குரு பெயர்ச்சி பலன் 2024: சித்திரை முதல் சிறப்பு.. வைகாசி முதல் 6 ராசிக்காரர்களுக்கு வசந்த காலம்
சென்னை: குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். மேஷ ராசியில் உள்ள குரு பகவான் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பெயர்ச்சியாலும் குரு பார்வையாலும் சில ராசிக்காரர்களுக்கு யோகம் கூடி வரும். குருபலம் வந்தாலே திருமண பாக்கியம், குழந்தை வரம் கிடைக்கும். நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு குரு பலம் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குருவின் அருள்: மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமணமும், புத்திரபாக்கியமும் கடவும் கொடுக்கும் வரம். நல்ல துணை அமைவதும், நல்ல புத்திரர்கள் பிறப்பதும் நாம் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம். திருமணமும், குழந்தை பாக்கியமும் கிடைக்க குருவின் அருள் கண்டிப்பாக வேண்டும். குரு பலம் வந்தால் மட்டுமே திருமணம் நடைபெறும். சில மாதங்களில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.

குரு பார்வை பலன்: குருபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களை பார்வையிடுகிறார். ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் குரு பகவான் தனது பொன்னொளி பார்வையால் கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளை பலமடையச் செய்கிறார். குருவின் பயணத்தாலும் சில ராசிக்காரர்களுக்கு குரு பலம் வரப்போகிறது.
மேஷம்: உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன ஸ்தானம், குடும்ப வாக்கு ஸ்தானத்திற்கு குரு நகர்வது மிகச்சிறந்த மேன்மை. குரு தனது ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டினை பார்க்கிறார். எட்டாம் வீட்டில் குரு பார்வை விழுவதால் கண்டங்கள் விலகும். அவமானங்கள் தீரும். பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் நீங்கும். தாலி பாக்கியத்தை கொடுப்பார். திருமணம் சுபகாரியம் புது முயற்சிகள் கைகூடும். இதுநாள்வரை தாலிபாக்கியம் கிடைக்கலையே தடைகளாக இருக்கிறதே என்று வருத்தப்பட்ட பெண்கள் வைகாசி மாதத்திற்குப் பிறகு வளமான வாழ்க்கை தேடி வரும்.
ரிஷபம்: ஜென்மகுருவாக அமரும் குருவின் பார்வையினால் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. ஜந்தாம் பாவத்தை கோசார குரு பார்த்தால் உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும். ரிஷப ராசிக்காரர்களின் குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமணம் கைகூடி வரும் கணவன் மனைவி உறவு உற்சாகமடையும். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆண் பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும்.
கடகம்: குருபகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்ந்து ராசிக்கு 3, 5, 7ஆம் இடங்களை பார்வையிடுகிறார். ஜாதகத்தில் எவ்வளவு யோகம் இருந்தாலும் 5 ம் பாவமும் 5 ஆம் அதிபதியும் பலம் பெற வேண்டும். ராசிக்கு ஏழாம் வீட்டை களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும். ஓரே நேரத்தில் பஞ்சம ஸ்தானம் களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சிலருக்கு ரத்த வழி சம்பந்தபட்ட உறவில் திருமணம் நடக்கும். சொந்த தொழில் கூட்டு தொழில் லாபம் தரும். குலதெய்வ அனுகிரகம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாதித்து பெற்றோர்கள் கையில் கொடுப்பார்கள்.
கன்னி: பாக்ய ஸ்தானத்தில் குரு பகவான் அமரப்போகிறார். அவரின் பார்வையும் உங்க ராசியின் மேல் விழுவதால் குருவின் பரிபூரண ஆசி கிடைக்கப்போகிறது. கன்னி ராசிக்காரர்களுக்கு இது வரப்பிரசாதம். யோகம் கிடைக்கும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் ராசியையும் ராசிக்கு மூன்று மற்றும் ஐந்தாம் வீட்டையும் பார்ப்பதால் இது ராஜயோக காலமாக அமையப்போகிறது. ஒன்பதாம் பார்வையாக 5ஆம் வீட்டின் மீது குரு பார்வை விழுகிறது. புத்திர பாக்கியம் கிடைக்கும். பூர்வ ஜென்ம புண்ணியத்தின்படி மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நினைத்த காரியம் நிறைவேறும் ராஜாதி ராஜ யோகம் தேடி வரப்போகிறது.
விருச்சிகம்: பொன்னவன் குருவின் பார்வை உங்கள் ராசி மீது முழுவதுமாக விழுவதால் நீங்க நினைத்தது நடக்கும் தொட்டது துலங்கும். ஐந்துக்கு அதிபன் குரு பகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்க்கிறார். குழந்தை பேறு கிடைக்கும். திருமணம் நடைபெறும். உங்கள் ராசியை குரு பார்ப்பது ராஜயோகத்தை தரும். ராஜங்க பதவி தேடி வரும். மனதிற்குப் பிடித்த மனைவி அமைவாள். நீண்ட நாட்களாக பிள்ளைகள் இல்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்த உங்களுக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கும். சித்திரை மாதத்திற்குப் பிறகு சிறப்பான யோகத்தை தரப்போகிறார் குரு பகவான்.
மகரம்: குரு பகவான் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு அதிபதி. அவர் உங்கள் ராசிக்கு 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறார். குரு பார்வை உங்கள் ராசிக்கு 9 மற்றும் 11ஆம் வீடுகளின் மீது விழுகிறது. ஆலய தரிசனங்களுக்கு ஆன்மீக பயணம் செல்வீர்கள். அற்புதமான யோக காலம் வரப்போகிறது. அப்பா வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். குரு பலன் வந்துள்ளது. பொருளாதார வளம் அதிகரிக்கும். நிதி நிலை உயரும். தொட்டதெல்லால் பொன்னாகும். வைகாசிக்குப் பிறகு வசந்த காலம் வரப்போகிறது.
மீனம்: உங்கள் ராசி அதிபதி குரு பகவான் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து, ஏழாம் வீட்டையும் பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். திருமணம் ஆகி கோர்ட்டு வம்பு வழக்கில் இருந்தவர்கள் ஓன்று சேருவார்கள். சிலருக்கு மறுவாழ்க்கை அமையும். எனவே தைரியமாக ஜாதகத்தை எடுங்க வரன் பார்க்க ஆரம்பிக்க நல்லமுறையில் கை கூடி வரும். வைகாசி பிறந்தாலே கெட்டிமேளச்சத்தம் நிச்சயம் உங்க வீட்டில் கேட்கும்.
பரிகாரம்: திருமணம், புத்திரபாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வணங்குவதற்கு திருச்செந்தூர் செல்வது சிறப்பைத் தரும். பொதுவாக குரு கல்விக்கு உரிய கிரகமாகும். குருபெயர்ச்சியால் பாதிக்கப்படும் லக்னகாரர்கள், ராசிக்காரர்கள் பழைய பள்ளிகளை புதுப்பிக்க உதவலாம். ஒருவர் கல்வி பெறுவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவினால் அது குருவை மகிழ்ச்சியடையச் செய்யும். இந்த பரிகாரங்களை மனநிறைவுடன், உண்மையாகச் செய்யும் போது குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள், ஓரளவு பாதிப்பின்றித் தப்பலாம். நல்ல பலன்கள் பெறுபவர்கள் கூடுதலாக சில சலுகைகளை குருவிடம் இருந்து பெறலாம்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications