திருமணத்தை தாண்டிய உறவும் காதலும் ஏன் ஏற்படுது தெரியுமா - ஜாதகம் சொல்லும் சேதி

காதல் என்பது அற்புதமான உணர்வு, அந்த காதல் ஒருவருடன் மட்டுமே நிகழ்ந்தால் பாதிப்பு இல்லை. இன்றைய கால கட்டத்தில் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் திருமண வாழ்க்கையையும், குடும்ப உறவுகளையும் சீரழித்து வி

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாரம்பரியம் இன்றைக்கு மாறி வருகிறது. ஆணோ பெண்ணோ இன்றைக்கு திருமணத்தை தாண்டிய உறவில் அதிகமாக ஈடுபடுகின்றனர். ஊடகங்களில் வேலை செய்பவர்கள் சினிமா டிவி சீரியல்களில் வேலை செய்பவர்கள் ஆண்டுக்கணக்கில் ஒரே சீரியலில் தொடர்ந்து நடிப்பதால் அது காதலாகி திருமணத்தில் முடிகிறது. அது இயல்பானதுதான். ஆனால் திருமணமான இருவர் டிவி சீரியலில் சேர்ந்து நடிக்கும் போது இருவருமே குடும்பத்தை மறந்து விட்டு தங்களின் சந்தோஷத்தை மட்டுமே கவனத்தில் கொள்வதால் திருமணத்தை தாண்டிய ரகசிய உறவுகள் ஏற்படுகின்றனர். இந்த ரகசிய உறவு வெளிப்படும் போது குடும்பங்களில் பூகம்பங்கள் ஏற்படுகின்றன. ஒருவரின் ஜாதகத்தை வைத்தும் கிரகங்களை வைத்தும் திருமணத்தை தாண்டிய உறவுகளையும் ரகசிய சிநேகங்களையும் அறிந்து கொள்ளலாம்.

காதல் என்பது அற்புதமான உணர்வு, அந்த காதல் ஒருவருடன் மட்டுமே நிகழ்ந்தால் பாதிப்பு இல்லை. இன்றைய கால கட்டத்தில் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் திருமண வாழ்க்கையையும், குடும்ப உறவுகளையும் சீரழித்து விடுகின்றன. பணத்தேவைகள் மட்டுமல்லாது உடல் தேவைகளும் திருமணத்தை தாண்டிய உறவுகள் ஏற்பட காரணமாகின்றன. அன்பு, காதல், கடமை என்ற வந்த பின்னர் சில மாதங்கள், வருடங்களில் படிப்படியாக காதல் மறைந்து காமமும் உடல் தேவைகளுமே திருமணத்தை தாண்டிய உறவுகளுக்கு காரணமாகிறது.

திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் ஏன் ஏற்படுகிறது என்று ஜாதகத்தை பார்த்து கண்டுபிடிக்கலாம். எட்டாம் வீடு ஆயுள். அவமானம். கண்டம். மரணம். இயற்கையான மரணம். கெட்ட பயம். வளர்ப்பு பிராணிகளால் தொந்தரவு. வட்டி கட்டுதல். உதவிப் பணம். திடீர் அதிஷ்டம். தடை உயில். கெட்ட செயல் போன்றவைகளை குறிக்கும் இடம் ஏழாம் வீட்டிற்கு இரண்டாம் வீடு எட்டாம் இடம். ரகசிய குடும்ப உறவை குறிக்கும் இடம். இந்த இடத்துடன் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடம் ஐந்தாம் பாவக அதிபதி, ஏழு களத்திர ஸ்தானம் இந்த இடங்களின் மூலம், கிரகங்களின் கூட்டணியை வைத்தும் முடிவு செய்யலாம்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

உச்சநீதிமன்ற தீர்ப்பு

நாட்டின் குடும்ப உறவுகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் தெரியாமல், அவற்றுக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் சமீபத்தில் ஒரு வழக்கில் தீர்ப்பளித்தனர். திருமணத்தை மீறிய உறவு தவறில்லை என்று கூறிய நீதிபதிகள் ஐபிசி 497பிரிவை ரத்து செய்தனர், இதன் மூலம் கள்ளக்காதல் குற்றமில்லை என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது என்று பலரும் பகிரங்கமாக ஒன்றுக்கும் மேற்பட்ட உறவில் ஈடுபடுகின்றனர்.

திருமண பந்தம்

திருமண பந்தம்

திருமணமான ஆணோ, பெண்ணோ பிறருடன் உறவில் ஈடுபடுவது தவறில்லை என்பது போல ஆகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட உறவினால் திருமண உறவு சிக்கலாகி விடுகிறது. திருமண பந்தத்தின் மீது நம்பிக்கை போய் விடுகிறது. பிசினஸ் ரீதியாக ஆணும் பெண்ணும் உறவு கொள்வது தவறில்லை என ஜப்பானில் கூறியுள்ளனர். திருமண உறவுகள், ஒருவனுக்கு ஒருத்தி என்பது பற்றிய நம்பிக்கை உலக அளவில் மாறி விடுகிறது.

திருமணத்தை தாண்டிய உறவு

திருமணத்தை தாண்டிய உறவு

காதல், காமம், உறவுகளை சொல்வது எண்ணங்களை உருவாக்குவது ஐந்தாம் பாவகம். ஐந்தாம் பாவகம் காதல், கற்பனைகளை உருவாக்குகிறது. ஐந்தாம் பாவம் பூர்வ புண்ணிய ஸ்தானம். ஏழாம் பாவம் உடல் சேர்க்கை. களத்திர ஸ்தானம். ஐந்தாம் பாவகம் அதனுடைய கேந்திர ஸ்தானங்கள் எட்டாம் இடம், 11ஆம் இடம், இரண்டாம் இடம் ஆகிய பாவகங்களிடையே உள்ள கிரகங்களின் கூட்டணி சேர்ந்தால் திருமணத்தை தாண்டிய தவறான உறவு ஏற்படும். ஒன்றுக்கு மேற்பட்ட நபருடன் தொடர்பு ஏற்படும்.

குடும்ப உறவில் பிரச்சினை

குடும்ப உறவில் பிரச்சினை

ஐந்தாம் பவாக அதிபதி எட்டாம் பாவக அதிபதியுடன் தொடர்பு ஏற்பட்டால் கள்ளத் தொடர்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ரகசிய சிநேகங்கள் உருவாகும். திருமணத்திற்கு முன்பும் திருமணத்திற்கு பின்பும் உறவுகள் ஏற்படும். எட்டாம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் இருப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான, கள்ளக்காதல் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது.

சுகம் தரும் ஸ்தானம்

சுகம் தரும் ஸ்தானம்

ஜாதகத்தில் 4வது இடம் சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும்.

பாவ கிரகங்களின் சேர்க்கை

பாவ கிரகங்களின் சேர்க்கை

மிதுனம், தனுசு, மீனம், கன்னி ஆகிய ராசிகள் இரட்டை பட்ட ராசிகள் ஐந்து, ஏழு, எட்டு, பதினொன்றாம் பாவகமாக வந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குரு போக காரகன், சுக்கிரன் காம காரகன். இந்த இருவரும் இணைவது, பார்ப்பதில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களுக்கும் பாவ கிரக பார்வை, நீச்ச சேர்க்கை ஏற்பட்டால் ரகசிய உறவுகள் ஏற்படலாம். எட்டாம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் இருப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான, கள்ளக்காதல் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது.

பணமும் தொடர்பும்

பணமும் தொடர்பும்

சிலருக்கு இரண்டு திருமணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஐந்து, எட்டு, 11, இரண்டு பணபர ஸ்தானங்கள் பணத்தை கொடுக்கும். ஐந்து ரேஸ் லாட்டரி, ஷேர் மார்க்கெட் மூலம் பணவரவு வரும். எட்டாம் வீடு முன்னோர் சொத்து கிடைக்கும் ரகசியமான பண வரவு, பினாமி சொத்துக்கள் மூலம் பணம் வரும்.

இந்த பாவகங்களில் இருக்கும் கிரகங்களின் தசாபுத்திகள் நடக்கும் போது அபரிமிதமான பணவரவு கிடைக்கும். அதே போல அதிக பணவரவினால் அதிக அளவில் தொடர்பும் ஏற்படும்.

யாருடன் யார் நட்பு

யாருடன் யார் நட்பு

திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் ஏற்படும். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். காதல் வேட்கையை தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள். சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் மூலம் திருமணத்தை தாண்டிய ஏற்படும்.

பிற பெண்களின் தொடர்பு

பிற பெண்களின் தொடர்பு

ஆண்கள் ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும். ஏழாம் வீட்டில் சனி சுக்கிரன் கூட்டணி இருந்தால், ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த பெண்ணின் தொடர்பு உண்டாகும். லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார்.

ஜாதகத்தில் ராகு கேது

ஜாதகத்தில் ராகு கேது

லக்னத்துக்கு 7, 8ல் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்துடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதன் மூலம் அவர்களின் ஆசைகள், தேவைகள் ஒத்துப்போகின்றன. அதனால்தான் தோஷம் உள்ள ஜாதகத்துடன் தோஷம் உள்ள ஜாதகங்களை சேர்க்க வேண்டும் என்கின்றனர். திருமண பொருத்தம் பார்க்கும் போது ஜாதகங்கள் சேராமல், ஒருவருக்கு மட்டும் தோஷம் இருந்து மற்றவருக்கு தோஷம் இல்லாதிருந்தால் காதல் சுகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது. திருமணத்திற்கு பிந்தைய வேறு தொடர்பு ஏற்படுகிறது.

இரண்டாம் திருமண யோகம்

இரண்டாம் திருமண யோகம்

ஏழாம் வீட்டில் சனி, புதன் இணைந்து இருந்து, வேறு ஏதேனும் இரு கிரகங்கள் 11 ஆம் வீட்டில் இருந்தால், அப்படிப்பட்ட ஜாதகர் இருமுறை திருமணம் செய்ய நேரிடும். இந்த அமைப்பில் கேது ஏதாவது ஒரு வழியில் வகையில் தொடர்பு பெற்றால் அந்த இரண்டாவது திருமணம் ரகசியமாகவே நிகழ்ந்தேறும்.

ஒருவரின் ஜாதகத்தில், 7 ஆம் அதிபதி, 6, 8, 12 ஆம் இடங்களைத் தொடர்பு பெறும் போதோ அல்லது தொடர்பு பெறும் இடங்கள் உபய ராசியாகும் போதோ அது நிச்சயம் இரண்டாம் திருமண யோகத்தை அளிக்கும்.

பரிகாரம் இருக்கு

பரிகாரம் இருக்கு

என்னதான் கிரகங்கள் தவறான கூட்டணியில் இருந்தாலும் இந்த கிரக கூட்டணியை குரு பார்வை செய்தால் பாதிப்புகள் நீங்கும், தவறான பாதையில் செல்ல மனது இடம் கொடுக்காது. குலம் காப்பவர் குல தெய்வம். பவுர்ணமி, அமாவாசை நாட்களில் குலதெய்வ வழிபாடு செய்வதால் கெட்டது நீங்கி நன்மைகள் பெருகும். மனோகாரகன் சந்திரன், திங்கட்கிழமைகளில் சிவ ஆலய தரிசனம் செய்வது பாதிப்புகளை நீக்கும். அதே போல புதன் புத்திகாரகன், புத்தியை தெளிவாக செயல்பட வைப்பவர். நல்ல புத்தி கிடைக்க திருவெண்காட்டில் அமைந்துள்ள புதன் பகவானை வழிபட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+