For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா பீதியால் கோவில்களில் குறைந்த கூட்டம் - சிங்கப்பூரில் பங்குனி உத்திர தேரோட்டம் ரத்து

கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் மக்கள் பீதியடைந்துள்ளனர். வெளியில் சுற்றாமல் வீடுகளில் முடங்கியுள்ளதால் தெருக்கள் வெறிச்சோடியுள்ளன. பிரபல கோவில்களில் சாமியையும், அர்ச்சகர்களையும் தவிர ஆளே இல்

Google Oneindia Tamil News

சென்னை: உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் 152 நாடுகளில் பரவி உள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 7,500 ஆக உயர்ந்துள்ளது. 1.75 லட்சம் பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. கொரோனா தாக்கிவிடுமோ என்ற அச்சத்தால் மக்கள் தெருக்களில் கூட நடமாடுவதில்லை, இதனால் முக்கிய கோவில்களில் சாமிகளையும், அச்சகர்களையும் தவிர வேறு யாரும் இல்லாமல் வெறிச்சோடி உள்ளது. சிங்கப்பூரில் பங்குனி உத்திர தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    கொரோனா Update: இதுவரை 3 பேர் உயிரிழப்பு

    மக்கள் மன அமைதிக்காகவும் ஆத்ம திருப்திக்காகவும் அதிகம் கூடும் இடங்கள் கோவில் மற்றும் திரையரங்குகள் தான். வீடுகளில் டிவி சீரியல் பார்த்து டென்சன் ஏறியவர்கள் அவ்வப்போது கோவில்களுக்கு சென்று வருவார்கள். இப்போது அதற்கும் ஆப்பு வைத்து விட்டது கொரோனா. வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கித்தான் போயுள்ளனர். பல கோவில்களில் பங்குனி பிரம்மோற்சவம் களைகட்டியுள்ளது. இப்போது திருவிழாக்களை நடத்த அரசு தடை விதித்திருந்தாலும் மாரியம்மன் கோவில்களில் மக்கள் கூடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். முளைப்பாரி ஊர்வலம் பல ஊர்களில் நடந்து கொண்டிருக்கிறது.

    CoronaVirus Disease singapore cancel car festival on Panguni Uthiram

    கொரோனா பீதியால் அதிகம் கவலைப்படுவது கேரளா மாநில மக்கள்தான். அங்குள்ள பிரசித்தி பெற்ற குருவாயூரப்பன் கோவிலுக்கு மக்கள் யாருமே செல்வதில்லை கோவிலில் நித்திய பூஜைகள் மட்டுமே நடைபெறுகிறது. இதனால் எப்போதுமே நிரம்பி வழியும் கோவில் இப்போது காற்றாடுகிறது. இதே போல தமிழ்நாட்டிலும் பல கோவில்களில் கொரோனா சோதனைக்கு பிறகுதான் மக்களை அனுமதிப்பதால் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது.

    கடந்த டிசம்பர் மாதம் முதலே கொரோனா வைரஸ் பரவி வருகிறது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் தைப்பூசம் நடைபெற்றது. இப்போது கொரோனாவில் கோரத்தாண்டவம் அதிகரித்துள்ளதால் பல கோவில்களில் பங்குனி உத்திர திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

    பங்குனி உத்திர தேரோட்டம் ரத்து

    சிங்கப்பூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் இந்த கோவிலில் பங்குனி உத்திர விழாவின்போது வெகுவிமரிசையாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம்தேதி பங்குனி உத்திர விழா நடைபெற உள்ளது. தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்த ஆண்டு பங்குனி உத்திர தேரோட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிங்கப்பூர் முருகன் கோவில் பங்குனி உத்திர தேரோட்ட விழாவில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள். தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் பக்தர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டும் கூட்டம் திரள்வதை தடுக்கும் வகையிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாகவும் இந்த ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது

    English summary
    CoronaVirus Disease singapore cancel car festival on Panguni Uthiram
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X