Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் யாருக்கு அமையும் - எந்த யோகம் அமையும்

சிலருக்கு திருமணமான சில மாதங்களிலேயே குழந்தை பாக்கியம் கிடைத்து விடும். சிலருக்கு பல மாதங்கள் ஏன் சில வருடங்கள் கடந்தாலும் குழந்தைக்காக ஏங்க வைத்து விடும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்புத்திர பாக்கியம் யாருக்கு அமையும் என்று பார்த்தால் 5ம் பாவத்தில் ஆண் கிரகங்களும் பெண் கிரகங்களும் இணைந்து அமைந்திருந்தால் சர்புத்திர பாக்கியமான ஒரு ஆண் ஒரு பெண் குழந்தைகள் உண்டாகும். 5ம் அதிபதி ஆண் கிரகமாக இருந்து பெண் கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும் பெண் கிரகமாக இருந்து ஆண் கிரக சேர்க்கை பெற்றிருந்தாலும் சர்புத்திர பாக்கியம் எனப்படும் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் பிறக்கும்.

திருமணத்திற்கு பின்பு சில பெண்களுக்கு பத்தாவது மாதத்திலேயே இந்த பாக்கியம் கிடைத்து விடுகிறது. ஒரு சிலருக்கு ஒரு வருடமோ, இரண்டு வருடமோ தள்ளி குழந்தை யோகம் அமைகிறது. இன்னும் சிலருக்கு 8, 10 வருடங்கள் கழித்துதான் குழந்தைபேறு கிடைக்கிறது. சிலருக்கு குழந்தை பாக்யம் இல்லாத நிலையும் ஏற்பட்டு விடுகிறது. ஒரு சிலருக்கு முதலில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதன்பிறகு ஆண் வாரிசுக்காக தவியாய்த் தவித்தாலும் அது கிடைப்பதில்லை. அதேபோல் முதலில் ஆண் குழந்தை பிறக்கும் தம்பதியர்களுக்கு பிறகு பெண் குழந்தை பாக்யம் ஏற்படுவதில்லை. அப்படியே கர்ப்பம் தரித்தாலும் அது தங்காமல் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது. இதற்கு எல்லாம் என்ன காரணம்? யாருக்கு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் பிறக்கும் என்று பார்க்கலாம்.

எல்லா கிரக அம்சங்கள், யோகம், பிராப்தம் இருந்தாலும் அதை அனுபவிக்கக்கூடிய நேரம், காலம் வரவேண்டும். குழந்தை யோகமும் அப்படித்தான். கணவன், மனைவி இருவருக்கோ அல்லது ஒருவருக்கோ லக்னாதிபதி, நான்காம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் தசா, புக்தி, அந்தரங்களில் குழந்தை பாக்யம் கூடி வரும். ராகு-கேது திசைகளில் யோகாதிபதிகளின் புக்தியில் சந்ததி விருத்தி ஏற்படும். மற்ற தசா புக்திகளில் தடைகள், கர்ப்பச்சிதைவு ஏற்பட்டால் உரிய பரிகார தலங்களுக்கு செல்வதன் மூலம் சத்புத்திர யோகம் கிடைக்கும்.

புத்திர ஸ்தானம்

புத்திர ஸ்தானம்

ஜாதக கட்டம் ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆதிபத்யம் உள்ளது. அந்த வகையில் ஐந்தாம் இடம், குழந்தை பாக்யத்தைக் குறிக்கும். அந்த வீட்டின் அதிபதியும் மிக முக்கியம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தையும், ஒன்பதாம் இடத்தோடு, நான்காம் வீட்டையும் பார்க்க வேண்டும். இந்த 4, 5, 9 ஆகிய வீடுகள் ) பலம் பெற்றும் அந்த வீட்டிற்குடைய கிரகங்கள் நீச்சம் அடையாமலும் 6, 8, 12ல் மறையாமலும் இருப்பது அவசியமாகும். நீச்ச கிரகத்துடன் சேராமல் இருப்பது மிக முக்கியமாகும்.

குரு பகவான்

குரு பகவான்

ஆண், பெண் இருவரின் ஜாதகங்களில் குரு, செவ்வாய், சுக்கிரனின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும். குருவிற்கு புத்திர பாக்யம் தருவதில் மிக முக்கிய பங்கு உண்டு. ஏனென்றால் குரு புத்திர காரகன் ஆவார். அதாவது புத்திர யோகத்தை தரக்கூடிய அதிகாரம் பெற்றவர். மேலும், போககாரகனும்கூட. அதாவது தம்பதிகளின் தாம்பத்தியத்தில் சம்போகம் எனும் போகசக்தியை தரக்கூடியவர். செவ்வாய் அருளால்தான் தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியும்.

தம்பதிகளின் நெருக்கம்

தம்பதிகளின் நெருக்கம்

பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பவர் இவர். பெண்கள் பூப்பெய்துவதற்கும் இவரே முக்கிய காரணம். ரத்த சம்பந்தமான நோய்கள் இவர் மூலம் உண்டாகும். சுக்கிரன், சிற்றின்பத்தில் நாட்டம் கொள்ளச் செய்பவர். திகட்டாத தாம்பத்யத்தையும் ஈர்ப்பு சக்தியையும் தரக்கூடியவர் ஆண்களின் சுக்கிலத்திற்கும் பெண்களின் சுரோணிதத்திற்கும் இவரே காரண கர்த்தா.

