மாசி மாத ராசி பலன் 2024: கும்ப ராசியில் சூரியன் + சனி கூட்டணி.. குடும்பத்தில் குதூகலம் யாருக்கு?
சென்னை: மாசி மாதம் தமிழ் மாதங்களில் 11வது மாதமாகும். கும்ப ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் இதனை கும்ப மாதம் என்றும் அழைக்கின்றனர். தமிழ் மாதங்களில் 11வது மாதம் மாசி மாதம். இது கும்பமாதம் என்றும் போற்றப்படுகிறது. இந்த மாதத்தின் துவக்கத்தில் சூரியன் புதனுடன் இணைந்து கும்ப ராசியில் சஞ்சரிக்கின்றனர். கிரகங்களின் கூட்டணி, சஞ்சாரத்தினால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் சனியோடு சஞ்சரிப்பதால் மாத வருமானம் அதிகரிக்கும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். லாபம் அதிகரிக்கும் பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்க வழியில் நன்மைகள் நடைபெறும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10ஆம் வீட்டில் சுக்கிரன் உடன் பயணம் செய்கிறார். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் படிப்புக்காக செலவுகள் அதிகரிக்கும். புத்திக் கூர்மை அதிகரிக்கும். குரு ஜென்ம ராசியில் பயணம் செய்வதால் புதிய சொத்துக்களில் சேர்க்கை ஏற்படும். உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.

ரிஷபம்: உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சனியோடு சூரியன் பயணம் செய்கிறார். செய்யும் செயல்கள் சிறப்படையும். படித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும். சிலருக்கு அரசு வேலையும் கிடைக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 9ஆம் வீட்டில் சுக்கிரன் உடன் சஞ்சரிக்கிறார். வீடு நிலம் போன்றவற்றில் முதலீடுகள் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வீட்டில் உங்களின் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். சகோதரர்கள் உதவி செய்வார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் நன்மைகள் ஏற்படும்.
மிதுனம்: சூரியன் ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சனியோடு சஞ்சரிப்பதால் உயர் அதிகாரிகளினால் நன்மை உண்டாகும், வேலை விசயமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். செவ்வாய் சுக்கிரன் உடன் இணைந்து 8ஆம் வீட்டில் பயணம் செய்வதால் கவனம் தேவை. வாகன பயணங்களில் நிதானம் அவசியம். வீட்டு வாடகை மூலம் வருமானம் அதிகரிக்கும் செய்யும் தொழிலில் வருமானம் கூடும். உங்கள் ராசிநாதன் புதன் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் சொந்தமாக செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
கடகம்: சூரியன் சனியோடு இணைந்து எட்டாமிடத்தில் பயணம் செய்யப்போவதால் வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளால் தொல்லை உண்டாகும், அப்பாவினால் மனக் கஷ்டம் உண்டாகும். செவ்வாய் 7ஆம் வீட்டில் சுக்கிரன் உடன் பயணம் செய்வதால் காதல் மலரும். திருமணம் சுபகாரியம் விசயமாக பேசலாம். செய்யும் தொழில் விருத்தியடையும் புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வங்கியில் சேமிப்பு அதிகரிக்கும், சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே பாசம் அதிகரிக்கும். மனைவியால் நன்மை உண்டாகும்.
சிம்மம்: உங்கள் ராசிநாதன் சூரியன் சனியோடு இணைந்து உங்கள் ஜென்ம ராசிக்கு ஏழாமிடத்தில் கூட்டணி அமைத்து பயணம் செய்யப்போகிறார். தொழில் வியாபாரம் காரணமாக அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும், அப்பாவினால் நன்மை உண்டாகும். செவ்வாய் ஆறாம் வீட்டில் சுக்கிரன் உடன் பயணம் செய்வதால் பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும் புதன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருக்கிறார். ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை. உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அம்மாவினால் நன்மை உண்டாகும் புதிய சொத்துகளை வாங்குவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும்.
கன்னி: சூரியன் சனியோடு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். அப்பாவுடன் சச்சரவைத் தவிர்க்கவும், வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. செவ்வாய் சுக்கிரன் உடன் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வதால் பிள்ளைகள் உடல் ஆராக்கியத்தில் அக்கறை தேவை. காதல் மணியடிக்கும் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக மெதுவாக செல்லவும். மின் சாதனங்களை கையாளும் பொழுது கவனம் தேவை. வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். நீண்ட நாள் கனவு நனவாகும், நண்பர்களால் நன்மை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications