அந்த உணர்வு அதிகம்... சதா அதே நினைப்பு என்ன காரணம் - ஜோதிட ரீதியான பரிகாரம்
ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருக்கின்றன தோஷம் இருக்கிறதா என்றும் பார்ப்பது கணவன் மனைவி தாம்பத்ய உறவில் ஒற்றுமையாக இருப்பார்களா என்று கண்டுபிடிக்கத்தான். எந்த கிரகங்கள் எப்படி இருந்தால் அந்த விசயத்தில் கில்லாடியாக இருப்பா
சென்னை: ஹார்மோன்கள் செய்யும் மாயத்தினாலும் நவகிரகங்களின் அமர்வைப் பொறுத்தும் சிலருக்கு அந்த உணர்வு கூடவோ குறைவாகவோ இருக்கும். உயிரினங்கள் அனைவருக்கும் பசி தாகம் போல பாலுணர்வும் பொதுவானதுதான். இதில் சிலருக்கு அதிகமாக இருக்கும். சிலருக்கு குறைவாக இருக்கும். எந்த கிரகங்கள் எப்படி இருந்தால் அந்த விசயத்தில் கில்லாடியாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.
திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது இருவரின் ஜாதகம், நடைபெற உள்ள தசாபுத்திகள் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். குரு பார்வை களத்திர ஸ்தானத்திற்கு இருக்கிறதா என்றும் களத்திர காரகன் குருவின் நிலை எப்படி இருக்கிறது என்றும் பார்த்து மணம் முடிக்க வேண்டும். அப்பொழுதுதான் மனமொத்த தம்பதிகளாக இருவரும் இணைபிரியாமல் இருப்பார்கள்.
ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருக்கின்றன தோஷம் இருக்கிறதா என்றும் பார்ப்பது இதற்குத்தான். நாகதோஷம், செவ்வாய் தோஷம், சூரிய தோஷம், சுக்கிரதோஷம், களத்திர தோஷம், மங்கால்யதோஷம் என பலவித தோஷங்கள் திருமணத்திற்கு தடையாக இருக்கின்றன.
எந்த ராசிக்காரர்களுக்கு உணர்வுகள் அதிகம் என்பது ஜோதிடர்களுக்கு தெரியும். கிரகங்களின் அமர்வுகளைப் பொருத்து ஆண் பெண் ஜாதகங்களை சேர்ப்பது அவசியம். சில ராசிக்காரர்கள் சில ராசிக்காரர்களுடன் சேரவே கூடாது. அதே போலத்தான் சில நட்சத்திரகாரர்கள் அந்த மாதிரி விசயத்தில் கூடுதல் ஆர்வத்துடன் இருப்பார்கள். எந்த நட்சத்திரக்காரர்கள் அந்த விசயத்தில் எப்படி என்று பார்க்கலாம். கணவன் மனைவி உறவு பிணைப்பு அதிகரிக்க பரிகாரங்களையும் பார்க்கலாம்.

நெருப்பு ராசிக்காரர்கள்
நெருப்பு ராசிக்காரர்களான மேஷம், சிம்மம், தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு அந்த உணர்வு பொதுவாகவே அதிகம் இருக்கும்.
மிதுன ராசிகளில் பிறந்தவர்களுக்கு அந்த உணர்வுகள் அதிகமாகவே இருக்கும். அந்த உணர்வு சும்மா தாண்டவமாடுமாம்.

அமைதியானவர்கள்
ரிஷபம், கன்னி,துலாம், மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு மிதமாகவும் இருக்கும். அதிலும் துலாம், கும்பம் ராசிக்காரர்கள் எதையும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்களாம். கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அதில் ஆர்வம் குறைவாகவே இருக்கும்.

ஆர்வம் அதிகம் யாருக்கு
அசுவினி, மிருகசீரிடம், மகம், உத்திரம், அனுசம், மூலம்,உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அந்த விசயத்தில் உணர்வு அதிகம் இருக்கும். பரணி, திருவாதிரை, புனர்பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, திருவாணம், பூராடம், ரேவதி நட்சத்தில் பிறந்தவர்களுக்கு அந்த விசயத்தில் ஆர்வம் மிதமாக இருக்கும். அதே நேரத்தில் கார்த்திகை, ரோகிணி, பூசம், ஆயில்யம் , சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி சராசரி பாலியல் உணர்வு இருக்கும். அதை வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்கள் அதே நேரம் ஏக்கம் அதிகம் இருக்கும்.

அந்த உணர்வு அதிகம்
ஒருவரின் ஜாதகத்தில் எட்டில் செவ்வாய், ஆறில் சனி, இரண்டில் சூரியன் இருந்தால் ஒயாது அதே நினைப்பாக இருப்பார்கள். நேரம் காலம் பார்க்காமல் உறவில் ஈடுபடுவர்கள். ஒருவரின் ஜாதகத்தில் புதன், சுக்கிரன் ஏழில் இணைந்தால் நல்ல துணையும் சுகமான இன்பத்தை அனுபவிப்பார்கள். சுய ஜாதகத்தில் மிதுனம், துலாம், ரிஷப ராசிகளில் சுக்கிரன் இருந்தாலும், ஏழில் சுக்கிரன் இருந்தாலும் காம உணர்வு அதிகம் இருக்கும்.

ஜாதகத்தில் பிரச்சினை
சிலருக்கு தாம்பத்ய உறவில் ஆர்வமின்மை இருக்கும். அதே நேரத்தில் பெண்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். ஒரு சிலரின் வீட்டிலோ ஆண்களுக்கு அதிக ஆர்வமும், பெண்களுக்கு ஆர்வமும் இருக்கும். லக்கினாதிபதி சனியாக இருந்து செவ்வாய்,கேது பார்வை, தொடர்பு இருந்தால் பாலியல் ஆர்வம் குறையும். லக்கினத்தில் கேது, சனி இருந்தால் ஆர்வம் குறையும். இதன் காரணமாகவே கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்படும்.

ஒற்றுமை தரும் துளசி
துளசிக்கும் கணவன் மனைவி பிணைப்பிற்கும் நிறைய தொடர்பு உள்ளது. எனவேதான் வீட்டில் துளசி மாடம் அமைத்து அதை காலையில் பெண்கள் சுற்றி வந்து விளக்கு எற்றுவார்கள். துளசி மாடத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்து விளக்கேற்றி வழிபட கணவன் மனைவி உறவு அற்புதமாக அமையும்.

பாதிப்பை நீக்கும் பரிகாரங்கள்
சுக்கிரன் ஜாதகத்தில் கெட்டிருந்தாலோ, மறைவாகவோ நீசமடைந்திருந்தாலோ வைர மோதிரம் மோதிர விரலில் போடலாம் பாதிப்புகள் நீங்கும். சுக்கிரன் காதல் நாயகன் களத்திரகாரகன். வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து மகாலட்சுமியை வணங்க நன்மைகள் நடக்கும். பாதிப்புகள் நீங்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications