குரு வக்ர பெயர்ச்சி..4 நாட்களில் எந்த ராசிக்காரர்கள் வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது தெரியுமா?
சென்னை: குரு பகவானின் வக்ர சஞ்சாரத்தினாலும் பார்வையாலும் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படப்போகிறது. வேலையில் பதவி உயர்வும் கிடைக்கப் போகிறார். ஜூலை 29 முதல் சிலருடைய வாழ்க்கையை புரட்டிப்போடும் சம்பவங்கள் நிகழப்போகிறது. யாருக்கெல்லாம் நல்ல தகவல்கள் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.
நவகிரகங்கள் அனைத்தும் தங்கள் சுற்றுப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவை சில நேரங்களில் பின்னோக்கியும் செல்லும். ஜோதிட ரீதியாக கிரகங்கள் பின்னோக்கி செல்லும் காலங்களை வக்ர காலங்கள் என்கிறோம். நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள். குரு பகவான் மீன ராசியில் பயணம் செய்கிறார். ஜூலை 29 முதல் நவம்பர் 24 வரையிலும், நான்கு மாத காலம் குருபகவான் மீன ராசியில் உள்ள உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே வக்ரத்தில் செல்கிறார்.
குருபகவான் நவம்பர் 24ஆம் தேதி வரை கும்ப ராசியில் பயணித்து மீண்டும் நேர்கதியில் பயணம் செய்வார். குருவின் பயணத்தினால் சிலரது வாழ்க்கையில் அதிர்ஷ்டங்களும், வாழ்க்கையை மாற்றப்போகும் சம்பவங்களும் நடைபெறப்போகிறது. எந்த ராசிக்காரர்களுக்கு திடீர் மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.

மிதுனம்
குரு பத்தாம் வீட்டில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவு அதிகமாக இருக்கும். வேலையில் புதிய மாற்றம் ஏற்படும் சிலருக்கு பதவி உயர்வு தேடி வரும். தடைபட்டு வந்த காரியங்கள் நிறைவேறும். கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் நலமாக இருக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த கடன்களை திருப்பி கொடுப்பீர்கள். தொலைந்து போன பணம், நகை ஆவணங்கள் திரும்ப கிடைக்கும். தொழில் முதலீடுகளில் செய்யும் லாபம் இரட்டிப்பு மடங்காக திரும்ப கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கடகம்
பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் குரு பகவான் வக்ரமடைகிறார். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். ஆலய கும்பாபிஷேக பணிகளை தலைமையேற்று நடத்துவீர்கள். புது வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதில் இருந்த தடைகள் நீங்கும். அரசு வேலை போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பணத்தட்டுப்பாடு நீங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உற்சாகமாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே.. எட்டாம் வீட்டில் குருபகவான் வக்ரமடைகிறார். திருமணம் உள்ளிட்ட தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் தீரும். சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வேலை செய்யும்இடத்தில் ஏற்படும் பிரச்சினைகளால் மன உளைச்சல் உண்டாகும். ஆலய தரிசனமும் ஆன்மீக பயணமும் மன அமைதியை ஏற்படுத்தும்.

துலாம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு குரு எப்போதுமே சாதகம் செய்ய மாட்டார். ஆறாம் வீட்டில் அமர்ந்து வக்ரமடையும் குருபகவான் சிலருக்கு சின்னச் சின்ன பாதிப்பை தருவார். உங்களின் பேச்சினால் சில சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும் எனவே அவசரப்பட்டு பேசி பிரச்சினையில் சிக்கிக்கொள்ள வேண்டாம். பயணங்களால் வீண் அலைச்சல்கள் வரலாம். உணவு விசயத்தில் கவனம் தேவை. குரு வக்ர காலத்தில் மருத்துவ செலவுகளும் எட்டிப்பார்க்கும் கவனம் தேவை.

மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே.. குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் என்றாலும் வேலை செய்யும் இடத்தில் சில சங்கடங்கள் உண்டாகும். அரசு வேலையில் இருப்பவர்கள் அலட்சியமாக இருக்காதீர்கள். குரு பகவானின் பார்வைகள் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுகிறது. கூட்டுத்தொழில் சரிப்பட்டு வராது எனவே முதலீடுகளைத் தவிர்த்து விடுங்கள். பண விசயங்களில் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து விடுங்கள். ஆலய பணிகளுக்காக செலவு செய்வீர்கள்.

கும்பம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குருவின் பயணத்தால் உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளால் சுப செலவுகள் வரும். குழந்தைகளுக்கு திருமண சுப காரியம் கைகூடி வரும். எதிர்பார்க்காத சுப விரைய செலவுகள் வரும். பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம் தேவை. தொழில் முதலீடுகளில் அகலக்கால் வைத்து எதிலும் மாட்டிக்கொள்ளாதீர்கள் கவனம் தேவை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications