புத்தாண்டு 2025: தனுசு ராசியின் ஆட்டம் ஆரம்பம்.. கொட்டிக் கொடுக்கும் குரு பகவான்.. ராஜ வாழ்க்கை தான்
புத்தாண்டு பலன் 2025: புது வருடம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. வரும் புத்தாண்டு பல்வேறு புதுமைகளைத் தர காத்திருக்கிறது. அந்த வகையில், 2025 என்னென்ன நற்பலன்களை தனுசு ராசிக்காரர்களுக்கு அள்ளித் தரப் போகிறது. எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.. (Puthandu palan for dhanusu)
தனுசு ராசிக்காரர்களின் 2025 ஆவது வருடம் மகத்துவத்தை தரக்கூடிய ஆண்டாக அமையும். ராசிக்கு பத்தில் இருந்த கேது பகவான் 9 ஆம் இடத்துக்குப் போகிறார். அர்த்தாஷ்டமத்தில் இருந்த ராகு 3 ஆம் இடத்துக்கு வருகிறார். 3 இல் மறைந்திருந்த சனி பகவான் நான்காம் இடத்துக்குச் செல்கிறார். அர்த்தாஷ்டம சனி ஆரம்பிக்கப் போகிறது என்று உங்களின் மனதில் ஒரு சஞ்சலம் இருந்துகொண்டே இருக்கும். கவலையே பட வேண்டாம். அர்த்தாஷ்டமத்தில் சனி அமரக்கூடிய நேரம் ராசி நாதனாக இருக்கக்கூடிய குரு பகவான் ஆறாவது இடத்தில் இருந்து ஏழாம் இடத்துக்குப் பெயர்ச்சியாகிறார். (New year rasi palan for dhanusu)

மே மாதத்தில் வரக்கூடிய குருப்பெயர்ச்சி ஏழாம் இடத்துப் பார்வையாய் ராசியைப் பார்ப்பதால் ஒரு பெரிய தெளிவு, தன்னம்பிக்கை, பல முக்கிய காரியங்களை எடுத்து அதில் சாதிக்கக்கூடிய வருடமாக 2025 ஆம் ஆண்டு இருக்கும். வேலை, பட்டம், பதவி, புகழை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு உங்களைத் தேடி வரப்போகிறது. (2025 தனுசு ராசிக்கு எப்படி இருக்கப் போகிறது)
அரசியலில் இருக்கக்கூடியவர்களுக்கு புதிய பட்டம், பதவிகள் கிடைக்கும். வேலைகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த டிரான்ஸ்பர், பதவி உயர்வு கிடைக்கும். படித்துவிட்டு வேலையே கிடைக்கவில்லை என்று காத்திருந்த தனுசு ராசியினருக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு பார்க்காதவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு கடந்த மூன்று வருடம், ஏழரை சனி முடிந்து கூட பெரியளவில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று கவலைப்பட்டவர்களுக்கு இந்த ஆண்டு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையைப் பொருத்தவரை எல்லாம் இருக்கும், ஆனால் வீட்டில் ஏதாவதொரு கஷ்டம், மனஉளைச்சல் இருந்து கொண்டே இருந்திருக்கும். ஏதாவது ஒரு ரூபத்தில் வருத்தம் இருந்து கொண்டே இருந்திருக்கும். இந்த வலிகள் அனைத்தும் உங்களுக்கு தீரப்போகிறது.
தனுசு ராசிக்காரர்களுக்கு இரண்டாம் அதிபதி, மூன்றாம் அதிபதியாக இருந்த சனி பகவான் நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் அமரப்போகிறார். இரண்டு, மூன்றுக்குரிய கிரகம் நான்காம் இடத்தில் வருவதால் இறைவனுடைய அருளால் பெரிய மாற்றம் ஏற்படும். ஊர் மாற்றம், தொழில் மாற்றம், இடமாற்றம், சொத்துபத்துகள் சேரும்.
பழைய வீட்டை புனரமைப்பீர்கள். பழைய வீட்டை விற்றுவிட்டு புது வீடு வாங்குவீர்கள். பூர்வீக ஊர்களில் சொந்த வீடு கட்டுவீர்கள். தொழில் முறை சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த அலைச்சல்கள், முடிக்க முடியாத வேலைகளை முடிப்பீர்கள். முதலீடுகள் பெரிய லாபத்தை தரும். திருமணமாகாத தனுசு ராசிக்காரர்களுக்கு மே மாதத்துக்குப் பிறகு திருமண யோகம் கைகூடி வரும்.
காதலர்களுக்குள்ளான பிரச்னைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி பொங்கும். மூன்றாவது நபர்களால் இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் தீரும். எதிரிகள் கூட நண்பர்களாவார்கள். புதிய தொழில், புதிய வாகனம், சொத்துகள் வாங்கும் அமைப்பு உண்டு. பூர்வ புண்ணியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குட் நியூஸ் தேடி வரும். ஆறில் குரு வந்ததால் எதாவது ஒரு உடல்நலக் கோளாறு ஏற்பட்டுக கொண்டே இருந்திருக்கும். மே மாதத்துக்குப் பிறகு எல்லா பிரச்னைகளும் நீங்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள், பயங்கள் தீரும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கூட்டுத் தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
9இல் கேது வருவதால் தகப்பானரின் உடல்நலத்தில், உறவுகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய தனுசு ராசிக்காரர்களுக்கு ஆதாயம் உண்டாகும். பத்தில் இருந்த கேது 9இல் விலகுவதால் கடந்த ஒன்றரை ஆண்டாக உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைத்திருக்காது, அர்ப்பணிப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்திருக்காது. இந்த 2025 ஆம் ஆண்டில் புதிய பட்டங்கள், பொறுப்புகள், கெளரவம், அந்தஸ்து கிடைக்கும். இவையெல்லாம் பெரிய சாதகமான, சூப்பரான பலனை பெற்றுத் தரும்.
பொருளாதாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணம், காசு வந்து சேரும். ஆனால், அவற்றை சுப விரயமாக மாற்ற வேண்டும். நல்ல காரியங்களுக்கு பணத்தை செலவு செய்வது நல்லது. தனுசு ராசிக்காரர்களுக்கு முதல் பாதியில் எச்சரிக்கை தேவை. தாய் வழி சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வண்டி, வாகனம் சார்ந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
பஞ்சமி திதியன்று சிவபெருமானை வழிபடுவது நல்லது. மொத்தத்தில் 2025 ஆம் ஆண்டு மகத்துவமான, பல்வேறு நற்பலன்களைக் கொடுக்கக்கூடிய ஆண்டாக இருக்கும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications