புத்தாண்டு ராசி பலன் 2026: துலாம் ராசியினருக்கான புத்தாண்டு பலன்கள்.. குட் நியூஸ் வருமா
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்தப் புத்தாண்டில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.

திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
துலாம் (Thulam new year rasi palan):
துலாம் ராசிக்கு ராசிக்கு 5 ஆம் இடத்தில் ராகு, 6 ஆம் இடத்தில் சனி இருக்கிறார். 9 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் மே மாதத்திற்குப் பிறகு 10 ஆம் இடத்திற்கு வருகிறார். இந்த ஆண்டு முழுக்க கேது பகவான் டிசம்பர் முதல் வாரம் வரை உங்களுக்கு சிம்மத்தில் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். போட்டித் தேர்வு, ரயில்வே, டிஎன்பிஎஸ்சி, நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும்.
வெளிநாட்டு வேலை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு உண்டாகும். வெளியூர், வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். திருமணம் கண்டிப்பாக நடக்கும். காதல் இருந்தால் கண்டிப்பாக அது கைகூடும். வீட்டில் ஒப்புக்கொள்ளும் சூழல் ஏற்படும். பண வருமானம் நன்றாக இருக்கும். எதிர்பாராத பணவரவு ஏற்படும். கடன்கள் இருந்தால் அதனை அடைக்கும் யோகம் ஏற்படும்.
குழந்தை பாக்கியம்
குழந்தை பாக்கியம் ஏற்படும். செயற்கை முறையிலாவது குழந்தை பெறும் யோகம் உண்டாகும். நீதிமன்றம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். வேலை இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். நிரந்த வேலை கிடைக்கும். தொழில் அபிவிருத்தி ஏற்படும். வேலையில் அதீத அழுத்தம் உண்டாகும். வேலைகளை தள்ளிப் போடாமல் இன்றைய வேலையை இன்றே முடிப்பது நன்மையைத் தரும்.
கவனம்
வேலைகளை மற்றவர்களிடம் கொடுத்தாலும் நீங்கள் அதில் கவனமாக இருப்பது நல்லது. வேலை தொடர்பான தகவல் தொடர்பில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குழந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கால் பிடிப்பு, சுழுக்கு, நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. மூத்த சகோதரர்களுடன் சிறு சிறு வருத்தங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications