ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நன்மை தரும் 27 நக்ஷத்திர காயத்ரி ஹோமங்கள்
ஜென்ம நட்சத்திர நாளில் வழிபாடு செய்தால் நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கை. நட்சத்திர காயத்ரி ஹோமம் செய்தால் குடும்பம் செழிக்கும்.
சென்னை: உலகில் பிறந்த ஒவ்வொருவரும் 27 நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் என்பதால், அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நக்ஷத்திரகாரர்களுக்கும் தனித்தனி நட்சத்திர காயத்ரி ஹோமம் செய்தால் நன்மைகள் நடைபெறும். வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வரும் 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை நடைபெறுகிறது.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். ஆனால் இன்று நாம் எல்லாரும் தினமும் ஆலயத்துக்கு செல்கிறோமா என்றால், இல்லை எனபது தான் பதிலாக இருக்கும். நம்மில் அதிக சதவீதம் பேர் தினமும் காலை, மாலை ஆலயத்துக்கு செல்வதில்லை.
இந்துக்களில் பெரும் பாலானவர்கள் திருவிழாக்களில் மட்டுமே கோவில் பக்கம் வந்து செல்கிறார்கள். தற்போதைய இயந்திரமான வாழ்க்கையில் அனைவரும் ஒருநாள் செல்வதே மிகவும் கடினமாக உள்ளது. இந்த சூழலில் இருப்பவர்கள் குறைந்த பட்சம் வாரம் ஒரு தடவையாவது ஆலயம் செல்ல முயற்சி செய்யலாம்.
ஒருவர் நல்ல நட்சத்திரத்தில் பிறந்திருந்தால், அவர் வாழ்க்கையை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் ஆற்றல் அந்த நட்சத்திரத்துக்கு உண்டு. அதனால்தான் ஜென்ம நட்சத்திரம் தினத்தன்று ஒருவர் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் உங்களது ஜென்ம நட்சத்திரம் தினம் எந்த தேதியில் வருகிறது என்பதை குறித்து வைத்துக் கொண்டு, அன்றைய தினம் எவ்வளவு வேலை இருந்தாலும் சரி, சிறிது நேரம் ஒதுக்கி ஆலயத்துக்கு சென்று உங்கள் நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்யுங்கள். அது உங்கள் ஜென்ம நட்சத்திரத்தை பலம் பொருந்தியதாக மாற்றும். 27 நட்சத்திரங்களும் பெண் தேவதைகளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் நமது ஜென்ம நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்யும் போது, அந்த நட்சத்திரத்துக்குரிய பெண் தேவதை மனம் குளிர்ந்து உங்களுக்கு ஆற்றலை அள்ளி, அள்ளி தருவாள்.

27 நக்ஷத்திர காயத்ரி ஹோமம் பலன்கள்
அனைவருக்கும் நன்மைகள் நடைபெற வேண்டும் என்பதற்காகவே வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "கயிலை ஞானகுரு" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் நன்பகல் 12.00 மணி வரை நடைபெறுகிறது. உலக நலன் கருதி மக்கள் ஆதித்யனுடைய அருள் பெற்று நக்ஷத்திர தோஷங்கள் அகலவும், குடும்ப க்ஷேமத்திற்காகவும், உலகில் பிறந்த அனைத்து மக்களுக்காகவும், கண் திருஷ்டி விலகவும், தடைபடும் காரியங்களில் வெற்றி பெறவும், 27 நக்ஷத்திர காயத்ரி ஹோமங்கள் நடைபெற உள்ளது. ஜென்ம நட்சத்திரத்தின் பலன்கள் பெற நடைபெறும் இந்த யாகத்தில் பங்குபெற்று பலன் பெறலாம்

ஜென்ம நட்சத்திர வழிபாட்டில் உள்ள ஆன்மீக ரகசியம்
அல்லது ஜென்ம நட்சத்திர தினத்தன்று அவரவர் தகுதிக்கு ஏற்ப அருகில் உள்ள ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் செய்வது நல்லது. வசதி இருப்பவர்கள் ஹோம வழிபாடு செய்தால் கூடுதல் பலனை பெற முடியும். ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால், எந்த ஒரு தெய்வமும் அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும். ஜென்ம நட்சத்திர வழிபாட்டில் உள்ள ஆன்மீக ரகசியமே இது தான். எனவே ஜென்ம நட்சத்திர வழிபாடு வாய்ப்பை ஒரு போதும் தவற விடாதீர்கள். குறைந்தபட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

பித்ருக்களின் ஆசி கிடைக்கும்
ஜென்ம நட்சத்திரத் தினத்தன்று எந்த ஆலயத்துக்கு சென்று, எந்த கடவுளை வழிபட வேண்டும் என்று தெரிந்து வைத்து கொண்டு வழிபாடு செய்தால் கர்ம வினைகள் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை - எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும். 27 நட்சத்திரத்தில் பிறந்த மக்கள் ஜென்ம நக்ஷத்திரத்தின் மஹிமையை புரிந்து கொள்ளும் விதத்திலும், நக்ஷத்திர தோஷங்கள் அகலவும், நக்ஷத்திரங்களின் மூலம் ஏற்படும் பூர்ண நல்பலன்களை பெறவும், அனைவரும் அனைத்தும் பெற்று ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெற தன்வந்திரி பீடத்தில் வருகிற 15.07.2018 நடைபெறும் 27 நக்ஷத்திர காயத்ரி ஹோமங்களில் பங்கேற்று பலன் பெறலாம்.

நட்சத்திர காயத்ரி மந்திரங்கள்
* அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்
* பரணி
ஓம் க்ருஷ்ண வர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்
* கிருத்திகை
ஓம் வன்னி தேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
* ரோஹிணி
ஓம் ப்ராஜா விருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்
* மிருகசீரிடம்
ஓம் சசி சேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
* திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்
* புனர்பூசம்
ஓம் ப்ரஜா வ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
* பூசம்
ஓம் ப்ரம்ம வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்
* ஆயில்யம்
ஓம் ஸர்ப ராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்
* மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்
* பூரம்
ஓம் அரியம் நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்
* உத்திரம்
ஓம் மஹா பகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்
* அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்
* சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்
* சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
* விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்
* அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத்
* கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
* மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்
* பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்
* உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்
* திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்
* அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்
* சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்
* பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
* உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
* ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்!

நன்மைகள் நடைபெறும்
மேற்கண்ட யாகத்தில் பங்கேற்பது மற்றும் 27 நக்ஷத்திர காயத்ரீ மந்திரங்களை அவரவர்கள் பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி, பாரயாணம் செய்துவந்தால் வேண்டிய பலன்களை வேண்டியவாறு பெறலாம்.
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் 27 நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் என்பதால், அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நக்ஷத்திரகாரர்களுக்கும் தனித்தனி ஹோமகுண்டங்கள் அமைத்து 27 நபர்கள் மட்டும் அமர்ந்து அவர்கள் கைகளால் வேதவிற்பனர்கள் 27 நக்ஷத்திர காயத்ரி மந்திரங்களை சொல்ல பக்தர்களை செய்யும் யாகமாகும். மேற்கண்ட 27 பேரும் 27 நக்ஷத்திர காரர்களின் கர்த்தாவாக பாவிக்கப்படுகின்றனர்.
27 நக்ஷத்திர காயத்ரீ ஹோமத்தில் பங்கேற்க விரும்பவர்கள் நக்ஷத்திர மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, மஞ்சள், குங்குமம், அன்னதான மளிகைப் பொருகள், நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருள் பெறலாம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203












Click it and Unblock the Notifications