வீடு போர்க்களமா இருக்கா - கவலையை விடுங்க... இந்த பரிகாரம் பண்ணுங்க
வீடு என்றால் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் சண்டையே வேலையாக இருந்தால் என்ன செய்வது. வீட்டிற்குள் நுழைந்தாலே போர்க்களமாக காட்சியளிக்கும் இதற்குக் காரணம் வீட்டிற்குள் இருக்கும் எதிர்மறை ச
சென்னை: நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் கல் உப்பு, காய்ந்த மிளகாய், எலுமிச்சம் பழம் போன்றவைகளுக்கு தீய சக்தியை விரட்டும் குணம் உண்டு. அப்போல தீயசக்திகளால் ஏற்படும் பாதிப்பு மனதை சஞ்சலப்படுத்தும். வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் அதை குணப்படுத்த எளிமையான பரிகாரம் பண்ணலாம். வெண் கடுகு தூபம் போட சண்டை சச்சரவுகள் நீங்கும் தீய சக்திகளின் பார்வைகள் நீங்கி நல்ல நேர்மறையான சக்திகள் வீட்டிற்குள் அதிகரிக்கும். வெண் கடுகு பைரவ அம்சம் கொண்டது. தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவ அம்சமான வெண்கடுகின் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
ஒரு வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் இருந்தால், அந்த வீட்டின் மனசஞ்சலங்கள் அதிகரிக்கும். சிலர் காலையில் நன்றாக இருப்பார்கள். ஆனால் மாலையில் உடலுக்கு என்னவென்றே சொல்லமுடியாத நிலை ஏற்படும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும். கல்யாணம் மற்றும் சுப நிகழ்வுகள் வீட்டில் நடக்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும்.
வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஒருவரின் வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருப்பது அதாவது ஏதோ வேலைக்கு போகிறோம் வருகிறோம் என்று இருப்பது வாழ்க்கையே உப்பு சப்பில்லாமல் இருக்கும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் ஏற்படுத்த சில பரிகாரங்களை செய்ய வேண்டும். பைரவரின் துணை இருந்தால் பாதிப்புகள் குறையும். பைரவரின் கணங்களாக இருப்பவை வெண்கடுகு. இவைதான் நமக்கு எற்படும் பாதிப்புகளை நீக்கி நிம்மதியை தருபவை.

கண் திருஷ்டியால் கவலை
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். கண் திருஷ்டியால் சிலருக்கு உடல்நிலை கோளாறுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை. பணம் கிடைப்பதற்கு தாமதம். பணம் வந்தும் பற்றாக்குறை போன்றவை ஜாதகத்திற்கு, கிரக நிலைகளுக்கு அப்பாற்பட்டு, வீட்டிலிருக்கும் எதிர்மறை அதிர்வுகள் காரணமாக பாதிப்புகள் ஏற்படும்.

பாதிப்புகளை குறைக்கும்
வீட்டிற்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஏற்பட்டிற்கும் கண் திருஷ்டி, மேலும் கணவன் மனைவி குழுந்தைகளுடன் சேர்ந்து வெளியில் கிளம்பும்போது, ஏற்படும் குடும்ப கண் திருஷ்டி, சில குடுபங்களில் மாதம் ஒருமுறையாவது மருத்துவமனைக்கு செல்வது போன்ற விஷயங்களால், குடும்ப உறுப்பினர்களை பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு எளிமையான பரிகாரம் உள்ளது.

காய்ந்த மிளகாய் கல் உப்பு
வீட்டில் உள்ளவர்களுக்கு திருஷ்டி சுற்றிப்போட கல் உப்பையும் காய்ந்த மிளகாயும் பயன்படுத்துவார்கள். அதேதான் நம் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை நீக்க பயன்படப்போகிறது. கல் உப்பு, காய்ந்த மிளகாய் 4, எலுமிச்சை பழம் 1. கண்ணாடி கோப்பை 1, இந்த பரிகாரம் வீட்டில் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கும் ஒரு எளிய பரிகாரம். இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் செய்யவேண்டும். அப்போதுதான் பலன்கள் அதிகமாக கிடைக்கும்.

தலைவாசல் மூலையில் உப்பு
ஒரு கண்ணாடி பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி, ஒரு எலுமிச்சை பழத்தை கல் உப்பின் நடுவில் நிற்க வைக்கவேண்டும். பிறகு நான்கு காய்ந்த மிளகாயை அதனை சுற்றி நான்கு மூலைகளிலும் சொருக வேண்டும். மிளகாயின் கூர்மையான பகுதி எதிர்மறை சக்திகளை ஈர்த்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இதனை தலைவாசல் கதவின் உட்புற பகுதியின் மூலையில் வைக்கவேண்டும்.

நேர்மறை சக்திகள் கூடும்
இதனை வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றவேண்டும். அப்படி மாற்றும்போது கல் உப்பு, எலுமிச்சை பழம், காய்ந்த மிளகாய் ஓடும் நீரில் விட்டுவிடலாம் அல்லது மூன்று பொருட்களையும் சேகரித்து யார் காலிலும் படாதவாறு போட்டுவிடவேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதால் வீட்டில் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கலாம்.

வெண்கடுகு தூபம்
இதேபோல தீய சக்திகளை விரட்ட வெண் கடுகு அருமையான பொருள். இது கடவுள் தன்மையைக் கொண்டது. அது பைரவரின் தேவ கணம் ஆகும்.
வீடுகளில் மன அமைதி இல்லாமல், குடும்ப ஒற்றுமை இல்லாமல் உள்ளவர்கள் சாம்பிராணி தூபம் போடும் போது சிறிதளவு வெள்ளைக் கடுகை போட்டு விட்டு வீட்டில் அனைத்து அறைகளிலும் எடுத்துச் சென்று அந்தப் புகையைக் பரவ விட வேண்டும் பின்னர் பூஜை அறையில் அந்த தூபத்தை வைப்பது நல்லது.

பில்லி சூனியம் ஏவல்
மகத நாட்டை ஆண்டு வந்த மயில்வண்ணன் என்ற மன்னன் பெரும் கொடையாளி. மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வந்தான். அவனது புகழ் எங்கும் பரவி இருந்தது. அவன் மீது பொறாமைக் கொண்ட விரோதிகள் அவன் மீது தீய சக்திகளை ஏவி விட்டார்கள். அதனால் நாளடைவில் அவனால் எதையும் சரிவர யோசனை செய்ய முடியாமல் தத்தளித்தான். அவன் குடும்பத்திலும் அமைதி குலைந்தது.

வெண்கடுகும் பைரவரும்
அவன் தனது ராஜ குருவை அழைத்து தன்னுடைய சங்கடங்களைக் கூறி அதற்குப் பரிகாரம் கேட்டான். ராஜகுருவும் அவனுக்கு ஒரு விசேஷ பூஜையை செய்யுமாறு அறிவுரை செய்தார். அதன்படி ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும் என்றும் கூறினார்.

தீய சக்திகள் விலகி ஓடும்
பாத பூஜையிலும் சாம்பிராணிப் புகையிலும் வெண் கடுகை பயன்படுத்த வேண்டும் என்று மன்னன் கேட்க அதற்கு ராஜ குருவோ, மன்னா, வெள்ளைக் கடுகுச் செடிகள் இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும். பிரபஞ்சத்தின் அனைத்து தீய சக்திகளைளையும் அடக்கி ஒடுக்கி வைத்துள்ளவர் பைரவர். எனவே வெண் கடுகு உள்ள இடத்தில் தீய சக்திகள் இருக்க முடியாது. அவை புகையாக மாறும்போது, அதன் உள்ளே உள்ள தேவ கணங்கள் தீய ஆவிகளை அடித்துத் துரத்தும் என்று கூறினார். எனவேதான் நாமும் வெண்கடுகு கொண்டு தூபம் போட தீய சக்திகள் விலகி ஓடும்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..! -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications