குரு பெயர்ச்சி பலன் 2023: லாப குரு.. செப்டம்பர் முதல் கோடி கோடியாக செல்வம் யாருக்கு குவியும்?
சென்னை: குரு பகவான் மிதுன ராசிக்கு 11ஆம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் ராகு உடன் பயணம் செய்கிறார். செப்டம்பர் மாதம் முதல் குரு பகவான் வக்ரமடைகிறார். குருவின் பார்வை மிதுன ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருபகவான் வக்ரம் அடைவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குரு பகவான்: நவ கிரகங்களில் குரு பகவான் சுப கிரகம் என்பதால் யாருக்கும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். குரு நின்ற இடம் பாழ் என்றும் பார்க்கும் இடம் சுபிட்சம் அடையும் என்று சொல்வார்கள். மிதுன ராசிக்கு தொழில் ஸ்தானம், களத்திர ஸ்தான அதிபதி குரு பகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குரு பகவான் சஞ்சாரம் மற்றும் பார்வையால் மிதுன ராசிக்காரர்களுக்கு கோடி கோடியாக செல்வம் குவியப்போகிறது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.

அற்புதமான பார்வை: குரு அமரும் இடத்தைப் போல குரு பார்க்கும் இடமும் அற்புதமாக அமைந்துள்ளது. குரு பார்வை தனுசு ராசியில் இருந்து மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய லக்னங்களின் மீது விழுகிறது. குருவின் பார்வை உங்க லக்னத்திற்கு ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. குருவின் பார்வை நிறைய மேன்மைகளையும் லாபங்களையும் அள்ளித்தரப்போகிறது. குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான மன மகிழ்ச்சியையும், வாழ்க்கையில் வசதிகளையும் தரப்போகிறது. குரு பகவான் தன ஸ்தானத்திற்கும் லாப ஸ்தானத்திற்கும் அதிபதி. குடும்ப வாழ்க்கையில் சந்தோஷத்தையும் நிம்மதியையும் வெற்றிகளையும் தரப்போகிறவர் குருபகவான்.
திருமண பாக்கியம்: குரு பார்வையால் மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தைரிய ஸ்தானத்தை குரு பார்க்கிறார். எதையும் வெல்வீர்கள். இளைய சகோதரர்கள் உதவி கிடைக்கும். மூத்த சகோதரர்களினால் ஆதாயம் கிடைக்கும். பூர்வ புண்ணியம் பலம் பெறும். உடன் பிறந்தவர்களுக்கு திருமணம் பாக்கியம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். சித்தர்களின் அருளாசி கிடைக்கும். தெய்வகாரியங்கள், ஆன்மீக வழிபாடு அதிகம் நடைபெறும். தெய்வீக நம்பிக்கைகள் கூடும்.

தொழிலில் லாபம்: லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவானால் மேன்மைகளும் நன்மைகளும் கிடைக்கும். வேலை செய்யும் இடத்திலும் வேலையிலும் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கடன் தொல்லைகள் நீங்கும் உங்களின் செல்வாக்கு உயரும். குருவின் பார்வை மூன்றாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. தைரிய ஸ்தானத்தினை குரு பார்ப்பதால் உங்க தைரியம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து லாபம் அதிகரிக்கும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். பிசினஸ் மூலம் நல்ல லாபம் வரும். குரு பகவான் களத்திர ஸ்தானத்தை பார்வையிடுவதால் கவலைகள் காணாமல் போகும்.
ஒளிமயமான எதிர்காலம்: மாணவர்களுக்கு நீங்கள் விரும்பும் உயர்கல்வி தேடி வரும். குறிக்கோளை அடைவீர்கள். பூர்வ புண்ணியத்தின் மீது குருவின் பார்வை படுவதால் பிள்ளைகளுக்கு நன்மைகள் கிடைக்கும். பிள்ளைகள் ஜெயிப்பார்கள். வேலை கிடைக்கும். திருமணம் கைகூடி வரும். கவுரவம் தேடி வரும். மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி மேன்மைகளையும் லாபத்தையும் தரும். ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்று பாடப்போகிறீர்கள். கோடி கோடியாக செல்வம் குவியப்போகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications