Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம் - நளதீர்த்தம் மகிமை

சனியின் பிடியில் சிக்கியவர்கள் திருநள்ளாறு தலம் வந்து நள தீர்த்தத்தில் நீராடி, கருங்குவளை மலர் சாற்றி, எள் தீபம் ஏற்றி சனிபகவானை வணங்கினால் நன்மைகள் நடக்கும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏழரை சனி, கண்ட சனி, அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனி, என சனிபகவானால் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் திருநள்ளாறு தலம் வந்து நளதீர்த்ததில் நீராடி, எள் தீபம் ஏற்றி, கருங்குவளை மலர் சாற்றி சனீஸ்வரனை வணங்கினால் பாதிப்புகள் குறையும்.

நவகிரகங்களில் சனி பகவானின் பார்வைக்கு பலரும் பயப்படுகின்றனர். நள மகராஜாவின் கதையை படிப்பவர்களுக்கு சனி பகவானின் பாதிப்புகள் விலகும் என்பது நம்பிக்கை. நிடத நாட்டு மன்னன் நளனை காதலித்து கரம் பிடித்தாள் சேதி நாட்டு இளவரசி தமயந்தி. தமயந்தி மீது கோபம் கொண்ட தேவர்கள் நளன் மீதும் பொறமை கொண்டனர். நளனுக்கு ஏழரை சனி பிடித்தது. இதனால் எல்லா செல்வத்தையும் இழந்தான். நாடு இழந்து வனத்தில் தன்னுடன் வந்த தமயந்தியையும் பிரிந்து சேவகனாக,சமையல் செய்பவராக மாறினான் நளன்.

ஏழரை சனி விடும் காலம் வந்தது. ஈசன் அருளால் திருநள்ளாறு தலம் வந்து தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி, சனீஸ்வரனையும் சரணடைந்தான். அதனால், சனிபகவானின் கருணையால் இழந்த தன் நாட்டையும் அளவற்ற செல்வங்களையும் பெற்றான். நளன் நீராடிய திருக்குளம் இன்றும் நளதீர்த்தம் என்றே அவரது பெயரால் வழங்கப்படுகிறது.

திருநள்ளாறு ஆலயம்

திருநள்ளாறு ஆலயம்

தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது, இங்கு அமர்ந்து இருக்கும் ஈசனின் திருப்பெயர் தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பிகையின் திருப்பெயர் பிராணேஸ்வரி. நளமகாராஜனை, சனிபகவானின் பிடிப்பிலிருந்து விடுவித்து, மறுபடியும் வளமான வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்திய தலம் இது என்பதால் நள்ளாறு என அழைக்கப்படுகிறது.

 பிராணாம்பிகை சமேத தர்ப்பாரண்யேஸ்வரர்

பிராணாம்பிகை சமேத தர்ப்பாரண்யேஸ்வரர்

இங்கு மூலவராக தர்ப்பாரண்யேஸ்வரர் என்ற பெயருடன் ஈசன் அருள்புரிகிறார். சுயம்புவாக தர்ப்பைவனத்தில் தோன்றியதால் ஈசன் தர்ப்பைத் தழும்புகளுடன் காட்சி தருகிறார். தேவார மூவரான அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர்களால் பாடல் பெற்ற தலம் இது. அம்பாளின் பெயர் பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்.

தர்ப்பை தல விருட்சம்

தர்ப்பை தல விருட்சம்

தலவிருட்சம் தர்ப்பையாக உள்ள இந்தத் திருக்கோயிலைச் சுற்றியுள்ள தீர்த்தங்கள் பல. அவை நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம், அன்ன தீர்த்தம், கங்கா தீர்த்தம், அஷ்டதிக் பாலகர்கள் தீர்த்தம் என பல தீர்த்தங்கள் இருந்தாலும் நள தீர்த்தத்தில் நீராடுவதையே பக்தர்கள் விரும்புகின்றனர்.

நீராடுவது எப்படி?

நீராடுவது எப்படி?

வீட்டில் இருந்து அணிந்து சென்ற உடையுடன் நள தீர்த்தத்தில் குளிக்க வேண்டும். மகாலட்சுமி வாசம் செய்யும் நல்லெண்ணெய் தேய்த்து, மகாவிஷ்ணு வாசம் செய்யும் சீயாக்காய்ப் பொடி தேய்த்து குளிப்பது ஐதீகம். நீராடிய பின், காய்ந்த உடை உடுத்தி, ஈரத் துணியை குளக்கரையில் ஓரமாகப் போட்டுவிட வேண்டும்.

தீயவை சிதற தேங்காய்

தீயவை சிதற தேங்காய்

குளித்து விட்டு ஆடை மாற்றிய பின்னர் குளக்கரையில் நள விநாயகருக்குச் சிதறுகாய் உடைக்க வேண்டும். அப்போது பரிகாரம் நல்ல முறையில் நிறைவேற பிரார்த்தனை கொள்ள வேண்டும். கோயிலுக்குச் சென்று மூலவர் தர்பாரண்யேஸ்வரர், அம்பாள் பிராணாம்பிகையை தரிசிக்க வேண்டும். தியாகவிடங்கர், மரகத லிங்கம் ஆகியவற்றை வணங்கிய பின் சனி பகவானை வணங்க வேண்டும்.

மரகத லிங்கம் தரிசனம்

மரகத லிங்கம் தரிசனம்

பிள்ளைப்பேறு பெற இத்திருத்தலத்துக்குப் பக்தர்கள் வருகை தருகிறார்கள். தியாகவிடங்கருக்கு இங்கு தனிச் சந்நிதி உண்டு. மேலும் இத்திருக்கோயிலில் உள்ள மரகத லிங்கத்துக்குப் பாலும் பழமும் நிவேதனம் செய்கிறார்கள். இந்தப் பிரசாதத்தை உண்டால் பிள்ளைப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை.

எள் தீபம் ஏற்றி வணங்குவோம்.

எள் தீபம் ஏற்றி வணங்குவோம்.

தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் அருளும் சனிபகவான், ஈசனின் கட்டளைப்படி இங்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு நல்வாழ்வினை அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். சனிபகவானால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை வணங்கினால் நல்ல பலன்களைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. எனவே எள் தீபம் ஏற்றி சனிபகவானை மனதார வேண்டினால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+