peyarchi: மகர ராசிக்கு காத்திருக்கும் ராஜவாழ்க்கை.. இந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் -
Guru Peyarchi: தனுசு ராசியினரே தயாராகுங்கள்! குரு தரப்போகும் அபார யோகங்கள் -
விருச்சிகத்துக்கு பொற்காலம் ஆரம்பம்.. குருவின் அருளால் வரப்போகும் ராஜயோகம் -
Guru Peyarchi: கிங்காக மாறப்போகும் துலாம் ராசி.. 10 இல் வரும் குரு அள்ளித் தரும் அதிர்ஷ்ட யோகங்கள் -
அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. லாபத்தில் குரு.. கன்னி ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட் -
குரு 12-இல்.. சிம்ம ராசிக்கு வெளிநாட்டு யோகம், புதிய வாய்ப்புகள்.. வாழ்க்கையில் பெரிய திருப்பம்! -
Guru Peyarchi: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் குருப்பெயர்ச்சி.. வாழ்க்கையை மாற்றும் 3 விஷயங்கள் -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. வேலையில் முன்னேற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications