• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கணவன் மனைவி இடையே ஓயாத சண்டையா?.... இதை எல்லாம் செய்யலாம்

|

சென்னை: நம்முடைய வீட்டிற்கு வருபவர்களுக்கு முதல் காரியமாக நாம் குடத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து குடிக்க கொடுக்க வேண்டும். இது காலம் காலமாக செய்வதுதானே என்று கேட்கிறீர்களா? இது நல்ல பண்பாடு. நம்முடைய முன்னோர்கள் காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள் நம்முடைய வீட்டிற்கு வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தால் அவர்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் அது பிரதிபலிக்காது அவர்களுடைய பொறாமை பார்வைகளோ, எண்ணங்களோ நம்மை பாதிக்காதாம்.

கல்லடி பட்டாலும் , கண்ணடி படக்கூடாது. இது நம்முன்னோர்களின் அனுபவ மொழி. கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி.

இதற்கு கண்ணேறு என்றும் ஒரு பெயர் உண்டு. கண் திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சினைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம் என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்.

கணவன் மனைவி சண்டை அடிக்கடி வரும். உடல் நல பாதிப்பு ஏற்படும். தேவையில்லாத பிரச்சினைகள் தலைதூக்கும். தேவை இல்லாத பிரச்சினைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுப நிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது தூக்கமின்மை, அப்படியே தூங்கினாலும் கெட்ட கனவுகள் வந்து எழுப்பி விடுவது. அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும். இதன் மூலம் கண் திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

கண் திருஷ்டி போக்கும் கண்ணாடி

கண் திருஷ்டி போக்கும் கண்ணாடி

வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். வீட்டில் காற்றில் ஆடி ஒலிக்கும் மணிகளை தொங்கவிடலாம், இதனால் தீய எண்ணங்கள் பொறாமை எண்ணங்கள் கட்டுப்படுத்தப்படும்.

குடி தண்ணீர் கொடுங்கள்

குடி தண்ணீர் கொடுங்கள்

நம் வீட்டிற்கு வருபவர்கள் நம்முடைய வீட்டைப் பார்த்தோ அல்லது நம் வளர்ச்சியைப் பார்த்து பெருமூச்சு விட்டாலோ பொறாமைப்பட்டாலோ நமக்கு பாதிப்பு வரும். எனவே வீட்டிற்கு முதலில் யார் வந்தாலும் அவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுங்கள். இதன் மூலம் அவர்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதன் தாக்கம் அந்த இல்லத்தை பாதிக்காது.

கல் உப்பு

கல் உப்பு

வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம். கண் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் நிலைவாசல்படி அருகே வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை செய்வது நல்லது.

கல் உப்பு பரிகாரம்

கல் உப்பு பரிகாரம்

கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.

வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பரிகாரம் செய்யலாம். சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும் அமாவாசை பவுர்ணமி அஷ்டமி நவமி போன்ற நாட்களில் இந்த புகை போடலாம்.

துளசி

துளசி

விநாயகருக்கு சாற்றிய அருகம் புல் மாலையை உதிர்த்து அதை நன்றாக காய விட்டு வியாழன் அமாவாசை, பவுர்ணமி அன்று தூபம் போடா தீய சக்திகள் இருந்தால் விலகி ஓடும். தொட்ட சிணுங்கி , முடக்கத்தான் ,துளசி ,வில்வம், கத்தாழை போன்ற செடிகளை வீட்டு தோட்டத்தில் வளர்த்தால் கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகள் எளிதில் வீட்டிற்குள் வராது.

சாம்பிராணி புகை

சாம்பிராணி புகை

வெள்ளை மிளகு, வெண் கடுகு, காய்ந்த வில்வ இலைகள், பால் சாம்பிராணி, கடுக்காய், காய்ந்த வேப்ப இலை, மருதாணி விதைகள், மஞ்சள் இவற்றை கலந்து அமாவாசை, பவுர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் தூபம் போடலாம் தீய சக்திகள் அண்டாது அதே நேரம் குல தெய்வத்தின் அருளும் கிடைக்கும்.

கொப்பரை தேங்காயை துண்டுகளாகி அதை தூபமாக பெருமாளுக்கு காண்பிக்கலாம் பெருமாள் அருள் நீங்குவதோடு கருப்பசாமியின் அருள் கிடைக்கும்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
For removing drishti or evil eye buy one stainless steel vessel with lid. pour gingilly oil in it or ghee see in the oil your face and all the members.The camphor treatment. Other conditions are same. Here you take camphor which is not made into tablets.This is burned, ideally outside your residence, just in front of the entrance to your flat, home
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more