2023 புத்தாண்டு ராசிபலன்.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிசய மாற்றங்கள் வரப்போகுதாம்
சென்னை: புத்தாண்டு நிறைய பேரின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். சிலரது வாழ்க்கையில் மறக்க முடியாத விசயங்களை தரப்போகிறது. சிலருடைய வாழ்க்கையை புரட்டிப்போடும். 2023ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது என நவ கிரகங்களும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றன. இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் சிம்மம், கன்னி,துலாம்,விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சூரியன் தனுசு ராசியில் இருந்து பயணத்தை ஆரம்பிக்க சுக்கிரன் மகர ராசியில் சனியோடு இணைந்து பயணம் செய்யப்போகிறார். சனி பகவான் ஜனவரி மாதம் திருக்கணித பஞ்சாங்கப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள குரு பகவான் மே மாதம் முதல் மேஷ ராசியில் இடப்பெயர்ச்சியாகி பயணம் செய்யப்போகிறார். குரு பகவானின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு பலவித நன்மைகளையும் பொருளாதார வளர்ச்சியையும் தரப்போகிறது.
ராகு கேது பெயர்ச்சியும் அக்டோபர் மாதம் நிகழப்போகிறது. மேஷ ராசியில் உள்ள ராகு மீனம் ராசிக்கும் துலாம் ராசியில் உள்ள கேது விருச்சிக ராசிக்கும் பயணம் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இந்த நவகிரகங்களின் இடப்பெயர்ச்சியும் சில ராசிக்காரர்களுக்கு வெற்றியையும் சில ராசிக்காரர்களுக்கு சோதனையையும் தரப்போகிறது. சில ராசிக்காரர்கள் சாதிக்கப்போகிறீர்கள். யாருடைய வாழ்க்கையில் நவ கிரகங்களும் அதிசயிக்கத்தக்க மாற்றத்தையும் வெற்றியையும் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே...உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. பாக்ய ஸ்தானத்தில் புத்தாண்டு பிறக்கப்போகிறது. நிறைய பணவரவு வரும். நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். சொத்து சேர்க்கை உண்டாகும். எத்தனையோ பிரச்சினைகள் வந்தாலும் அதை எளிதில் சமாளிப்பீர்கள். எதிரிகளை துவம்சம் செய்யப்போகிறீர்கள். சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. சச மகா யோகம் கைகூடி வரப்போகிறது. ஏற்கனவே குருவின் அருளினால் விபரீத ராஜயோகம் கைகூடி வரப்போகிறது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். விபரீத ராஜயோகம் கைகூடி வரப்போகிறது. குரு பகவானின் பார்வையும் பயணமும் சாதகமாக உள்ளது. எத்தனையோ சிக்கல்களை கடந்து வந்திருப்பீர்கள். இந்த ஆண்டு குருபகவான் ஏப்ரல் மாதம் பாக்ய ஸ்தானத்திற்கு செல்கிறார். ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்பது போல பாக்ய ஸ்தானத்தில் இருந்து கிடைக்கும் குருவின் பார்வை பலவித நன்மைகளை தரப்போகிறது. ராகு கேதுவின் பயணம் சாதகமாக உள்ளது. ஒன்பதாம் வீட்டு ராகு நிறைய பண வரவையும் கூடவே செலவுகளையும் தருவார். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு பகவான் எட்டாம் வீட்டிலும் கேது பகவான் இரண்டாம் வீட்டிற்கு வருகிறார். பேசும் வார்த்தைகளில் நிதானமும் கவனமும் தேவை.

கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 2023ஆம் ஆண்டு நிறைய மாற்றங்களையும் புதுவித யோகங்களையும் கொடுக்கப்போகிறது. கடினமான காரியங்களைக் கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். வீடு கட்ட வேண்டும் இடம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஆண்டு இறைவன் அருளினால் இடம் வாங்கி வீடு கட்டுவீர்கள். சனிபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து ஆறாம் வீட்டிற்குள் அடி எடுத்து வைக்கப்போகிறார். எத்தனையோ சம்பவங்களை கடந்த ஆண்டு சந்தித்து கடந்து வந்திருப்பீர்கள். இந்த ஆண்டு சவால்களை எல்லாம் சாதனைகளாக மாற்றப்போகிறீர்கள். குரு பகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். சுப காரியங்களுக்கு நிறைய செலவு செய்திருப்பீர்கள். திருமணமான தம்பதியினருக்கு இந்த ஆண்டு குழந்தை பாக்கியம் கைகூடி வரப்போகிறது. கடன்பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. இரண்டாம் வீட்டில் உள்ள கேது பலவித சோதனைகளைக் கொடுப்பார். வாக்கு தவற வைப்பார். இந்த ஆண்டு கேது உங்கள் ராசிக்கு வரப்போவதால் கெடுத்து கொடுப்பார் கேது. அதாவது தீய விசயங்களைக் கெடுத்து நல்ல விசயங்களைக் கொடுப்பர் கேது பகவான். உங்களுக்கு மன குழப்பங்கள் ஏற்படும் கவனம் தேவை.

துலாம்
சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே..உங்களுக்கு 2023ஆம் ஆண்டில் சனிபகவானும், குரு பகவானும் சாதகமான பலன்களைத் தரப்போகின்றனர். ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து உள்ள குரு பகவான், வேலையில் நல்ல முன்னேற்றத்தை தரப்போகிறார். மே மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு குரு பலன் வரப்போகிறது. குரு பகவானின் பரிபூரணமான பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போவதால் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகப்போகிறது. உங்களுக்கு திருமணயோகம் கூடி வரப்போகிறது. சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அனைத்தும் இந்த ஆண்டு நீங்கப்போகிறது. அர்த்தாஷ்டம சனி பகவான் உங்களை விட்டு நீங்கப்போகிறது. அம்மாவிற்கு நோய் வந்து சிரமத்தை ஏற்படுத்தியது. இனி அம்மாவிற்கு இருந்த உடல் நல பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. ஏழாம் வீட்டில் ராகு இருப்பதால் குடும்பத்தில் சின்னச் சின்ன குழப்பங்கள் வந்து நீங்கும். பல வகைகளிலும் இந்த ஆண்டு பணம் வரப்போகிறது. லாட்டரி, பங்குச்சந்தை முதலீடுகளில் திடீர் ஜாக்பாட் அடிக்கப்போகிறது. வரப்போகும் பணத்தை பத்திரமாக சேமித்து முதலீடு செய்வது நல்லது. புது வீடு கட்டலாம், சொத்துக்களாகவும் வாங்கி சேமிக்கலாம். வெளிநாடுகளில் வேலைக்காக அப்ளை செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்போகிறது. மிகப்பெரிய ராஜயோகம் இந்த ஆண்டு கிடைக்கப்போகிறது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் நீங்கப்போகிறது. உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்புகள் நீங்கப்போகிறது. படித்து முடித்து விட்டு நல்ல வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்போகிறது. மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையப்போகிறது. அக்டோபர் மாதம் ராகு கேது பெயர்ச்சி அற்புத மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. மன உளைச்சல் நீங்கப்போகிறது. விநாயகர் வழிபாடு உங்களுக்கு நன்மைகளைத் தரப்போகிறது. உங்களுக்கு மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே..கடந்த காலங்களில் பலவித சோதனைகளைக் கடந்து வந்த உங்களுக்கு 2023ஆம் ஆண்டில் நல்ல பண வருமானம் வரும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குரு பகவானின் பார்வை மே மாதம் வரை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மதிப்பு மரியாதை உயரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பதவி உயர்வு தேடி வரும். திருமண பாக்கியம் கைகூடும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பகவான் இன்னும் சில மாதங்களில் ஆறாம் வீட்டிற்கு செல்கிறார். வீடு கட்ட கடன் கிடைக்கும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு நினைத்த கல்லூரிகளில் உயர்கல்வி படிக்க யோகம் வரும். படிப்பில் கவனமும் அக்கறையும் தேவை. அர்த்தாஷ்டம சனி காலம் என்பதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உங்களுடைய ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. கை கால் வலி உள்ளிட்ட பிரச்சினைகள் வந்து போகும். ராகு ஆறாம் வீட்டிலும் கேது விரைய ஸ்தானத்திலும் பயணம் செய்கின்றனர். நினைத்த காரியம் வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. 2023ஆம் ஆண்டினை உற்சாகத்துடன் அனுபவிக்கத் தயாராகுங்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications