தீபாவளி திருநாளில் மகாலட்சுமி குபேரரை வணங்கினால் செல்வ வளம் பெருகும்
செல்வ வளம் தரும் ஸ்ரீலட்சுமி குபேரரை வெள்ளிக்கிழமை, பூசம் நக்ஷத்திரம் தரிசனம் செய்து வளம் பெறலாம். மேலும் நோய் நொடிகள் தீரும். தீபாவளியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் மாபெரும் லட்சுமி குபேரர் யாகம்
மதுரை: வரவு-செலவுக் கணக்கை, முறையாய் வைத்திருப்போர்க்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும். சிரிப்பவர்களைப் பார்த்தே செல்வ லட்சுமி வருகிறாள். தீபாவளி திருநாளில் லட்சுமி குபேரரை வணங்கினால் செல்வம் பெருகும்.
ஐப்பசி மாத அமாவாசை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 04.11.2018 ஞாயிற்றுக்கிழமை முதல் 07.11.2018 புதன்கிழமை வரை பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி மாபெரும் லக்ஷ்மி குபேர யாகம் நான்கு நாட்கள் ஸ்வாமிகளின் ஜெயந்தி விழாவாக நடைபெற உள்ளது.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப்போகும் என்பார்கள். அது நூறுசதவிகிதம் உண்மைதான். ஒருவரின் மனநிலைக்கும் அவரின் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
சிரித்தால் செல்வம் பெருகும்
மனத்தில் மகிழ்ச்சி குறையக்குறைய உடல் நலமும் பாதிக்கத் தொடங்கும். சிரிக்க சிரிக்க செல்வம் வரும் என்கின்றனர். எனவேதான் குபேரர் சிரித்த முகத்துடன் செல்வத்தை வாரி வழங்குகிறார். திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்துள்ளதாக புராணங்கள் கூறுகிறது.
ஸ்ரீ லட்சுமி குபேரன்
ஸ்ரீ லட்சுமி குபேரன் வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் லட்சுமி குபேரன் என்று அழைக்கப்படுகிறார். குபேர பூஜை குபேரனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கி அவரிடம் இருந்து யந்திரத்தை பெற்று அந்த யந்திரத்தை பயன்படுத்தி எளிய பூஜையை செய்ததால் நல்லது நடந்தது. சிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் அவனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு அவரவர் விதிப்பயனுக்கு ஏற்ப கொடுத்து வர கட்டளையிட்டார்.
அஷ்ட சக்திகள் தரும் மகாலட்சுமி
மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி எட்டு விதமான சக்திகளை பெற்றாள். தனம், தான்யம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற இவரது சக்திகள் அனைத்தையும் சங்க நிதி, பதும நிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்குப்பிள்ளையாக நியமித்துக் கொண்டார் குபேரன். அவர்கள் குபேரனின் இருபுறமும் அமர்ந்தனர்.
குபேரன் ஆட்சி
குபேரன் ஆட்சி குபேரன் அருளாட்சி நடத்த, அழகாபுரி என்ற பட்டினத்தை விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான். செல்வம் தரும் குபேரன் இவரது வலதுபுறத்தில் சங்க நிதியும், இடது புறத்தில் பத்ம நிதியும் அமர்ந்து இருப்பார்கள். சங்க நிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பார். இவரது கை வரத முத்திரை தாங்கி இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் ஆகும்
செல்வம் குவியும்
ஸ்ரீ லட்சுமி குபேரனை தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு ஆண்டு தோறும் அட்சய திதி, தீபாவளி, தை வெள்ளி போன்ற தினங்களில் லட்சுமி குபேர யாகம், மகாலட்சுமி யாகத்துடன் பிரார்த்தனை நடைபெறுகிறது. தற்பொழுது தீபாவளியை முன்னிட்டு வருகிற 04.11.2018 ஞாயிற்றுக்கிழமை முதல் 07.11.2018 புதன்கிழமை வரை, நான்கு நாட்கள் லட்சுமி குபேர யாகமும், சிறப்பு அபிஷேகமும், கனக புஷ்பார்ச்சனையும் காலை, மாலை இருவேளையும் நடைபெறுகிறது.
லட்சுமி குபேர யாகம்
செல்வ வளம் தரும் ஸ்ரீலட்சுமி குபேரரை வெள்ளிக்கிழமை, பூசம் நக்ஷத்திரம் தரிசனம் செய்து வளம் பெறலாம். மேலும் நோய் நொடிகள் தீரும் இந்த ஆலயத்தில் நோய் நொடி தீர்க்கும் ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி சமேத தன்வந்திரி பெருமாள் அருளாசியுடன் சொர்ண கணபதி யாகம்,லக்ஷ்மி ஹோமம், லட்சுமி நாராயண ஹோமம், லக்ஷ்மிகுபேர ஹோமம், சுக்கிர கிரஹ ஷாந்தி ஹோமம், அஷ்ட லக்ஷ்மி யாகம், மஹாலக்ஷ்மி யாகம், பஞ்சசூக்த ஹோமம், லக்ஷ்மி வராக ஹோமம், சோடச லக்ஷ்மி யாகம் என பல யாகங்களும், ஹோமங்களும் இதனுடன் நடைபெறுகிறது. தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications