நரம்பு கோளாறு..தூங்கும் போது கெண்டைக்கால் புடிச்சு இழுக்குதா?பயப்படாதீங்க பரிகாரம் இருக்கு
சென்னை: உடல் ஆரோக்கியத்திற்கும் நவ கிரகங்களுக்கும் பங்கு உண்டு. நோய் பாதிப்பு ஏற்பட்டால் நாம் மருத்துவரிடம் செல்வோம். அதே நேரத்தில் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடமும் சொல்வோம். சிலருக்கு சிறுவயதில் இருந்தே நரம்பு பிரச்சினை பாடாய் படுத்தும். தூங்கும் போதே கால் நரம்பு சுண்டி இழுக்கும். அதற்கான காரணத்தையும் எந்த கிரகத்தை வழிபட்டால் பரிகாரம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள் புதன். எப்போதும் சூரியன் அருகிலேயே இருப்பதால் அடிக்கடி வக்ரமாகும்,அஸ்தங்கமும் ஆகும். பிற கிரகங்களைப் போல அத்தனை எளிதில் தட்டுப்படாது. எனவேதான் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்கின்றனர். பகல் முடிந்து இரவு தொடங்கும் அந்தி நேரத்தில் சில நிமிடங்கள் புதன் தென்படலாம்.

ஜோதிட சாஸ்திரத்தில் புதன் தாய்மாமன் காரகன். புத்தி நாதன் புதன் கல்விக்கு அதிபதி. ஜாதகத்தில் இவரது பலம் கூடியவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வித்யா காரகன் புதன். கணிதம், லாஜிக், வைத்தியம், ஜோதிடம் ஆகிய அனைத்திற்கும் நாயகன் புதனே. நாடகம், நடனம், புத்தக பிரசுரம் ஆகியவற்றிற்கு புதனின் பலமே வேண்டும். வடகிழக்கு புதனுக்கு உரிய திசை. புதன் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் ஜோதிடக்கலை கை கூடும்.
ஒருவருடைய ஜாதகத்தில் புதன் மட்டும் வலுவாக இருந்தால் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் அந்த ஜாதகர் தன்னுடைய அறிவின் மூலமாகத் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அடுத்தவர் துணையின்றி முன்னேறி விடுவார். ஜாதகத்தில் புதன் வலிமை பெற்றிருக்கும் ஒருவர் எதையும் நேர்மறை சிந்தனையோடு எதிர்கொள்வார்.
புதன் உடலில் நரம்புக்கும், தோலுக்கும் அதிபதி. நரம்புகளுக்கும் புதனே அதிபதி என்பதால், ஒருவருக்கு நரம்புத் தளர்ச்சி போன்ற நரம்பு வியாதிகளை வலுவற்ற நிலையில் இருக்கும் புதன் தருவார். மிக அரிதாகச் சந்திரனும் முழுக்கக் கெட்டு புதனும் வலுவிழக்கும் நிலையில் ஜாதகர் மன நோயாளியாக இருக்கக் கூடும். பச்சை நிற காய்கறிகள்,பச்சை பயறு,சுண்டல் வகைகள்,கற்றாழை,வெங்காயம், போன்ற உணவுகள் நம் உடலில் புதன் கிரகத்தின் ஆதிக்கத்தை வலுவடைய செய்யும்.
புதன் கிரகத்திற்கான கோவில் சீர்காழி அருகில் உள்ள திருவெண்காட்டில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி துவக்கத்தில் வெள்ளைக்காடாக - வெண் மலர்கள் சூழ்ந்த காடாக இருந்திருக்கிறது. அதனால்தான் இத்தலத்திற்குத் திருவெண்காடு என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது. இங்கு இறைவன் பிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்வேதாரண்யேஸ்வராக எழுந்தருளியிருக்கிறார். காசிக்கு இணையான சிவ ஸ்தலம் இது. அந்தக் காலத்தில், காசிக்குச் சென்று வரமுடியாதவர்கள், இங்கே சென்று வந்துள்ளனர். உடலில் நரம்பு தொடர்பான நோய் உடையவர்கள் புதனை வழிபட்டால் தீர்வு நிச்சசயம்.
புதபகவானுக்கு புதன்கிழமை உகந்த நாள். பச்சை வண்ணம் உகந்த நிறம். பாசிப்பயறு உகந்த தானியம். நவரத்தினங்களில் பச்சைக்கல் உகந்தது. திருவெண்காடு வந்து செல்ல முடியாதவர்கள், வீட்டில் இருந்தவாறு, புதன்கிழமையன்று, உபவாசம் இருந்து புதபகவானை வழிபட்டால் வெற்றி நிச்சயம். புத பகவானுக்கு அதி தேவதை ஸ்ரீமஹாவிஷ்ணு ஆவார். அதனால் பிரதி புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் சுலபமான பரிகாரமாகும். புத பகவான் வியாபார பிரிவினைச் சேர்ந்தவர். அதனால் வியாபாரிகள் இவரின் அருளைப் பெற ஸ்ரீ மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வர வேண்டும். மேலும் மதுரை சென்று மீனாட்சி, சோமசுந்தரேஸ்வரரையும் வழிபட்டு வந்தால் வாக்கு வன்மையும், கல்வியில் மேன்மையும் உண்டாகும்.
நோய் தீர்க்கும் தன்வந்திரி பகவான் ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கிறார். புதன் கிழமைகளில் தன்வந்திரி பகவானை ஸ்ரீரங்கம் திருத்தலத்துக்கு வந்து தரிசியுங்கள். நீண்டகால நோயையெல்லாம் தீர்த்து, ஆரோக்கியத்தை வழங்குவார் தன்வந்திரி பகவான். ஸ்ரீரங்கத்தில் தாயார் சந்நிதிக்குச் செல்லும் வழியில், அரங்கனுக்கே வைத்தியம் பார்க்கும் வைத்தியனாக, ஸ்ரீமந் நாராயணப் பெருமாள், தன்வந்திரியாக காட்சி தருகிறார். திருக்கரத்தில் அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் முதலானவற்றுடன் காட்சி தருகிறார். ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் தன் வந்திரி பகவான் மிகுந்த சக்தியுடன் திகழ்கிறார், . இவரை வழிபட்டால், தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம். புதன் கிழமைகளில் தன்வந்திரி பகவானை ஸ்ரீரங்கம் திருத்தலத்துக்கு வந்து தரிசியுங்கள். நீண்டகால நோயையெல்லாம் தீர்த்து, ஆரோக்கியத்தை வழங்குவார் தன்வந்திரி பகவான். புதன்கிழமைகளில் தன்வந்திரி பகவானை வழிபட நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications