புத்தாண்டு ராசி பலன் 2026: விருச்சிக ராசிக்கு புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்குமா..தொழில், பணவரவு எப்படி
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. இந்தப் புத்தாண்டில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கப் போகிறது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.

திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
விருச்சிகம் (Kanni new year rasi palan):
விருச்சிக ராசிக்கு 10 ஆம் வீட்டில் கேது பகவான், 4 ஆம் இடத்தில் ராகு பகவான், 5 ஆம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். 8 ஆம் இடத்தில் இருக்கும் அஷ்டமகுரு மே மாதத்திற்குப் பிறகு 9 ஆம் இடத்திற்கு வருகிறார். பூர்வீக சொத்துகளில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். விரும்பிய சொத்துகள் கிடைக்கும். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு சிறந்த காலமாக இருக்கும்.
தொழில் வளர்ச்சி
உங்களுடைய தொழிலின் பெயர் வளர்ச்சி அடையும். இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. விரும்பிய இடத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படும். மறுதிருமணம் நடக்கும். வீடு மாற்றம் செய்யும் நிலை ஏற்படும். தந்தை மூலமாக ஆதரவு உண்டாகும். படிப்பில் அதிக கவனம் செலுத்தும் நிலை ஏற்படும். 5 ஆம் இடத்தில் சனி இருப்பதால் குழந்தைகளுக்கு அதிகமான மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
நிதானம், கவனம்
வண்டி, வாகனங்களில் அதிகளவிலான பழுதுகள் ஏற்படும். இன்ஜினில் பழுதுகள் ஏற்படும். எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்காமல் போகும். கணவன் மனைவிக்குள் நிறைய கருத்து வேறுபாடு, தாம்பத்தியம் குறையும் சூழ்நிலை ஏற்படும். அதிக நியாபக மறதி ஏற்படும். அதனால், எல்லா விஷயத்திலும் கவனமாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும்.
சொத்துகள் கிடைக்கும்
சொத்துகள் கிடைக்கும் யோகம் ஏற்படும், சொந்த வீடு, நிலம் வாங்கக்கூடிய காலகட்டம். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிகளவிலான லாபங்கள் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் ஏற்றம் காணப்படும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications