குரு வக்ர பெயர்ச்சி.. வெகு விரைவில் இந்த ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகுதாம்
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி, வக்ர சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது.
சென்னை: குருபகவான் இப்போது மீன ராசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். அடுத்த மாதம் வக்ர கதியில் பயணப்பட போகிறார். குருவின் மாற்றத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சில அதிசய மாற்றங்கள் ஏற்படப்போகிறது. யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். குரு பகவானின் பார்வை கிடைத்தாலே போதும் கோடி நன்மைகள் ஏற்படும் என்பது பலரது வாழ்வில் நிரூபிக்கப்பட்ட உண்மை. துலாம் ராசி முதல் மீனம் ராசி வரை பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குரு பகவான் பொன்னவன். திருமணம், குழந்தைப்பேறு, நல்ல வேலை கிடைப்பது குருபகவானின் அருளினால்தான். குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம் என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர்.
குரு பலன் வந்து விட்டாலே அதிர்ஷ்டம் தேடி வரும் வாழ்க்கையில் வசந்தம் வீசும். நிறைய பண வரவு வரும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். எனவேதான் குரு பெயர்ச்சியை பலரும் எதிர்பார்க்கின்றனர்.
குரு பகவான் சமீபத்தில் கும்ப ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் குரு பகவான் விரைவில் பின்னோக்கி வக்ர கதியில் பயணம் செய்வார். ஜூலை 29 முதல் நவம்பர் 24 வரையிலும், நான்கு மாத காலம் குருபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே வக்ரத்தில் செல்கிறார். இந்த பயணத்தினால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாக துலாம் ராசிக்காரர்களே.. புதிய வீடு வாகனம் வாங்கலாம். திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். குரு வக்ர கதியில் செல்லும் காலத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வும் கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும்.

விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே..நீங்கள் இந்த கால கட்டத்தில் புதிய வாகனம் வாங்கும் யோகம் வரும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். பழைய கடன் பிரச்சினை நீங்கும். குரு வக்ரமாக செல்லும் காலத்தில் வேலைச்சுமை கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவி தேடி வரும். உயரதிகாரிகளுக்கும் உங்களுக்கும் ஏற்பட்டநெருக்கடிகள் நீங்கும்.

தனுசு
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே..உங்களுக்கு சின்னச் சின்ன உடல் நலககோளாறுகள் வந்து நீங்கும். கடனாக வாங்கிய பணத்தை செட்டில் செய்வீர்கள். குரு வக்ரமாக செல்லும் காலத்தில் அலுவலகத்தில் வேல்பபளு கூடும். உடன் வேலை செய்பவர்கள், உயரதிகாரிகளிடம் வாக்குவாதம் தவிர்க்கவும். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலகட்டமாகும்.

மகரம்
உங்கள் ராசிநாதன் சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு பகவான் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் நோய்கள் வந்து நீங்கும். குருபகவான் வக்ரமாக செல்லும் காலத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல பண வருமானம் கூடும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் முடிவுக்கு வரும்.

கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே..உடல் நலத்தில் அக்கறை தேவை. நடைபயிற்சி, உடற்பயிற்சி அவசியம். வக்ர கதியில் குரு பயணிக்கும் காலத்தில் திடீர் செல்வாக்கு கிடைக்கும். உங்களின் சொல்வாக்கு கூடும். சக ஊழியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். சம்பளம் கூடும்.

மீனம்
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்கரார்களே.. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் பயணம் காலத்தில் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குரு வக்ரத்தில் செல்லும் காலத்தில் திடிர் பண வரவு வரும், ஷேர் மூலம் பணம் வரும். அலைச்சலுடன் ஆதாயமும் உண்டாகும். சவாலான காரியங்களை வெற்றிகரமாக சாதித்துக் காட்டுவீர்கள்.
-
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications