2015 புத்தாண்டு ராசி பலன்கள்
- ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்பிரமணியன்
2015ஆம் ஆண்டு பிறந்து விட்டது. எப்படி இருக்குமே இந்த வருடம் என்று கலங்கி போவார்கள் பலரும். உங்களுக்காகவே இந்த ராசிபலன் எழுதப்பட்டுள்ளது.
பொதுவான ராசி பலன்கள் என்பது அப்போதைய கிரகங்களின் நிலையை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு வேகங்களைக் கொண்டுள்ளன.
வருட கிரகங்களான குரு, சனி மற்றும் ராகு-கேதுக்களை அடிப்படையாகக் கொண்டு வருட பலன்கள் இங்கு கூறப்பட்டுள்ளன. அவரவர்களின் ஜாதக கோள்களின் நிலை, தசாபுத்தி, கோசாரம் மற்றும் ஜாதக யோக அவயோகங்களுக்கு தகுந்தபடி பலன்கள் மாறுபடலாம். இங்கு கூறப்பட்டுள்ளவை ராசியை அடிப்படையாகக் கொண்டு கூறப்பட்டுள்ள பொதுவான பலன்களாகும்.

மேஷம்:
பொதுவாக தொழில் உத்தியோகத்தில் சிரம நிலை காணப்படும். பொருளாதார நிலையும் சுமாராக இருக்கும். செலவுகளும் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. நெருங்கிய உறவினர் ஒருவரை இழக்க நேரிடலாம். ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும்.

ரிஷபம்:
தொழிலில் மந்த நிலை காணப்படும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் சிரம நிலையில் இருக்கும். வயிற்றில் நோய் உருவாகும். குழந்தைகளால் நிம்மதி குறையும். ஆன்மீகப்பயணம் உண்டாகும். பல நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் வெற்றியடையும்.

மிதுனம்:
தொழில் உத்தியோகம் வியாபாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலில் எதிரிகள் தோன்றுவார்கள். நிலம் வீடு வாகன வகைகளில் பிரச்சினை உருவாகும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். மிக அதிக அளவில் பணவரவு இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் கவனம் தேவை.

கடகம்:
தொழில் தொடர்பாக மனதில் குழப்பம் அதிகரிக்கும். பொருளாதாரநிலையும் மனதிற்கு மன மகிழ்ச்சி தராது. அண்ணன் தம்பி உறவில் பிரச்சினை உருவாகும். குலதெய்வ வழிபாடு சிறக்கும். எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். எல்லோரிடமிருந்தும் தனிமையாக இருப்பதாக உணர்வீர்கள். ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் ஏற்றம் காணப்படும்.

சிம்மம்:
அதிகமான செலவுகள் மனதை அலைகழிக்கும். ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு செலவுகள் குறையும். எது பேசினாலும் பிறர் தவறாக புரிந்து கொள்வார்கள். குடும்பத்தில் ஒற்றுமை குறைவாக இருக்கும். தொழில் நிலையும் அவ்வளவு சிறப்பாக இருக்காது. ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு மன பாரம் கொஞ்சம் குறையும்.

கன்னி:
தொழிலில் மேன்மை நிலை உருவாகும் புதிதாக தொழில் ஒன்றை துவங்கி வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். பணவரவு அபரிமிதமாக இருக்கும். பணத்தால் எல்லாவற்றையும் சாதிப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். ஜூலை 14ம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் கவனம் தேவை.

துலாம்:
குடும்பத்தில் சச்சரவுகள் அதிகரிக்கும். செலவுகளும் கைமீறும். தொழில் மந்தநிலையில் இருக்கும். பணவரவும் திருப்தி இருக்காது. உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். தொழிலுக்காக அலைச்சல் அதிகரிக்கும். பாதத்தில் வலி தோன்றும். வெளிநாட்டு தொடர்புகள் லாபத்தைத் தரும். ஜூலை 14ஆம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.

விருச்சிகம்:
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனம் செயல் படும் வேகத்திற்க்கு உடல் செயல்படாது. தொழில் உத்தியோகம் சுமாராக இருந்தாலும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எண்ணிய யாவும் எளிதில் நிறைவேறும். குழந்தைகளால் மன நிம்மதி குறையும். ஜூலை 14ஆம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் கவனம் தேவை.

தனுசு:
பணம் கொடுக்கல் வாங்கலில் மந்த நிலை காணப்படும். தொழில் நிமித்தமாக அதிகமான செலவுகள் உருவாகும். எதிர்பாராத செலவுகள் மனதை அலைகழிக்கும். அலுவலகத்திலும் வீட்டிலும் பிரச்சினைகள் உருவாகும். அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஜூலை 14ஆம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்:
தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவு மிகவும் சிறப்பான நிலையில் இருக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். ஜூலை 14ஆம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் கவனம் தேவை.

கும்பம்:
தொழில் நிலவரம் சீராக இருக்கும். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் சச்சரவு உண்டாகும். வாகனங்களை கையாளுவதில் கவனம் தேவை. ஜூலை 14ஆம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் மேன்மை காணப்படும்.

மீனம்:
அதிகமாக செல்வம் சேரும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும். தொழில் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சிறு சச்சரவு உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஜூலை 14ஆம் தேதிக்குப் பிறகு பொருளாதார நிலையில் கவனம் தேவை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications