பச்சை மஞ்சள் சிவப்பு... கள்ளழகர் உடுத்தி வரும் பட்டுப்புடவை நிறத்தின் அர்த்தம் தெரியுமா
வைகையில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி எழுந்தருளியுள்ளார். கள்ளழகர் உடுத்தும் ஆடைகளில் நிறத்திற்கு என்ன அர்த்தம் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.
மதுரை: கள்ளழகர் எந்த வண்ணப் புடவை கட்டி வைகை ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லதும் கெட்டதும் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கள்ளழகர் உடுத்தும் ஆடைகளின் மீது சில நம்பிக்கைகள் இருப்பதால் வைகை ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
அழகர் கோவிலில் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் ஆண்டாள் சூடிக்கொடுத்த கொடுத்த மாலை அணிந்து பச்சைப்பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் வலம் வந்தார். செயற்கை வைகை ஆற்றில் இன்று இறங்கிய கள்ளழகர் அணிந்திருந்த ஆடையால் இந்த ஆண்டு விவசாயம் செழிக்கும் தொழில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை கள்ளழகர் மதுரைக்கு வந்து வைகையில் இறங்குவார். இரண்டு ஆண்டுகளாக அழகரால் மதுரைக்கு வர முடியாமல் போய் விட்டது. ஆனாலும் வைகையே அழகரைத் தேடி போனதுதான் சுவாரஸ்யம்.

வைகையில் கள்ளழகர்
16ஆம் நுாற்றாண்டு வரை, கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லுார், தேனுார் ஆகிய ஊர்கள் வழியாக சோழவந்தான் வந்து அங்குள்ள வைகையாற்றில் இறங்கி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். சைவம், வைணவ சமயங்களை ஒன்று சேர்க்கும் விதத்தில் திருமலை நாயக்கர் இந்த விழாவை மதுரைக்கு மாற்றியமைத்தாராம்.

அழகரின் பட்டுப்புடவைகள்
அழகர் உடுத்தும் ஆடைகள், அணியும் தங்க நகைகள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா, என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தினம் அணிவிக்கப்படும்.

நாடு செழிக்கும்
அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.

மஞ்சுள் பட்டு
வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். அழகர் சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும் என்கின்றனர்.

பக்தர்களின் நம்பிக்கை
அழகர் உடுத்தும் ஆடைகளின் மீது சில நம்பிக்கைகள் இருப்பதால் வைகை 'ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே பச்சைப் பட்டுதான் உடுத்திதான் ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர். இந்த ஆண்டும் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி செயற்கை வைகை ஆற்றில் இறங்கியுள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications