For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீண்ட ஆயுள் வேண்டுமா? ஜென்ம நக்ஷத்திர நாளில் பிறந்தநாள் கொண்டாடுங்க!

பிறந்த நக்ஷத்திர நாளில் ஆயுஷ்ய ஹோமம் செய்வது ஆயுளை கூட்டும் என்கிறது வேதம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: பிறந்த குழந்தைக்கு 'மிருத்யூ" பயமின்றி குழந்தை தீர்க்காயுளாக வளர வேண்டுமென்பதற்காக செய்யப்படும் ஹோமமாகும். இதனால் 'ஆயுஷ்ய ஹோமம்" என்று இது பெயர் பெற்றது. ஆயுள் அபிவிருத்திக்கு சர்வேஸ்வரனை வேண்டிச் செய்யும் ஹோமமாகும்.

குழந்தை பிறந்து 12 மாதங்கள் முடிந்து 13வது மாதம் குழந்தை பிறந்த அதே தமிழ் மாதமாகும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்த அதே நக்ஷத்திரம் வரும் தினத்தில் சுபவேளையில் அப்தபூர்த்தி ஆயுஷ்யஹோமம் செய்யப்படுகிறது. அப்த என்றால் ஒன்று, பூர்த்தி என்றால் நிறைவு. எனவே அப்த பூர்த்தி என்பதை 'ஆண்டு நிறைவு" என்றும் சொல்வார்கள்.

ஜென்ம நக்ஷத்திரம்

ஜென்ம நக்ஷத்திரம்

ஜன்ம நக்ஷத்திரத்தில் குழந்தைக்கு புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு ஸ்நானம் செய்து வைத்து, புது ஆடைகள் அணிவித்து, ஆபரணங்களைக் கொண்டு அலங்காரம் செய்வித்து, குழந்தையின் அம்மான் குழந்தையைத் தோளில் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டும். பின்னர் ஹோமம் வளர்த்து, 'ஆயுஷ்ய சூக்தம்" என்னும் மந்திரத்தைக் கொண்டு ஆயிரத்தெட்டு தடவை நல்ல நெய்யைக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும்.
'மிருத்யூ" பயமின்றி குழந்தை தீர்க்காயுளாக வளர வேண்டுமென்பதற்காக செய்யப்படும் ஹோமமாகும். இதனால் 'ஆயுஷ்ய ஹோமம்" என்று இது பெயர் பெற்றது. ஆயுள் அபிவிருத்திக்கு சர்வேஸ்வரனை வேண்டிச் செய்யும் ஹோமமாகும்.

மந்திரங்கள்

மந்திரங்கள்

இத்துடன் கலசத்தால் கும்பம் அமைத்து, வருணனையும், குழந்தையின் நக்ஷத்திர தேவதையையும் ஆவாஹனம் செய்து நக்ஷத்திர சூக்தம் எனும் 27 நக்ஷத்திரங்களை போற்றும் மந்திரங்களைச் செபித்து அக்கலச தீர்த்தத்தை குழந்தைக்கு ஸ்நானம் செய்வித்து தீர்தத்தை உள்ளுக்கும் கொடுக்க வேண்டும். ஹோமம் செய்த நெய்யின் மிச்சத்தில் அன்னத்தைக் கலந்து அதை மந்திர பூர்வமாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

ஜென்ம நட்சத்திரம்

ஜென்ம நட்சத்திரம்

இந்த ஆண்டுநிறைவு, நடப்பு மாதத்தில் இரு நக்ஷத்திரங்கள் வருமானால் பின் வருகிற (இரண்டாவதாக வருகின்ற) நக்ஷத்திரத்திலேயே இதைச் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. சில ஸமயம் ஒரே நக்ஷத்திரம் இரண்டு தினங்களில் வரும். இதனால் என்று அநுஷ்டிப்பது என்ற குழப்பமும் வரும். என்றைய தினத்தில் சூரிய உதயத்திலிருந்து உச்சிப் பொழுதுக்குள் குறைந்தது 12 நாழிகை அதாவது 4மணி 48 நிமிட நேரம் என்று நக்ஷத்திரம் இருக்கிறதோ அன்றைய தினம் அநுஷ்டிக்கவேண்டும்.

பாரம்பரிய முறை

பாரம்பரிய முறை

இதே முறையில்தான் ஒவ்வொரு பிறந்தநாளையும் அனுஷ்டிக்க வேண்டும். ஆனால் முதல் பிறந்த நாளோடு நிறுத்திவிட்டு பிறகு ஷஷ்டியப்த பூர்த்தி (60 வயது நிறைவு) பீமரத சாந்தி (70 வயது நிறைவு) சதாபிஷேகம் (என்பது வயது நிறைவு) சஹஸ்ராபிஷேகம் (ஆயிரம் பிறை கண்டவர்கள்) என முக்கிய நிகழ்வுகளை மட்டும் கொண்டாடுகின்றனர். மற்ற பிறந்த தினங்களை ஒன்றுக்கும் உதவாத அந்நிய கலாசார ஆங்கில வழக்கப்படி கொண்டாடுகின்றனர்.

ஜென்ம நக்ஷத்திரத்தில் கொண்டாடுவதால் என்ன பலன்?

ஜென்ம நக்ஷத்திரத்தில் கொண்டாடுவதால் என்ன பலன்?

ஆத்ம காரகனாகிய சூரியன் பிறந்த ஜாதக சூரியனை தொடுவதால் சூரியனின் பரிபூரன அந்த மாதம் முழுவதும் ஆசி நிலவும். சந்திரன் ஜென்ம நக்ஷத்தில் நிற்பதால் சந்திரனின் ஆசியும் கிடைத்துவிடும். சூரியனும் சந்திரனும் முறையே பித்ருகாரகனாகவும் சந்திரன் மாத்ருகாரகனாகவும் இருப்பதால் பெற்றோரின் பரிபூரன அன்பும் ஆசியும் குழந்தைக்கு கிடைத்துவிடும்.

நவகிரகங்களின் ஆசி கிடைக்கும்

நவகிரகங்களின் ஆசி கிடைக்கும்

ஆயுஷ்ய ஹோமங்கள் செய்யும்போது ஸ்வாஹா தேவி சஹிதம் அக்னி பகவானை வணங்குவதால் செவ்வாய் மற்றும் முருகனின் அருள் கிட்டும். மாமன்மார்கள் தோள் தூக்குவது மற்றும் ஆசீர்வதிப்பதால் புதன் அருள் நிறையும். புரோஹிதர்கள் எனும் அந்தனர்களை கொண்டு ஹோமங்கள் செய்வதாலும் பெரியவர்கள் ஆசி பெருவதாலும் குரு அருள் வற்றாமல் கிடைக்கும். கலஸாபிஷேகம் மற்றும் புதுத்துணி விருந்துணவால் சுக்கிரன் அருள் நிறைய கிடைக்கும். எண்ணை தேய்த்து குளிப்பதால் சனைஸ்வரன் அருள் கிட்டிவிடும். அம்மாவழி தாத்தா பாட்டிகள் மற்றும் அப்பா வழி தாத்தா பாட்டிகளின் ஆசிகளால் ராகு கேதுகளின் ஆசிகளும் கிட்டிவிடும். நவகிரகங்களோடு ஆயுர்தேவதையின் ஆசியும் அளவில்லாமல் கிட்டும்.

மெழுகுவர்த்தியை ஊதலாமா?

மெழுகுவர்த்தியை ஊதலாமா?

இதையெல்லாம் இழந்துவிட்டு ஆங்கில தேதியில் கொண்டாடுவது காலம் காலமாக கடைபிடிக்கும் நமது உன்னதமான மரபுகளையும் கலாசாரத்தையும் விட்டொழித்து அன்னிய கலாசாரத்தில் ஊறி திளைப்பது சரியா? சிந்திப்பீர்!
மேலும் நேர்மறை எண்ணங்கள் நிறைந்த பிறந்த தினத்தில் எதிர்மறையை பரப்பும் விதமாக மைதாவில் செய்த கேக்கை வெட்டுவதும் மெழுகு வர்த்தியை ஊதி அனைப்பதும் என்ன நன்மையை தரப்போகிறது?

கார்ப்பரேட் கலாச்சாரம்

கார்ப்பரேட் கலாச்சாரம்

இன்னும் சில கார்பரேட் அலுவலகங்களில் பிறந்த நாள் கொண்டாடுகிறேன் பேர்வழி என கூற கேக்கை வெட்டி முகம் மற்றும் தலைகளில் பூசி மகிழ்கின்றனர். நமக்கு ஆயுளை கூட்டும் தெய்வங்களுக்கு இப்படிதான் நன்றி கூறுவதா?
நான் எனது ஜென்ம நக்ஷத்திரத்தில் தான் எனது பிறந்த நாளை கொண்டாடுகிறேன். அப்ப நீங்களும் தயார்தானே? பஞ்சாங்கத்தை எடுங்க! பிறந்தநாள் என்று என அறியுங்கள். வாழ்த்துக்கள்!!

English summary
Celebrating our birthday on our Janma Nakshathiram (Birth Star) is the traditional way of birthday. Performing Ayushya homam and getting the blessings of the elders will give us joy and increase our life.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X