அக்னி நட்சத்திரம்..நோய்கள் அகல மருத்துவ கடவுள் தன்வந்திரி பகவானுக்கு 108 நாட்கள் தொடர் திருமஞ்சனம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 03.03.2023 வெள்ளிக்கிழமை மாசி 19 முதல் 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை ஆனி 3 வரை 108 நாட்கள் தொடர் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
வேலூர்: அக்னி நட்சத்திரம் வந்தாலே அனல் ஆரம்பமாகிவிடும். அம்மை உள்ளிட்ட நோய்களும் மக்களை வாட்டி வதைக்கும். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அக்னி நக்ஷத்திரத்தின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும், வருண பகவானின் கருணை வேண்டியும், உலக மக்கள் நீண்ட ஆயுள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும்,மார்ச் 3.3.2023 வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை வரை மூலவர் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு 108 கலசங்கள் கொண்டு 108 நாட்கள் காலை 10.30 மணி முதல் 11.40 மணிவரை தொடர் திருமஞ்சன திருவிழாவும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை லக்ஷ குங்குமார்ச்சனை சுமங்கலி பூஜை வைபவமும் நடைபெறவுள்ளது.

உலக மக்களை காக்க வேண்டி மஹா விஷ்ணு எடுத்த பல அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று அழைத்து மகிழ்கின்றோம். அவை மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண மற்றும் கல்கி என தசாவதாரங்களாகும். தவிர, தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும் திருமால் எடுத்துள்ளார்.
தன்வந்திரி பகவான் அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீவிஷ்ணு புராணம் மற்றும் பிரமாண்ட புராணத்தில் குறிப்புகள் உள்ளன. திருப்பாற்கடலில் தேவர்களும், அசுரர்களும் அமுதம் கடைந்தபோது கடலில் இருந்து பல்வேறு பொருட்களும், பல தெய்வங்களும் வெளிவந்தன. அப்போது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார்.
அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். நோய் தீர வழிபடலாம் நோயின்றி வாழ வேண்டும் என்பதே பலரது விருப்பம். பணம், சொத்து இருந்தாலும் அதை அனுபவிக்க ஆரோக்கியமான உடல் வேண்டும். நிம்மதியான மனம் வேண்டும். அல்லவா? இப்பூவுலகில் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படும் தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரை வழிபடுவதால் நோய்கள் தீரும். மருத்துவ கடவுள் தன்வந்திரி ஆயுர்வேத மருந்துகளின் அதிபதி. மருத்துவக்கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர்.
மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்துதான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீரங்கநாதருக்கு வைத்தியம் பார்த்தவர் ஸ்ரீதன்வந்திரி பகவான், அவரே ஸ்ரீமன் நாராயணன். அப்படிப்பட்ட தன்வந்திரி பகவானுக்கு 89 பரிவார தெய்வங்களுடன் தனித்திருக்கோவில் இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அனந்தலையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் என்ற பெயரில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தன் பெற்றோருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதத்தில் 1995 ஆம் ஆண்டு அமைத்துள்ளார்.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இங்கு சைவம், வைணவம், ஸ்ரீ சாக்தம், சௌரம், கௌமாரம் மற்றும் காணபத்யம் என 6 மதங்களுக்குறிய தெய்வங்களை கொண்டு 89 பரிவார சந்நதிகளை ஒன்றன்பின் ஒன்றாக அமைத்து அவற்றுடன் 468 சித்தர்கள் சிவலிங்கம் ரூபமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது மிகசிறப்பாகும். மேலும் யாகமே யோகம் - ஹோமமே ஷேமம் என்ற வார்த்தைக்கிணங்க தினசரி பல்வேறு வகையான ஹோமங்கள் நடைபெறும் யக்ஞ பூமியாக திகழ்ந்து வருகிறது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்.
இங்கு வரும் பக்தர்களுக்கு தன்வந்திரி பகவான் வைத்தியம் செய்யும் விதமாக, கையில் அட்டைப் பூச்சி, அமிர்த கலசம், கத்தி மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் தரிசனம் தந்து அருள்பாலிக்கின்றார். இவரை வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இங்கு மற்ற ஆலயங்கள் போன்று தேங்காய் உடைத்தல், சிகை நீக்குதல் உண்டியல் காணிக்கை செலுத்துதல், வாகன பூஜைகள், அங்கப்பிரதக்ஷ்னம் போன்ற வழிபாடுகள் இன்றி அனைத்திற்கும் யாகம் ஒன்றே தீர்வு என்ற வகையில் 365 நாட்களும் வருகைபுரியும் பக்தர்கள் தங்கள் திருக்கரங்களாலே யாகங்கள் செய்து மன நிறைவுடன் செல்கின்றனர், என்பதை காணும் பொழுதில் நமக்கும் மன நிறைவு ஏற்படுகிறது என்பதே நிதர்சனம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகின்ற மாசி 19ம் நாள் 03.03.2023 வெள்ளிக்கிழமை பெருமாளுக்கு உகந்த ஏகாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினம் முதல் வருகிற சோபகிருது வருடம் ஆனி 3ம் நாள் ஜுன் 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை அமாவாசை திதி மிருகசீரிஷம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினம் வரை தினமும் மூலவர் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு 108 கலசங்கள் கொண்டு 108 நாட்கள் காலை 10.30 மணி முதல் 11.40 மணிவரை தொடர் திருமஞ்சன திருவிழாவும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை லக்ஷ குங்குமார்ச்சனை சுமங்கலி பூஜை வைபவமும் நடைபெறவுள்ளது.
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் சிறப்பு
மூலவர் மற்றும் உற்சவர் தன்வந்திரி இந்தியாவின் பல இடங்களில் 665 நாட்கள் சுமார் இரண்டு லட்சம் கிலோமீட்டர் கரிக்கோல பயணம் செய்து 500க்கும் மேற்பட்ட புண்ணிய க்ஷேத்திரம் சென்று 2000க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள பல்வேறு ஆலயங்கள், மடங்கள் சென்று பல மடாதிபதிகளின் வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு பல்வேறு புனித தீர்த்தங்களில் நீராடி 67க்கும் மேற்பட்ட திவ்ய தேசப்பெருமாளின் அபிமானத்தை பெற்று தேசத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்கள் மூலம் 147 தன்வந்திரி ஹோமம் செய்து சுமார் 46 லட்சம் பக்தர்கள் கைப்பட எழுதிய 54 கோடி தன்வந்திரி லிகிதஜப மஹா மந்திரங்களை பெற்று அவற்றை கர்ப்பகிரஹத்தின் கீழ் மந்திரமே யந்திரமாக வைத்து மூலவர் தன்வந்திரி பகவான் பிரதிஷ்டையாகி உள்ளார். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரக மந்திரத்தை குறிக்கோளாக கொண்டு உலக மக்கள் நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை அமைத்துள்ளார். என்பது இந்த ஷேத்திரத்தின் சிறப்பாகும்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெறும் தொடர் திருமஞ்சனத் திருவிழாவிலும் ஆராதனைகளிலும் பங்கேற்று உடலின் எதிர்ப்புத் திறன் உயர்ந்து ஆயுள் ஆரோக்கியம் மேம்படவும், தீராத நோய்கள் தீரவும், கர்மவினை விலகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவும், சகல ஐஸ்வர்யங்களும் பெறவும் மற்றும் பல்வேறு நன்மைகளை பெறலாம் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஸ்ரீ தன்வந்திரி மஹா பிரசாதம்
சுக்கு-வெல்லம், அபிஷேகத் தேன், அபிஷேகத் தைலம், அபிஷேக நெய், குங்குமம், ஹோம பஸ்பம், ஹோம ரக்ஷ்சை, மந்திர ரக்ஷ்சை, மூலிகை ரக்ஷ்சை, ஜப தீர்த்தம், ஔஷத பிரசாதம், முக்குடி கஷாயம், மற்றும் தன்வந்திரி லேகியம் விஷேச காலங்களில் வழங்கப்படுகிறது.
நோய்கள் நீங்கவும், ஆரோக்கியம் மேம்படவும் சகல தேவதைகளின் அருள் பெறவும், கண் திருஷ்டி விலகவும் தினமும் காலை முதல் மாலை வரை மஹா தன்வந்திரி ஹோமமும் திருஷ்டி ஹோமமும் நடைபெறுகிறது. பிரதி ஏகாதசி திதி, சுவாதி, திருவோணம், புனர்பூசம் நட்சத்திர நாளில் காலையில் மூலவர் தன்வந்திரிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. ஆண்-பெண் திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், இராகு-கேது தோஷம் விலக பிரதி பௌர்ணமி தோறும் காலையில் சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெறுகிறது.
சகலவிதமான திருஷ்டி தோஷங்கள் அகலவும் சாபங்கள் நீங்கவும் பிரதி அமாவாசை தோறும் நண்பகல் மிளகாய் வற்றல் கொண்டு சரப சூலினி பிரத்யங்கிரா யாகம் நடைபெறுகிறது. தொழில்-வியாபாரம் சிறக்கவும், பயங்கள் அகலவும், பிரதி அஷ்டமியில் அஷ்ட கால மஹா பைரவர் மற்றும் சொர்ணாகர்ஷண பைரவர் யாகம் மாலையில் நடைபெறுகிறது. பிரதி பஞ்சமியில் வாழ்க்கை வளம் பெறவும் பல்வேறு வகையான தடைகள் விலகவும் செல்வம் செழிக்கவும் பஞ்சமுக வராகி யாகம் மாலையில் நடைபெறுகிறது. தொடர்புக்கு :ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. இராணிப்பேட்டை மாவட்டம். செல் - 94433 30203
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications