Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிப்ரவரி மாத ராசி பலன் 2021: ஆறு கிரக சேர்க்கையால் அதிர்ஷ்டம் யாருக்கு

பிப்ரவரி மாதத்தில் நவகிரகங்களில் முக்கிய கிரகங்கள் மகர ராசியில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியால் மேஷம் முதல் கன்னி வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன், பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிப்ரவரி மாதத்தில் சூரியன் மகர ராசியிலும் கும்ப ராசியிலும் பயணம் செய்கிறார். புதன் கும்ப ராசியில் வக்ரமடைகிறார். செவ்வாய் மேஷ ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி ரிஷப ராசியில் உள்ள ராகு உடன்
இணைகிறார். பிப்ரவரி மாதம் முதல் 15 நாட்கள் மகர ராசியில் சூரியன், சனி, குரு, சுக்கிரன், புதன் இணைந்துள்ளன. பிப்ரவரி 11ஆம் தேதி சந்திரனும் இணைவதால் ஆறு கிரகங்கள் ஒரே ராசியில் கூட்டணி அமைக்கின்றன. கேது
விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

பிப்ரவரி மாதத்தில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் 13ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 21ஆம் தேதி செவ்வாய் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.பிப்ரவரி மாதத்தில் மகர ராசியில் ஆறு கிரக சேர்க்கை உள்ளது. இந்த கிரகங்களின் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு சாதகமும், சில ராசிக்காரர்களுக்கு பாதகத்தையும் ஏற்படுத்தும். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

 மேஷம்

மேஷம்

பிப்ரவரி மாதத்தில் மேஷ ராசியில் செவ்வாய் ஆட்சி பெற்றிருக்கார். செவ்வாய் முதல் வீட்டில் இருப்பதால் எண்ணங்கள் நிறைவேறும். இது தெளிவான மாதம். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். புதன் வக்ரமடைந்து
பின்னோக்கி நகர்கிறார். சூரியன் மாத பிற்பகுதியில் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். சுக்கிரன் மாத இறுதியில் கும்ப ராசிக்கு மாறுகிறார். திருமணம் சுப காரிய முயற்சிகள் நடைபெறும். குருவின் பார்வை செவ்வாய் ராகுவின் மீது விழுகிறது. தேவையான பண வரவு கிடைக்கும். குருவின் பார்வையை நன்மையை கொடுக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பத்தாம் வீட்டில் சூரியன், குரு, சனி, சந்திரன், புதன்,சுக்கிரன் ஆகிய
கிரகங்கள் இணைகின்றன. கர்ம ஸ்தானத்தில் ஆறு கிரங்கள் இணைகின்றன. வேலை, தொழில் மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நடைபெறும். செவ்வாய் ராசியில் இருந்து இடம் மாறி ரிஷபத்தில் உள்ள ராகு உடன் இணைகிறார். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விசயங்களில் கவனம் தேவை. அலர்ஜி பிரச்சனைகள் வரலாம் எச்சரிக்கை தேவை. குடும்ப பெண்களின் ஆசைகள் நிறைவேறும். பத்தாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைந்துள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் கிரகங்களின் கூட்டணி அமோகமாக அமைந்துள்ளது. சுக்கிரன் சனி சேர்க்கை இணைந்துள்ளது ராஜயோகம். சூரியன் சுக்கிரன், புதன் இணைந்து ராஜயோகத்தை தருகிறது. சுகம் சௌக்கியம் அதிகரிக்கும். யோகமான மாதமாக அமைந்துள்ளது. ஒன்பதாம் வீட்டில் உள்ள குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பது சுபத்தை கொடுக்கும். இதுநாள் வரை ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கி நன்மைகள் அதிகம் நடைபெறும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். இந்த மாதம் பண வரவு அதிகம் கிடைக்கும். ஒன்பதாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைந்துள்ளதால் எதிர்பாராத நன்மைகள்
கிடைக்கும். திடீர் யோகம் தேடி வரும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டு வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி சந்தோஷம் கூடும். இந்த மாதம் சின்ன சின்ன மருத்துவ செலவுகள் வரலாம். மாத இறுதியில் செவ்வாய் உங்கள் ராசிக்குள் வருவதால் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். சொந்த வாகனம் வாங்கலாம். புதிய வீடு வாங்க முயற்சி செய்யலாம். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆறு கிரக கூட்டணியால் சுபங்கள் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுனம்

புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, உங்கள் ராசிநாதன் புதன் எட்டாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு நகர்ந்து மீண்டும் வக்ரமடைந்து பின்னோக்கி நகர்கிறார். இந்த மாதத்தில் சூரியன்,
சந்திரன் உள்ளிட்ட ஆறு கிரகங்கள் எட்டாம் வீட்டில் உள்ளன. நீச பங்க ராஜயோகம், விபரீத ராஜயோகம் உள்ளது. உங்கள் ராசிநாதன் வக்ரமடைந்து மறைந்தாலும் லாபத்தை கொடுப்பார். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். சவால்களை சாதனைகளாக மாற்றுவீர்கள். மாத பிற்பகுதியில் சூரியன், சுக்கிரன் ஒன்பதாம் வீட்டிற்கு இடமாற்றம் அடைகின்றன. வேலையில் சின்னச் சின்ன பிரச்சனைகள் வரலாம் கவனமும் நிதானமும் தேவை. மாணவர்கள் படிப்பில் அக்கறையும் கவனமும் செலுத்தவும். சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். செலவுகள் வீண் விரையங்கள் வரலாம். சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். இந்த மாதம் நிறைய சவால்களை எதிர்கொள்வீர்கள். பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்க சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கவும்.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டிலும் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கு வந்து ராகு உடன் இணைகிறார். வேலையில் சின்னச் சின்ன மாற்றங்கள் வரலாம். திடீர்
அதிர்ஷ்டங்கள் வரலாம். சகோதர சகோதரிகளிடையே உறவில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் சச மகா யோகம் உண்டாகும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு சாதகமான மாதம். சனியின் பார்வை உங்க ராசியில் விழுகிறது. கூடவே சந்திரன், சூரியன். புதன். சுக்கிரன், குரு ஆகிய ஆறு கிரகங்களின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ஆறு கிரகங்களின் சேர்க்கை பார்வையால் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். மாணவர்களுக்கு இது நல்ல மாதம், குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். திருமண சுப காரிய பேச்சுவார்த்தை சந்தோஷத்தை கொடுக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வண்டி வாகனம் வாங்கலாம். இந்த மாதம் கடக
ராசிக்காரர்களுக்கு ஆசைகள் நிறைவேறும், நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குழப்பங்கள் ஏற்பட்டாலும் தெளிவு பிறக்கும். திங்கட்கிழமைகளில் சிவ ஆலயம் சென்று வணங்கவும் பிரதோஷ நாளில் பாலபிஷேகம் செய்யவும்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பலம் அதிகரிக்கும். ராசி நாதன் சூரியன் மாத முற்பகுதியில் ஆறாம் வீட்டிலும் மாத பிற்பகுதியில் 7ஆம் வீட்டிற்கும் மாறுகிறார். ஆறாம் வீட்டில் ஆறு கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. செவ்வாய் இந்த மாதம் ஒன்பது மற்றும் பத்தாம் வீடுகளில் சஞ்சரிப்பது சிறப்பு. செவ்வாயின் பார்வையும் சூரியனின் பார்வையும் மாத பிற்பகுதியில் உங்க ராசியின் மீது விழுகிறது. பெற்றோர்கள் உடன் பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். சுக்கிரன் மாத பிற்பகுதியில் கும்ப ராசியில் இருந்து சிம்ம ராசியின் மீது விழுவதால் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வங்கி கடன் கிடைக்கும். திருமணம், சுப காரியங்களுக்கு செலவு செய்வீர்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இது சரியான மாதமில்லை பிள்ளைகளுக்கு வரன் பார்ப்பதை தள்ளி போடவும். வீடு கட்டியிருப்பவர்கள் மாத பிற்பகுதியில் புது வீட்டிற்கு குடி போகலாம். நான்காம் வீட்டில் கேது இருப்பதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் வந்து நீங்கும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்ய பாதிப்புகள்
நீங்கி நன்மைகள் நடைபெறும்.

கன்னி

கன்னி

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. ஆறாம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால் கடன் பிரச்சனைகள் நீங்கும். புதன் வக்ரமடைந்து பின்னோக்கி வந்து சூரியன், சனி, சுக்கிரன், குரு உடன் இணைகிறார். பலம்
வாய்ந்த சனியின் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைகின்றன. சனிபகவான் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் மன குழப்பம் நீங்கும். பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எதிர்பார்த்த விசயங்கள் கைகூடி வரும்.எட்டாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்து விடவும். எட்டுக்குடையவன் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் நிதானம் தேவை.கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமான
இருக்கவும். செவ்வாய் 22ஆம் தேதி ஒன்பதாம் வீட்டிற்கு சென்று ராகு உடன் இணைகிறார். மாத பிற்பகுதியில் சூரியன் 6ஆம் வீட்டில் அமர்ந்து 12ஆம் வீட்டினை பார்வையிடுவதால் செலவுகள் அதிகரிக்கும். சுப செலவுகளாக மாற்றுங்கள். இந்த மாதம் போராட்டங்கள் நிறைந்த மாதமாக அமையும். ஐந்தாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைவதால் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தாலே மன குழப்பம் இன்றி தப்பிக்கலாம். பாதிப்புகள் நீங்கி பலன்கள் அதிகரிக்க யோக
நரசிம்மரை விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+