புத்திர பாக்கியம் கிடைக்கும்

புத்திர பாக்கியம் கிடைக்கும்

ஒரு தம்பதியின் ஜாதகங்களில் இந்த மூன்று கிரகங்கள் நல்ல வலிமையுடன் ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் பெற்று நல்ல அம்சத்தில் இருந்தால் விரும்பிய புத்திர யோகம் தானாக கூடிவரும். புத்திர ஸ்தானமான 5ல் அமைந்துள்ள கிரகங்களின் தசா புக்தி காலங்களிலும், 5ம் அதிபதி மற்றும் 5ம் அதிபதி சாரம் பெற்ற தசா புக்தி காலங்களிலும், குரு மற்றும் குரு சாரம் பெற்றுள்ள தசா புக்தி காலங்களிலும் குழந்தை பாக்கியம் உண்டாவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பெண் கிரகங்களின் தசா புக்தி காலத்தில் பெண் குழந்தையும் ஆண் கிரகங்களின் தசா புக்தி காலத்தில் ஆண் குழந்தை யோகமும் கொடுக்கும்.

குழந்தை பிறப்பதில் தடை

குழந்தை பிறப்பதில் தடை

ஆண், பெண் இருவரின் ஜாதகங்களிலும் ஏதாவது குறை இருந்தால்தான் குழந்தை பாக்யம் தடைபடும். இருவரில் ஒருவருக்கு பலம் இருந்தால் தடைகள் நீங்க வாய்ப்புண்டு. லக்னத்திற்கு ஐந்தாம் இடம் புத்திரபாக்யம் தரும் இடம். ஐந்தாம் அதிபதி புத்திர ஸ்தானாதிபதியாவர். இந்த இரண்டும் பலமாக இருப்பது அவசியம்.

கருச்சிதைவு யாருக்கு வரும்

கருச்சிதைவு யாருக்கு வரும்

ஐந்தாம் இடத்தில் ராகு-கேது இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும். ஐந்தாம் அதிபதி ராகு-கேதுவுடன் சேர்ந்தால் புத்திரத்தடை ஏற்படும். ஐந்தாம் வீட்டில் நீச்சக் கிரகம் இருந்தால் புத்திர தடை ஏற்படும். 6, 8, 12ம் அதிபதிகள் ஐந்தாம் வீட்டில் இருந்தால் கருச் சிதைவும், இரண்டுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் தாமதம் ஐந்தாம் அதிபதி நீச்சம் அடைந்தால் புத்திர தோஷம் உண்டாகும். ஐந்தாம் அதிபதி நீச்சக் கிரகத்துடன் சேர்ந்தால் புத்திரதோஷமும் ஐந்தாம் அதிபதியும் குருவும் பலவீனமடைந்தால் புத்திர தடையும் ஏற்படும்.

பெண் குழந்தைகள் யோகம்

பெண் குழந்தைகள் யோகம்

ஜாதகத்தில் ஐந்தாம் இடமானது ரிஷபம், கடகம், துலாம் ஆகி சுக்கிரன், சந்திரன் பார்த்தால் பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கும். ஐந்தாம் இடத்தில் குரு இருந்தால் தாமதமாக குழந்தை பிறக்கும்; குரு புதன் வீடான மிதுனம், கன்னியில் இருந்தால் தாமத புத்திர பாக்கியம் கிடைக்கும். ஐந்தாம் இடத்தில் சூரியன் இருந்து செவ்வாய் பார்த்தால் கருச்சிதைவு உண்டாகும்.

குழந்தை பாக்கிய தடை

குழந்தை பாக்கிய தடை

ஆண் ஜாதகத்தில் விருச்சிக ராசியில் சூரியன், சுக்கிரன் சேர்ந்து இருந்தால் புத்திர தடை ஏற்படும். ஐந்தாம் அதிபதியும்-ராகுவும் சேர்ந்து 6, 8, 12ல் இருந்தால் தத்து புத்திரயோகம். ஆண்கள் ஜாதகத்தில் அலித்தன்மையுடைய கிரகங்களான புதனும், சனியும் சேர்ந்து லக்னம், மூன்று, ஏழு ஆகிய இடங்களில் இருந்தாலும், பார்த்தாலும் விந்தணு குறைபாடுகள், வீரியக் குறைவு ஏற்படும். இதனால் குழந்தை பாக்ய தடை ஏற்படலாம். அல்லது அங்கம் குறை உள்ள குழந்தை பிறக்கும்.

குழந்தை பரிகார தலங்கள்

குழந்தை பரிகார தலங்கள்

குழந்தை பாக்யதடை, அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்கள் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாளை பிரார்த்தித்து, இங்கு தரப்படும் பசுநெய், விளக்கெண்ணெய் பிரசாதத்தை முறைப்படி சாப்பிட்டு வர தோஷ நிவர்த்தி ஏற்பட்டு புத்திரயோகம் கிட்டும். கரு வளர்க்கும் கருவளர்ச்சேரி அகிலாண்டேஸ்வரி கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கும்பகோணம்-திருவாரூர் சாலையில் மருதாநல்லூர் கிராமத்தை அடுத்து உள்ளது. இத்தலத்து அம்மனை பிரார்த்தித்துக் கொள்ள புத்திர பாக்யம் உண்டாகும். இங்கு தரப்படும் மஞ்சள் பிரசாதம் மிகவும் சக்தி வாய்ந்தது. ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர நாளில், சென்னையை அடுத்துள்ள திருவாலங்காடு சென்று சிவனை பிரார்த்தனை செய்து வர புத்திரபாக்கியம் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+